முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஏழரையாண்டுச்சனி முதல் - ஏற்றுக்கொள்ளுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏழரையாண்டுச்சனி முதல் - ஏற்றுக்கொள்ளுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏழுலகம் | மேலேழுலகம் ; கீழேழுலகம் . |
| ஏழை | அறியாமை ; அறிவிலான்(ள்) ; வறியவன் ; பேதை ; பெண் . |
| ஏழைக்குறும்பு | வறுமையைக் காட்டி மோசஞ்செய்கை ; பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு . |
| ஏழைத்தன்மை | அறியாமையாகிய குணம் ; வறுமைநிலை . |
| ஏழைமை | அறியாமை , பேதைமை ; வறுமை . |
| ஏழைமைகாட்டுதல் | கோழைத்தனமாதல் . |
| ஏழையாளன் | வறுமையுடையான் . |
| ஏழொத்து | தாளவகை . |
| ஏளனம் | எளிமை ; இகழ்ச்சி ; கேலி ; அவமதிச் சிரிப்பு ; பரிகாசம் . |
| ஏளிதம் | எளிமை ; இகழ்ச்சி ; கேலி ; அவமதிச் சிரிப்பு ; பரிகாசம் . |
| ஏற்க | பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே . |
| ஏற்கவே | பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே . |
| ஏற்கெனவே | ஏற்கவே , முன்னமே . |
| ஏற்ப | தக்கபடி , பொருந்த ; ஓர் உவமவுருபு . |
| ஏற்படுத்துதல் | உண்டுபண்ணுதல் ; இணங்கச் செய்தல் ; உறுதிப்படுத்துதல் ; ஆயத்தப் படுத்துதல் ; அமர்த்துதல் . |
| ஏற்படுதல் | உண்டாதல் ; தலைப்படுதல் ; உடன்படுதல் . |
| ஏற்பாடு | ஒழுங்கு ; நியமனம் ; உடன்படிக்கை ; விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள் . |
| ஏற்பு | பொருத்தம் , தகுதி ; ஏற்றுக்கொள்கை . |
| ஏற்புடைக்கடவுள் | ஒரு நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் ; வழிபடுகடவுள் . |
| ஏற்புழி | ஏற்குமிடத்து . |
| ஏற்புழிக்கோடல் | நூல் உத்திகளுள் ஒன்று , ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை . |
| ஏற்போன் | இரப்பவன் , யாசிப்பவன் . |
| ஏற்றக்கால் | துலாவைத் தாங்குங்கால் ; தூண் . |
| ஏற்றக்குறைச்சல் | உயர்வு தாழ்வு ; ஒவ்வாமை . |
| ஏற்றக்கோல் | துலாமரத்தில் நீர் முகக்கும் கழி . |
| ஏற்றச்சால் | துலாச் சால் , நீரிறைக்குஞ் சால் , நீர் மொள்ளும் பாத்திரம் . |
| ஏற்றணை | அரியணை ; அரசுகட்டில் . |
| ஏற்றத்தாழ்ச்சி | உயர்வுதாழ்வு , வேற்றுமை ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் . |
| ஏற்றத்தாழ்வு | உயர்வுதாழ்வு , வேற்றுமை ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் . |
| ஏற்றது | இயன்றது ; பொருந்தியது ; விருப்பமானது ; தக்கது . |
| ஏற்றப்பட்டரை | ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழந்த விளைநிலம் . |
| ஏற்றப்பாட்டு | நீரிறைக்கும்போது பாடும் பாட்டு . |
| ஏற்றபடி | இசைந்தவாறு , விரும்பியவாறு ; தக்கவாறு . |
| ஏற்றம் | மேலே ஏறுகை ; மேடு ; புகழ் ; உயர்ச்சி ; மிகுதி ; மேன்மை ; நினைவு ; துணிவு ; பெருக்கம் ; நீரேற்றம் ; நீர்ப்பெருக்கு ; ஏற்றமரம் ; நீரிறைக்குங் கருவி . |
| ஏற்றம்போடுதல் | துலாமரம் அமைத்தல் ; தோப்புக்கரணம் போடுதல் . |
| ஏற்றமரம் | துலா மரம் . |
| ஏற்றரவு | மிகக் கிட்டின காலம் ; முதல் . |
| ஏற்றல் | இசைவாதல் ; இணங்கல் ; ஏற்றுதல் ; இரத்தல் ; எதிர்த்தல் ; எதிர்த்துப் போர் செய்தல் ; அடுக்கல் ; வாங்குதல் ; ஏந்தல் ; நடத்தல் ; பெருந்தச்செய்தல் . |
| ஏற்றவாறு | காண்க : ஏற்றபடி . |
| ஏற்றார் | பகைவர் . |
| ஏற்றியல் | ஏறுதலின் இயல்பு ; இடபராசி . |
| ஏற்றியிறக்குதல் | கண்ணூறு கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை . |
| எற்றிழிவு | உயர்வுதாழ்வு ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் . |
| ஏற்று | மரத்தினாற் செய்த மேடை . |
| ஏற்று | (வி) எழும்பு ; உணர்த்து ; பாரமேற்று ; உள்ளேற்று ; கற்பி ; புகழ் . |
| ஏற்றுக்கொள்ளுதல் | ஒப்புக்கொள்ளுதல் ; உடன்படுதல் , அங்கீகரித்தல் ; மேற்கொள்ளுதல் . |
| ஏழரையாண்டுச்சனி | சந்திர லக்கினத்தில் 12 , 1 , 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து துன்பம் செய்யும் சனி . |
| ஏழாங்கால் | கலியாணத்துக்கு ஏழு நாளைக்கு முன் நடும் பந்தற்கால் . |
| ஏழாநீர்ச்சடங்கு | திருமணமான ஏழாம் நாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகும் சடங்கு . |
| ஏழாம்பொருத்தம் | தீராப்பகைமை , ஓயாச் சண்டை . |
| ஏழிசை | காண்க : ஏழ்நரம்பு . |
| ஏழிசைவாணர் | கந்தருவர் ; இசை பாடுவோர் . |
| ஏழில் | ஏழிலைப்பாலை , இசை ; நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை . |
| ஏழிலைக்கிழங்கு | மரவள்ளிக்கிழங்கு . |
| ஏழிலைப்பாலை | மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று , இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம் . |
| ஏழிலைம்பாலை | மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று , இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம் . |
| ஏழு | ஓர் எண் . |
| ஏழுநரகம் | காண்க : எழுநரகம் . |
| ஏழுபெண்பருவம் | காண்க : எழுவகைப் பெண்பருவம் . |
| ஏழுமலை | ஏழு மலைக் கூட்டங்களுடைய திருவேங்கடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 211 | 212 | 213 | 214 | 215 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழரையாண்டுச்சனி முதல் - ஏற்றுக்கொள்ளுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொருந்த, மரம், பெருமை, முன்னமே, ஒன்று, உயர்வுதாழ்வு, சிறுமை, மேடுபள்ளம், ஏற்றபடி, ஏற்றமரம், புகழ், ஏற்று, மணம், களிறுகளுக்கு, ஆகாதாம், இதன், பத்தனுள், ஏழிலைப்பாலை, மகளிரால், மலரும், சடங்கு, சால், அவமதிச், சிரிப்பு, பரிகாசம், கேலி, இகழ்ச்சி, செய்யும், எளிமை, இணங்க, இசைவாயிருக்க, உடன்படுதல், நீர், அறியாமை, செய்தல், ஏற்கவே, எதிர்க்க, பிச்சைவாங்க, வேற்றுமை

