தமிழ் - தமிழ் அகரமுதலி - உருத்திதம் முதல் - உருவசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உருபுமயக்கம் | ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது பிறிதொரு வேற்றுமை உருபின் பொருளைத் தந்து நிற்றல் ; ஒரு வேற்றுமைக்குள் ஓர் உருபு அவ் வேற்றுமைக்குரிய வேறோர் உருபோடு மயங்குகை . |
| உரும் | இடி ; அச்சம் . |
| உரும்பரம் | செம்பு ; பெருங்காயம் ; பாம்பு . |
| உரும்பு | கொடுமை ; கொதிப்பு . |
| உருமகாலம் | கோடைக்காலம் . |
| உருமணி | கருவிழி . |
| உருமம் | வெப்பம் ; உச்சிவேளை ; நடுப்பகல் . |
| உருமலைவாரி | உலோக மணல் . |
| உருமவிடுதி | நண்பகலில் வேலை நிறுத்துதல் . |
| உருமாறுதல் | வேற்றுருக் கொள்ளுதல் ; உடல் வேறுபடுகை ; தோற்றம் வேறாதல் . |
| உருமானம் | உருவம் ; முற்றினது |
| உருமித்தல் | வெப்பங்கொள்ளல் ; வெப்பமாதல் . |
| உருமு | காண்க : உரும் ; இந்திரனது கொடி ; புலி உறுமுதல் . |
| உருமுதல் | முழங்குதல் ; முறுமுறுத்தல் ; இரைதல் ; குமுறல் . |
| உருமேறு | இடியேறு , பேரிடி . |
| உருமேனி | மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் இவற்றையுடைய வடிவம் ; இறைவன் உயிர்கள் காணும்படி எடுக்கும் வடிவம் . |
| உருவ | நன்றாக ; திரும்பத் திரும்ப . |
| உருவகப்படுத்துதல் | உவமேயத்தை உவமானத்தோடு வேற்றுமையின்றிக் கூறல் . |
| உருவகம் | உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி . |
| உருவகணி | உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி . |
| உருவகித்தல் | உருவகப்படுத்துதல் . |
| உருவங்காட்டி | காண்க : உருக்காட்டி . |
| உருவசாத்திரம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; உறுப்பமைதிநூல் , உறுப்பமைதியால் உளதாகும் உயர்விழிவுகளைக் கூறும் நூல் . |
| உருவசி | உருப்பசி , ஊர்வசி , தேவருலக நடன மாதருள் ஒருத்தி . |
| உருத்திதம் | உரிய பொருள் ; தொழிலில் இலாபம் ; ஊதியம் ; வட்டி ; வளர்ச்சி ; முன்னேற்றம் ; வளர்தல் . |
| உருத்திரகணம் | சிவகணம் ; சிவனடியார் . |
| உருத்திரகணிகை | தேவரடியார் |
| உருத்திரசடை | திருநீற்றுப்பச்சை ; சிவதுளசிப்பூண்டு . |
| உருத்திரசாதனம் | உருத்திராக்கமாகிய சிவசின்னம் . |
| உருத்திரபஞ்சமம் | ஒரு பண்வகை . |
| உருத்திரபூமி | சுடுகாடு ; மயானம் . |
| உருத்திரம் | பெருஞ்சினம் ; வெகுளிச் சுவை ; சீருத்திரம் என்னும் ஒரு மந்திரம் ; மஞ்சள் |
| உருத்திரமணி | காண்க : அக்கமணி |
| உருத்திரர் பதினொருவர் | அரன் ; மாதேவன் ; உருத்திரன் ; சங்கரன் ; நீலலோகிதன் ; ஈசானன் ; விசயன் ; வீமதேவன் ; பவோற்பவன் ; கபாலி ; சௌமியன் என்போர் . |
| உருத்திரரோகம் | மாரடைப்பு . |
| உருத்திரவீணை | யாழ்வகை . |
| உருத்திரன் | சிவன் ; பதினோர் உருத்திரர்களுள் ஒருவன் ; சிவகணத்தோன் ; சிவகுமாரன் ; அக்கினிதேவன் . |
| உருத்திராக்கம் | உருத்திராக்க மரத்தின் மணி ; மரவகை . |
| உருத்திராகாரம் | பெருஞ்சினத்தோற்றம் . |
| உருத்திராட்சம் | ஒரு மரம் ; உருத்திராட்ச மரத்தின் காய் ; சிவசின்னமாகிய உருத்திராக்க மணி . |
| உருத்திராணி | ஏழு மாதருள் ஒருத்தி ; உருத்திரை ; துர்க்கை ; பார்வதி . |
| உருத்திரிதல் | உருமாருதல் ; மாறுவேடங்கொள்ளுதல் ; வடிவம் மாறுபடுதல் . |
| உருத்திரை | உருத்திராணி ; உமை ; பார்வதி . |
| உருத்திரோற்காரி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தேழாம் ஆண்டு . |
| உருது | சேனை ; பாசறை ; வட இந்திய மொழிகளுள் ஒன்று . |
| உருநாட்டு | சித்திரம் ; தெய்வத் திருமேனி . |
| உருப்பசி | உமை ; ஊர்வசி ; தெய்வப் பெண்டிருள் ஒருத்தி . |
| உருப்படி | கணக்கிடக்கூடிய பொருள் ; பொருள் ; இசைப் பாட்டு . |
| உருப்படியாதல் | உருவாதல் , சீர்ப்படுதல் . |
| உருப்படுதல | உருவாதல் , சீர்ப்படுதல் . |
| உருப்பம் | சினம் ; வெப்பம் ; மிகுதி ; தினைமா . |
| உருப்பாத்தி | கடல்மீன்வகை . |
| உருப்பிடித்தல் | படம் பிடித்தல் . |
| உருப்பிணி | உருக்குமிணி . |
| உருப்பிரமம் | ஆட்டுக்கொம்பு . |
| உருப்பு | வெப்பம் ; சினம் ; கொடுமை ; மிகுதி . |
| உருப்போடுதல் | மனப்பாடஞ் செய்தல் ; மந்திரஞ் செபித்தல் . |
| உருபகதீவகம் | ஓர் அணிவகை . |
| உருபா | ரூபா ; நாணயமதிப்பு ; நூறு காசுகள் கொண்டது . |
| உருபு | வடிவம் ; நிறம் ; வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச்சொல் ; நோய் . |
| உருபு புணர்ச்சி | வேற்றுமையுருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் சேர்ந்து நிற்கும் நிலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 165 | 166 | 167 | 168 | 169 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருத்திதம் முதல் - உருவசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், வடிவம், உருபு, கூறும், ஒருத்தி, காண்க, வெப்பம், உருத்திரன், உருத்திராக்க, மரத்தின், மிகுதி, பார்வதி, சினம், சீர்ப்படுதல், உருவாதல், உருத்திரை, உருத்திராணி, ஒன்று, என்னும், கொடுமை, உரும், வேற்றுமை, உருவகப்படுத்துதல், உவமான, ஊர்வசி, உருப்பசி, ஒற்றுமைபடக், உவமேயங்களை, மாதருள்

