முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஆற்றிடைக்குறை முதல் - ஆறாமீனறவோட்டு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆற்றிடைக்குறை முதல் - ஆறாமீனறவோட்டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆற்றுப்பித்தல் | ஆற்றோரம் . |
| ஆற்றுப்புரவு | ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் . |
| ஆற்றுப்பூத்தான் | காண்க : பூனைக்காலி . |
| ஆற்றுப்பூவரசு | மரவகை . |
| ஆற்றுப்பொடி | ஆற்றிலுள்ள சிறுமீன் . |
| ஆற்றுமரி | நீருமரிச்செடி ; காண்க : ஆற்றுக்கொடி . |
| ஆற்றுமல்லிகை | நீர்ப்பூடுவகை . |
| ஆற்றுமுள்ளங்கி | முள்ளங்கிவகை . |
| ஆற்றுமுள்ளி | காண்க : கண்டங்கத்தரி : கழுதை முள்ளி . |
| ஆற்றுமேலழகி | பூடுவகை . |
| ஆற்றுல்லம் | உல்ல மீன்வகை . |
| ஆற்றுவரி | ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் . |
| ஆற்றுவாய்முகம் | ஆறு கடலொடு கலக்குமிடம் . |
| ஆற்றுவாளை | ஏரி வாளைமீன் . |
| ஆற்றுவைப்பு | ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் . |
| ஆற்றொழுக்கு | ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று . |
| ஆறக்கட்டுதல் | பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் . |
| ஆறகோரம் | கொன்றை . |
| ஆறங்கம் | வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு . |
| ஆறத்தணிய | காண்க : ஆறவமர . |
| ஆறதீகம் | கல்நார் . |
| ஆறப்போடுதல் | காலந்தாழ்த்தல் . |
| ஆறல்பீறல் | பயனற்றது . |
| ஆறலை | வழிப்பறி . |
| ஆறலைத்தல் | வழிப்பறி செய்தல் . |
| ஆறவமர | அமைதியாய் , நிதானமாக . |
| ஆறவிடுதல் | காணக : ஆறப்போடுதல் |
| ஆறறிவுயிர் | ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் . |
| ஆறன்மட்டம் | தாளவகை . |
| ஆறாட்டம் | நோயுற்றோர் படும் துயரம் . |
| ஆறாட்டு | தீர்த்தவாரித் திருவிழா . |
| ஆறாடி | நிலைகெட்டவன் . |
| ஆறாடுதல் | தீர்த்தவாரி மூழ்குதல் . |
| ஆறாதாரம் | உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை . |
| ஆறாதூறு | காண்க : அவதூறு . |
| ஆறாமீன் | கார்த்திகை . |
| ஆறாமீனறவோட்டு | கார்த்திகையில் சூரியன் புகும் காலம் . |
| ஆற்றிடைக்குறை | ஆற்றினிடையேயுள்ள திட்டு . |
| ஆற்றித்தேற்றுதல் | சமாதானப்படுத்துதல் . |
| ஆற்றிலுப்பை | மரவகை . |
| ஆற்றிறால் | இறால் மீன்வகை . |
| ஆற்றின்வித்து | கற்பூர சிலாசத்து . |
| ஆற்றுக்கால் | ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் . |
| ஆற்றுக்காலாட்டியார் | மருதநிலப் பெண்டிர் . |
| ஆற்றுக்காலேரி | ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி . |
| ஆற்றுக்கால் பாய்ச்சல் | ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் . |
| ஆற்றுக்குலை | ஆற்றின் கரை ; வரிவகை . |
| ஆற்றுக்கெண்டை | ஒருவகைச் சிறுமீன் . |
| ஆற்றுக்கொடி | பேய்க்கொம்மட்டி . |
| ஆற்றுச்சஞ்சலை | காண்க : மலைவட்டை . |
| ஆற்றுச்சவுக்கு | காண்க : கோடைச்சவுக்கு ; செடிவகை . |
| ஆற்றுச்செருப்படி | பூடுவகை . |
| ஆற்றுணா | கட்டுச்சோறு ; வழியுணவு . |
| ஆற்றுத்தும்மட்டி | காண்க : ஆற்றுக்கொடி . |
| ஆற்றுத்துவரை | செடிவகை . |
| ஆற்றுதல் | வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் . |
| ஆற்றுநீர் | செயல்புரிபவர் ; உதவி செய்வார் ; வன்மையுடையார் . |
| ஆற்றுநெட்டி | காண்க : நீர்ச்சுண்டி . |
| ஆற்றுப்பச்சை | நாகப்பச்சைக்கல் . |
| ஆற்றுப்படுகை | ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் . |
| ஆற்றுப்படுத்தல் | வழிச்செலுத்துதல் ; போக்குதல் . |
| ஆற்றுப்படை | பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை . |
| ஆற்றுப்பாசி | நீர்ப்பூடுவகை . |
| ஆற்றுப்பாட்டம் | வரிவகை . |
| ஆற்றுப்பாய்ச்சல் | காண்க : ஆற்றுக்கால் பாய்ச்சல் . |
| ஆற்றுப்பாய்ச்சி | ஆற்றில் கப்பல் செலுத்துவோன் . |
| ஆற்றுப்பாலை | மரவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆற்றிடைக்குறை முதல் - ஆறாமீனறவோட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆற்றுக்கால், ஆற்றின், ஆற்றிலிருந்து, ஆற்றுக்கொடி, மரவகை, தணித்தல், நிலம், கால்வாய், செடிவகை, முதலியன, வரிவகை, பாய்ச்சல், ஆறப்போடுதல், நீர்ப்பூடுவகை, சிறுமீன், பூடுவகை, மீன்வகை, வழிப்பறி, ஆறவமர, செய்தல்

