முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உரிமைசெய்தல் முதல் - உருத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உரிமைசெய்தல் முதல் - உருத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உருட்டுதல் | உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; உருண்டையாகச் செய்தல் ; வருத்துதல் ; இசை நரம்பை வருடுதல் ; மத்தளத்தை விரைவாக அடித்தல் ; கவறெறிதல் ; தருக்கம் பேசிப் பிதற்றல் ; புரட்டித் தள்ளல் ; மருட்டுதல் ; வெல்லுதல் . |
| உருட்டுவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று , உருட்டிச் சொல்லப்படும் அராகம் தொடுத்து வரும் சந்தம் . |
| உருடை | வண்டி . |
| உருண்டுபோதல் | சாதல் . |
| உருண்டை | உண்டை ; திரட்சி ; கவளம் . |
| உருத்தரித்தல் | வடிவங்கொள்ளல் . |
| உருத்தல் | மிகச் சினங்கொள்ளுதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் ; வெப்பமுறச் செய்தல் ; முதிர்தல் ; ஒத்தல் ; சுரத்தல் ; தோற்றுதல் ; முளைத்தல் . |
| உரிமைசெய்தல் | கடமை செலுத்தல் ; இறுதிக் கடன் செய்தல் , சாவுச்சடங்கு செய்தல் ; அடிமைத் தொழில் செய்தல் . |
| உரிமைப்பள்ளி | அந்தப்புரம் . |
| உரிமைப்பாடு | உரித்து ; உரிய கடமை . |
| உரிமைப்பிள்ளை | தத்தெடுத்த குழந்தை . |
| உரிமைப்பெண் | திருமணம் செய்வதற்கு உரிமையான பெண் , முறைப்பெண் . |
| உரிமைபாராட்டுதல் | பாத்தியதை கொண்டாடல் . |
| உரிமைமண் | சவக்குழியில் உரிமைக்காரர் போடும் மண் . |
| உரிமைமாணகர் | காண்க : உரிமைப்பள்ளி . |
| உரிமையாட்சி | முன்னோரால் வந்த பொருளைச் சுதந்தரமாகப் பெறுகை . |
| உரிமையிடம் | வீட்டில் மனைவி உறையுமிடம் . |
| உரிமையில் | காண்க : உரிமைப்பள்ளி . |
| உரிமைவழி | உரிமை காரணமாய் வருவது ; சம்பந்த முறை . |
| உரியசை | நேர்பு நிரைபு அசைகள் . |
| உரியவன் | இனத்தான் ; கணவன் ; உரிமையுள்ளவன் ; அதிகாரி . |
| உரியள் | மனைவி , உரிமையானவள் . |
| உரியன் | காண்க : உரியவன் . |
| உரியாள் | காண்க : உரியள் . |
| உரியியற்சொல் | இயற்சொல்லாய் வரும் உரிச்சொல் . |
| உரியோன் | உரியவன் ; கணவன் ; நண்பன் . |
| உரிவை | தோல் ; பட்டை ; மரவுரி ; உரிக்கை . |
| உரு | வடிவழகு ; தெய்வத் திருமேனி ; நிறம் ; அச்சம் ; அட்டை ; பலமுறை சொல்லுகை ; பருமை ; தோணி ; உடல் ; எலுமிச்சை ; இசைப்பாடல் ; நோய் ; உருவமுள்ளது ; உளியாற் செய்த சிற்ப வேலை ; தாலி முதலியவற்றில் கோக்கும் உரு ; தன்மை ; அகலம் . |
| உருக்கம் | அன்பு ; இரக்கம் ; மனநெகிழ்ச்சி ; உருகுகை . |
| உருக்கல் | இறந்த வீரனது உருச் செதுக்கிய கல் , நடுகல் ; கோயில் கட்டியவருடைய உரு . |
| உருக்கன் | உடம்பை வாட்டும் நோய் . |
| உருக்காங்கல் | உருகிப்போன செங்கல் . |
| உருக்காட்டி | கண்ணாடி . |
| உருக்காட்டுதல் | தோன்றுதல் ; உருவெளியாகத் தோன்றுதல் . |
| உருக்கிவார்த்தல் | உருக்கின உலோகங்களைக் கருவில் வார்த்தல் . |
| உருக்கு | எஃகு ; உருக்கின பொருள் . |
| உருக்கு | (வி) உருக்கு என்னும் ஏவல் ; தீயிற்கரை ; வாட்டு ; வருத்து ; அழி . |
| உருக்குத்தட்டார் | பொற்கொல்லர் . |
| உருக்குத்துதல் | உருவம் அமைய வார்ப்படம் செய்தல் ; அம்மை குத்துதல் . |
| உருக்குதல் | இளகி விழச்செய்தல் ; மனம் நெகிழ்த்துதல் ; மெலியச் செய்தல் ; அழித்தல் ; வருத்துதல் . |
| உருக்குமணல் | அயமணல் . |
| உருக்குமணி | காதணிவகை . |
| உருக்குமம் | உருக்கு , பொன் . |
| உருக்குருக்கு | கருப்பூரவகை . |
| உருக்குலைதல் | வடிவங்கெடுதல் , முன்னுருவம் மாறுதல் , உடம்பு மெலிதல் . |
| உருக்கொள்ளுதல் | வடிவமெடுத்தல் , கருவில் உருவாதல் ; வளர்ச்சியடைதல் ; ஆவேசம் கொள்ளல் . |
| உருகுதல் | இளகுதல் , மனநெகிழ்தல் , மெலிதல் . |
| உருகை | புல்லூரி ; அறுகம்புல் . |
| உருங்குதல் | உண்ணுதல் . |
| உருசகம் | மாதுளை ; கோரோசனை ; விளங்கம் ; சந்தவின்பம் ; கதிர் ; காந்தி ; உருசியாதனம் ; யோகாசன வகையுள் ஒன்று . |
| உருசி | சுவை ; இன்சுவை ; இனிமை ; விருப்பம் . |
| உருசு | சான்று , ஆதாரம் . |
| உருசை | சுவை . |
| உருட்சி | உருளுகை , திரட்சி . |
| உருட்டித்தைத்தல் | துணியைச் சுருட்டித் தைத்தல் . |
| உருட்டிப்பார்த்தல் | சினக் குறிப்புடன் பார்த்தல் . |
| உருட்டிப்போடுதல் | பேச்சால் மருட்டி வெல்லுதல் , அழித்துவிடுதல் ,சாகச் செய்தல் . |
| உருட்டு | திரட்சி ; சக்கரம் ; மோதிரவகை . |
| உருட்டு | (வி) புரட்டு ; வெருட்டு ; உருளச்செய் ; நரம்பை வருடு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 164 | 165 | 166 | 167 | 168 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உரிமைசெய்தல் முதல் - உருத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், காண்க, உருக்கு, உரிமைப்பள்ளி, உரியவன், திரட்சி, ஒன்று, உருக்கின, தோன்றுதல், உருட்டு, சுவை, கருவில், மெலிதல், நோய், மனைவி, நரம்பை, வருத்துதல், வெல்லுதல், வரும், கணவன், கடமை, உரியள்

