முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஏற்றுத்தொழில் முதல் - ஏறுதுறை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏற்றுத்தொழில் முதல் - ஏறுதுறை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏறுகோட்பறை | முல்லைநிலப் பறை , முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை . |
| ஏறுகோள் | ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல் ; காண்க : ஏறுகோட்பறை . |
| ஏறுசலாகை | கைம்மரங் கோக்குஞ் சட்டம் . |
| ஏறுசெடி | அடர்ந்த செடி . |
| ஏறுசேவகன் | உயர்ந்த வீரன் . |
| ஏறுண்ணுதல் | அறுக்கப்படுதல் ; அம்பு தைக்கப்படுதல் ; தள்ளப்படுதல் . |
| ஏறுதல் | உயர்தல் , மேலே செல்லுதல் ; உட்செல்லுதல் ; முற்றுப்பெறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; பரவுதல் ; ஆவேசித்தல் ; குடியேறுதல் ; ஏற்றிவைக்கப்படுதல் ; கடத்தல் . |
| ஏறுதழுவுதல் | ஏறு தழுவுதல் ; ஆயர்குலக் காளையர் மணமுடிக்கும் பொருட்டு எருதைத் தழுவிப் பிடித்தல் . |
| ஏறுதுறை | காண்க : ஏற்றுதுறை . |
| ஏற்றுத்தொழில் | யானை முதலியவற்றை நடத்துந்தொழில் . |
| ஏற்றுதல் | தூக்குதல் ; மிகுதிப்படுத்துதல் ; சுமத்துதல் ; ஏறச்செய்தல் ; அடுக்குதல் ; மேம்படுத்துதல் ; குடியேற்றுதல் ; ஏற்படுத்துதல் ; உட்செலுத்துதல் ; உயர்த்துதல் ; ஏற்றுமதி செய்தல் ; நினைத்தல் ; ஒருங்குமுடித்தல் ; சுடர் கொளுத்துதல் . |
| ஏற்றுதுறை | துறைமுகம் , கப்பலில் சரக்கு ஏற்றும் துறை . |
| ஏற்றுப்பனை | காண்க : ஏற்றைப்பனை . |
| ஏற்றுமதி | கப்பலிற் பண்டமேற்றுகை ; வெளிநாட்டுக்குச் சரக்கை அனுப்புதல் ; வெளிநாட்டுக்கு அனுப்பும் சரக்கு . |
| ஏற்றுமுதல் | தோணி முதலியவற்றில் ஏற்றப்படும் சரக்கு . |
| ஏற்றுவாகனன் | காளையை ஊர்தியாகவுடைய சிவன் . |
| ஏற்றூண் | இரந்துண்ணுமுணவு , பிச்சையுணவு . |
| ஏற்றெழுதல் | மயக்கம் தீர்தல் ; துயிலினின்றெழுதல் ; சோம்பல்விட்டெழுதல் ; ஓங்கி எழும்புதல் ; மேற்செல்லுதல் . |
| ஏற்றை | விலங்கின் ஆண் , ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு ; அரியேறு ; ஆண் கரடி . |
| ஏற்றைப்பனை | ஆண்பனை . |
| ஏற | அதிகமாக , மிகுதியாக ; உயர ; முழுவதும் ; முற்பட . |
| ஏறக்கட்டுதல் | உயரக்கட்டுதல் ; பலப்படுத்துதல் ; விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல் ; மழை முதலியன பெய்யாதிருத்தல் ; இறைந்த தவசம் முதலியவற்றைக் கூட்டிச் சேர்த்தல் ; அடியோடு நிறுத்துதல் . |
| ஏறக்குறைய | ஏறத்தாழ , முன்பின்னாக , சுமார் , முன்பின் . |
| ஏறங்கோட்பறை | காணக ; ஏறுகோட்பறை . |
| ஏறங்கோள் | காண்க : ஏறுகோட்பறை . |
| ஏறடுதல் | மேல்வைத்தல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் . |
| ஏறத்தாழ | காணக ; ஏறக்குறைய . |
| ஏறப்பறத்தல் | உயரப் பறத்தல் ; ஏலாதவற்றைச் செய்ய முயலுதல் . |
| ஏறப்போதல் | குறித்துச் செல்லுதல் , குறித்துப் போதல் . |
| ஏறவாங்குதல் | முழுவது விலைக்குப் பெறுதல் ; விலகியிருத்தல் ; நயமாக வாங்குதல் ; சுளுக்குதல் . |
| ஏறவிடுதல் | மேலே ஏறும்படி விடுதல் ; மரக்கலத்தைக் கரைக்குத் தொலைவாக விடுதல் ; மேற்போகவிடுதல் . |
| ஏறவிறங்கப் பார்த்தல் | தலைமுதல் கால்வரை பார்த்தல் , மேலும் கீழும் பார்த்தல் . |
| ஏறன் | சிவன் . |
| ஏறாங்கடை | ஒவ்வாச் செயல் . |
| ஏறாங்கடைசி | அறமுடிவு . |
| ஏறாண்முல்லை | ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை . |
| ஏறாந்தலை | ஏரியில் நீர்ப்பிடி இறுதி . |
| ஏறாவழக்கு | அறாவழக்கு , அடா வழக்கு . |
| ஏறாவேணி | கோக்காலி , ஒருவகைப் பரண் . |
| ஏறாளர் | படைவீரர் . |
| ஏறான் | பள்ளிக்கூடத்துக்கு முதன்முதல் வருபவன் . |
| ஏறிட்டுப்பார்த்தல் | நிமிரிந்து பார்த்தல் ; உற்று நோக்கல் , கவனித்தல் . |
| ஏறிடுதல் | ஏற்றுதல் ; நாணேற்றுதல் ; உயர்த்துதல் ; தூக்குதல் ; புகப்பண்ணுதல் . |
| ஏறியவீரி | சவ்வீர பாடாணம் . |
| ஏறு | எருது ; இடபராசி ; எருமைக்கடா ; சங்கு ; அசுவினி நட்சத்திரம் ; விலங்கின் ஆண் ; உயர்ச்சி ; ஆண் சுறா ; ஆண்சங்கு ; பனை முதலிய மரத்தின் ஆண் ; கவரி ; பன்றி , மான் இவற்றின் ஆண் ; விலங்கேற்றின் பொது ; நந்திதேவர் ; தழும்பு . |
| ஏறு | (வி) இவர் ; எறி ; அடி ; அழி ; வாகனமேறு ; கப்பலேறு ; நஞ்சேறு ; உயர் ; தொகை முதலியன அதிகரி . |
| ஏறுக்குமாறு | ஏட்டிக்குப்போட்டி , தாறுமாறு . |
| ஏறுகடை | கடைசி முடிவு . |
| ஏறுகுதிரை | ஏறுங்குதிரை , சவாரிக்குதிரை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 212 | 213 | 214 | 215 | 216 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏற்றுத்தொழில் முதல் - ஏறுதுறை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஏறுகோட்பறை, பார்த்தல், காண்க, பொருட்டு, சரக்கு, விலங்கின், சிவன், முதலியன, ஏறத்தாழ, விடுதல், காணக, சரக்கை, ஏறக்குறைய, ஏற்றுமதி, செல்லுதல், மேலே, ஏறுதழுவுதல், ஏற்றுதுறை, ஏற்றுதல், உயர்த்துதல், தூக்குதல், ஏற்றைப்பனை

