தமிழ் - தமிழ் அகரமுதலி - கைதட்டுதல் முதல் - கைப்பட்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கைதொடல் | உண்ணுதல் ; உணவு ; கலியாணம் . |
| கைதொடன் | உதவிசெய்வோன் ; புத்தி பூர்வமாக ஒன்றைச் செய்வோன் . |
| கைதொடுத்தல் | திருமணஞ் செய்துவைத்தல் . |
| கைதொடுதல் | பரிசித்தல் ; சூளுரைத்தல் ; உண்ணுதல் ; தொடங்குதல் ; மணஞ்செய்தல் . |
| கைதொடுமானம் | உதவி . |
| கைதொழுதல் | கையினாற் கும்பிடல் , வணங்குதல் ; கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல் . |
| கைதோய்வு | கையால் எட்டிப்பிடிக்கும் நிலை . |
| கைந்தலை | கைம்பெண் . |
| கைந்நவிலாளர் | கையால் தொழில் செய்யப்பழகியவர் . |
| கைந்நாகம் | யானை . |
| கைந்நிதானம் | கையால் எடை முதலியவற்றை மதிப்பிடுகை . |
| கைந்நிறுத்துதல் | நிலைநிறுத்துதல் ; அடக்குதல் . |
| கைந்நீட்டு | கைப்பிடி ; கையை நீட்டுகை . |
| கைந்நீவுதல் | அவமதித்துக் கடத்தல் . |
| கைந்நூல் | கையிற் கட்டும் காப்புநாண் . |
| கைந்நொடி | கையை நொடிக்கும் நேரவளவு . |
| கைந்நொடித்தல் | விரலை நொடித்தல் , விரலைச் சொடுக்கி ஒலியுண்டாக்குதல் . |
| கைநடுக்கம் | மூப்பு , அச்சம் முதலியவற்றால் கைநடுங்குகை . |
| கைநனைத்தல் | பிறர் வீட்டில் உணவு கொள்ளுதல் . |
| கைநாட்டு | படியாதவர்கள் கையெழுத்துக்குப் பதிலாக இடும் கைக்கீறல் , தற்குறிக் கீறல் ; கையெழுத்து . |
| கைநாட்டுதல் | கையெழுத்திடுதல் . |
| கைநிரை | நிரைச்சல் . |
| கைநிலை | வீரர்கள் தங்குவதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை . |
| கைநிறை | கையால் தூக்கி மதிக்கும் எடை . |
| கைநீட்டுதல் | இரத்தல் ; திருடுதல் ; அடிக்கக் கையோங்குதல் ; இழவு விசாரித்தல் . |
| கைநீளம் | தாராளம் ; திருடுங்குணம் ; அடிக்குங்குணம் . |
| கைநுணுக்கம் | அழகான வேலைப்பாடு ; இவறல் . |
| கைநெகிழ்தல் | கைதவறவிடுதல் . |
| கைநெரித்தல் | துக்கம் , அச்சம் முதலியவற்றால் கையை நெரித்தல் . |
| கைநெல்லி | உள்ளங்கை நெல்லிக்கனி . |
| கைநொடித்தல் | கைவிரலால் ஒலி உண்டாக்குதல் ; செல்வநிலைமை கெடுதல் . |
| கைநோட்டம் | கையினாற் குறிப்பிக்குஞ் சாடை ; கைவேலைத்திறம் ; கையால் கணிக்கும் மதிப்பு . |
| கைப்பக்கம் | அருகில் . |
| கைப்பகர்ப்பு | அனுமதியின்றிப் பெற்றுக் கொண்டபடி . |
| கைப்பட்டை | தோட்பட்டை ; கைப்பலகை ; கைமரம் தாங்கும் சட்டம் ; நீர் முகக்குஞ் சிறுபட்டை . |
| கைதைச்சுரிகையன் | தாழையை வாளாக உடைய மன்மதன் . |
| கைதட்டுதல் | நகைப்பு , வெறுப்பு , வியப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல் ; கையடித்தல் ; கைதப்புதல் ; பூப்பெய்துதல் . |
| கைதப்புதல் | கைதவறிப்போதல் ; இலக்குத் தவறுதல் . |
| கைதரல் | உதவிசெய்தல் ; உறுதிசெய்தல் ; மணம்புரிதல் ; மிகுதல் ; கைகூடுதல் . |
| கைதருதல் | உதவிசெய்தல் ; உறுதிசெய்தல் ; மணம்புரிதல் ; மிகுதல் ; கைகூடுதல் . |
| கைதல் | தாழை . |
| கைதலைவைத்தல் | பெருந்துன்பமடைதல் . |
| கைதவம் | கபடம் ; துன்பம் ; பொய் . |
| கைதவறுதல் | கைப்பிழையாதல் ; தொலைந்துபோதல் ; கைதப்புதல் ; இறத்தல் . |
| கைதவன் | பாண்டியன் ; வஞ்சகன் . |
| கைதழுவுதல் | கைகோத்தல் . |
| கைதளர்தல் | சோர்தல் ; வறுமையுறுதல் . |
| கைதாங்குதல் | உடல்வலியற்றவருக்குக் கைகொடுத்து உதவுதல் ; அழிவெய்தாமற் காத்தல் . |
| கைதி | சிறைப்பட்ட குற்றவாளி . |
| கைதிட்டம் | திருந்திய அலங்காரம் ; கைமதிப்பு ; அறுதியிட்ட கையிருப்புத் தொகை . |
| கைது | சிறைக்காவல் . |
| கைதுசெய்தல் | சிறைப்படுத்துதல் . |
| கைதுடைத்தல் | விட்டொழிதல் . |
| கைதூக்கிவிடுதல் | வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் . |
| கைதூக்குதல் | வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; உடன்பட்டதற்குக் குறியாகக் கையை உயர்த்துதல் . |
| கைதூவல் | கையொழிதல் . |
| கைதூவாமை | கையொழியாமை . |
| கைதூவு | செயலற்றிருக்கை . |
| கைதூவுதல் | கைவேலை நீங்குதல் ; செயலற்றிருத்தல் . |
| கைதேர்தல் | திறமையடைதல் . |
| கைதை | தாழை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 375 | 376 | 377 | 378 | 379 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைதட்டுதல் முதல் - கைப்பட்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கையால், கையை, காத்தல், கைதப்புதல், தாழை, கைகூடுதல், வறுமையால், வருந்துவோர், நீரில், முதலியோரைக், மிகுதல், அழுந்துவோர், உதவிசெய்தல், உயர்த்துதல், கையினாற், உணவு, அச்சம், முதலியவற்றால், உறுதிசெய்தல், உண்ணுதல், குறியாகக், மணம்புரிதல்

