தமிழ் - தமிழ் அகரமுதலி - முரண்டு முதல் - முருந்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முரண்டு | பிடிவாதம் ; மாறுபாடு ; வளையாமை ; அமையாமை . |
| முரண்டொடை | தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது . |
| முரண்தொடை | தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது . |
| முரண்படுதல் | மாறுபடுதல் . |
| முரண்மொழி | எதிர்மொழி ; பொருள் மாறுபடும் சொல் ; செய்யுள் குற்றங்களுள் ஒன்று . |
| முரண்விளைந்தழிவணி | மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி . |
| முரணணி | சொல்லேனும் பொருளேனும் முரண்பட அமையும் ஓரணிவகை . |
| முரணர் | பகைவர் . |
| முரணுதல் | மாறுபடுதல் ; பெருக்குதல் ; வலிமை பெறுதல் . |
| முரப்பா | பாகில் ஊறவைத்த தின்பண்டம் . |
| முரப்பு | கைக்கு மென்மையில்லாமல் காணப்படும் தன்மை . |
| முரம்பு | பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம் ; மேடு ; பாறை ; வன்னிலம் ; கழி ; உப்பளம் . |
| முரமுரெனல் | நுரைத்தற்குறிப்பு ; வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு ; தூய்மையாயிருத்தற்குறிப்பு . |
| முரல் | ஒரு மீன்வகை . |
| முரல்வு | யாழின் மெல்லோசை . |
| முரலல் | ஒலித்தல் ; எடுத்தலோசை ; கலப்போசை . |
| முரலி | காண்க : முரளி . |
| முரலுதல் | ஒலித்தல் ; கதறுதல் ; பாடுதல் . |
| முரவம் | பறைவகை ; முழக்கம் . |
| முரவு | முரிவு ; பறைவகை . |
| முரவை | அரிசியிலுள்ள வரி . |
| முரள் | சிப்பிவகை . |
| முரளி | வேய்ங்குழல் ; மூக்கால் ஊதுங்குழல் . |
| முரற்கை | ஒலி ; கயிறு ; கலிப்பா ; தாளவகை . |
| முரற்சி | ஒலி ; பாட்டு ; கயிறு . |
| முரற்றுதல் | ஒலித்தல் ; கதறுதல் . |
| முரற்றுமம் | குடம் . |
| முரன்றுபாடுதல் | ஆலாபனஞ் செய்தல் . |
| முராந்தகன் | முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் . |
| முராரி | முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் . |
| முரி | துண்டு ; நொய்யரிசி ; முழுதிற் குறைவானது ; சிதைவு ; வளைவு ; இசைப்பாவில் இறுதிப்பகுதி ; நாடகத்தமிழின் இறதியில் வருஞ் சுரிதகம் ; பத்திரம் . |
| முரிகம் | மயிர்ப்படாம் . |
| முரித்தல் | ஒடித்தல் ; அழித்தல் ; தோல்வியுறச் செய்தல் ; நடத்துதல் . |
| முரிதல் | ஒடிதல் ; கெடுதல் ; சிதறுதல் ; தவறுதல் ; தோல்வியுறுதல் ; நீங்குதல் ; நிலைகெடுதல் ; குணங்கெடுதல் ; வளைதல் ; தளர்தல் . |
| முரிநிலை | இயற்பாவில் இறுதியிற் பாடுந் தரவு . |
| முரிப்பு | முரித்தல் ; எருத்துத் திமில் . |
| முரிமுரிதல் | வளைதலைச் செய்தல் . |
| முரியல் | துண்டு ; எளிதில் முரிவது . |
| முரிவரி | வரிப்பாட்டுவகை . |
| முரிவாய் | இடித்துண்டாக்கின வாசல் ; கன்னவாயில் ; முரிந்த குறடு . |
| முரிவு | ஒடிகை ; சுருக்குகை ; நீங்குகை ; வருத்தம் ; ஊழ் ; பெருமை ; மடிப்பு ; சோம்பு . |
| முருக்கு | எலுமிச்சைமரம் ; முள்முருக்கமரம் ; குருகு ; கொலை ; பலாசமரம் . |
| முருக்குதல் | அழித்தல் ; கொல்லுதல் ; முரித்தல் ; உருக்குதல் ; கரைத்தல் . |
| முருகக்கடவுள் | குமரக்கடவுள் . |
| முருகயர்தல் | முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல் ; வெறியாடுதல் ; விருந்திடலாகிய வேள்வி செய்தல் . |
| முருகவேள் | காண்க : முருகக்கடவுள் . |
| முருகன் | கட்டிளமையோன் ; குமரன் ; முருகக்கடவுள் ; வெறியாட்டாளன் ; பாலைநிலத்தலைவன் . |
| முருகனாடல் | துடி , குடை என்னும் இருவகைக் கூத்து . |
| முருகியம் | குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை . |
| முருகு | இளமை ; முருகன் ; மணம் ; அழகு ; தெய்வத்தன்மை ; வெறியாட்டு ; வேள்வி ; திருவிழா ; பூத்தட்டு ; தேன் ; கள் ; எலுமிச்சை ; எழுச்சி ; காண்க : அகில் ; திருமுருகாற்றுப்படை ; விறகு ; காதணியுள் ஒன்று . |
| முருகேசன் | குமரக்கடவுள் . |
| முருகை | ஒரு கல்வகை . |
| முருங்குதல் | அழிதல் ; முரிதல் ; அடங்கியெரிதல் . |
| முருங்கை | ஒரு மரவகை . |
| முருட்டுகையர் | அடங்கா ஒழுக்கமுள்ளவர் . |
| முருட்டுத்தன்மை | ஆராயாது செய்யுங் குணம் . |
| முருடன் | மூடன் ; முன்பின் யோசனையில்லாதவன் ; பிடிவாதமுள்ளவன் ; வேடன் ; நாகரிகமற்றவன் . |
| முருடு | கரடுமுரடு ; பிடிவாதம் ; கொடுமை ; மரக்கணு ; வெட்டிய மரத்தினடி ; விறகு ; மரக்கட்டை ; பறைப்பொது ; மத்தளவகை ; பத்தல் ; பருமை ; பெருங்குறடு . |
| முருந்தம் | இளந்தளிர் . |
| முருந்தன் | திறமையுள்ளவன் ; விளக்கமானவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 894 | 895 | 896 | 897 | 898 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முரண்டு முதல் - முருந்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், ஒலித்தல், காண்க, முருகக்கடவுள், முரித்தல், முருகன், வேள்வி, அசுரனைக், முரன், விறகு, கொன்ற, திருமால், முரிதல், அழித்தல், கயிறு, துண்டு, குமரக்கடவுள், பறைவகை, சொல்லாலும், பொருளாலும், ஐந்தனுள், தொடை, பிடிவாதம், மாறுபாடு, மறுதலைப்படப், பாட்டுத், கதறுதல், சொல், முரளி, ஒன்று, தொடுப்பது, மாறுபடுதல், முரிவு

