முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முத்துக்கற்கம் முதல் - முதல¦டு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முத்துக்கற்கம் முதல் - முதல¦டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முத்துக்கற்கம் | முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு ; முத்தைப் புடமிட்டுச் செய்யும் மருந்துவகை . |
| முத்துக்குடை | அருகனது மூன்று குடையுள் ஒன்று . |
| முத்துக்குமாரன் | முருகக்கடவுள் . |
| முத்துக்குளித்தல் | முத்தெடுக்கக் கடலில் மூழ்குதல் . |
| முத்துக்குறி | கையிலுள்ள முத்துகளைக் கணக்கிட்டுப் பலன் சொல்லும் குறி . |
| முத்துக்கொட்டை | ஆமணக்குவிதை . |
| முத்துக்கோவை | காண்க : முத்துமாலை . |
| முத்துச்சம்பா | ஒரு நெல்வகை . |
| முத்துச்சலாபம் | முத்துக்குளிக்கை ; முத்துக் குளிப்பில் அடையும் பேறு . |
| முத்துச்சிப்பி | முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி ; முத்துத் தங்கிய சிப்பியோடு . |
| முத்துச்சிவிகை | முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு . |
| முத்துச்சொரிதல் | அன்னம் படைத்தல் ; வேண்டுதலுக்காக நென்மணியைச் சொரிதல் . |
| முத்துத்தரியம் | முத்தினால் அலங்கரித்த மேலாடை . |
| முத்துத்தாமம் | காண்க : முத்துமாலை ; முத்துக்கோத்த தொங்கல் . |
| முத்துதல் | சேர்தல் ; முத்தமிடுதல் . |
| முத்துநீர் | பனிநீர்த் திவலை . |
| முத்துப்பந்தர் | முத்துமாலைகளால் அலங்கரித்த மேற்கட்டி அமைந்த பந்தல் . |
| முத்துப்புரி | முத்துக் கோத்த தொங்கல் . |
| முத்துப்போடுதல் | அம்மைநோயில் முத்துப்போடுதல் . |
| முத்துமணல் | மணல்போன்ற சிறிய முத்து . |
| முத்துமழை | பருவமழை . |
| முத்துமழைபெய்தல் | செல்வம் பொங்குதல் . |
| முத்துமாலை | முத்துக் கோத்த கழுத்தணி . |
| முத்துலையிடுதல் | ஒன்றுக்கு மூன்று கற்பித்தல் . |
| முத்துவடம் | காண்க : முத்துமாலை ; ஒரு புடைவைவகை . |
| முத்துவண்ணச்சேலை | முற்காலத்து வழங்கிய புடைவைவகை . |
| முத்துவர்ணம் | வெள்ளைநிறம் . |
| முத்துளம் | மூங்கில் . |
| முத்தெயில் | பழமையான மதில் . |
| முத்தேவர் | பிரமன் , சிவன் , திருமால் என்னும் மூவர் . |
| முத்தை | முன்னிடம் ; சோற்றுருண்டை ; திரட்சி ; பேதைப்பருவத்தாள் ; கோரைக்கிழங்கு . |
| முத்தையன் | முருகக்கடவுள் . |
| முத்தொழில் | படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் கடவுளின் மூவகைச் செயல்கள் . |
| முத்தொழிலர் | உழவு , வாணிகம் , ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்களையுடைய வணிகர் . |
| முத்தொழிற்பகவன் | கடவுள் . |
| முதம் | உவகை . |
| முதல் | ஆதி ; இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது ; காரணம் ; மூலகாரணனான கடவுள் ; முதலானவன் ; ஏற்றம் ; மூலதனம் ; வேர் ; கிழங்கு ; அடிப்பாகம் ; மரம் முதலியவற்றின் அடி ; இடம் ; அகப்பொருட்குரிய நிலம் ; பொழுதுகளின் இயல்பு ; பிண்டப்பொருள் ; செலவுக்காகச் சேமிக்கும் பொருள் ; இசைப்பாட்டுள் ஒன்று ; சொத்தின் கொள்முதல் விலை ; பன்னிரு உயிரெழுத்தும் பதினெட்டு மெய்யெழுத்தும் ; தொடக்கமாகவுடைய ; ஏழாம் வேற்றுமையுருபு ; ஐந்தாம் வேற்றுமையுருபு ; பத்திரம் . |
| முதல்மரியாதை | கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெறும் போற்றுகை . |
| முதல்முதல் | தொடக்கம் . |
| முதல்ரகம் | உயர்தரம் . |
| முதல்வஞ்சி | காண்க : முதுமொழிவஞ்சி . |
| முதல்வர் | வானோர் ; முதலாயினார் . |
| முதல்வன் | தலைவன் ; அரசன் ; எல்லாப் பொருட்கும் காரணனான கடவுள் ; தந்தை . |
| முதல்வன்வாக்கு | ஆகமம் . |
| முதல்வி | தலைவி . |
| முதல்வெண்குருத்து | முதலாவது தோன்றும் குருத்து . |
| முதலக்கரம் | காண்க : முதலெழுத்து . |
| முதலடி | தொடக்கம் ; ஆண்டின் முதல் விளைச்சல் . |
| முதலவன் | காண்க : முதல்வன் . |
| முதலற்றுப்போதல் | அடியோடழிதல் . |
| முதலாளி | மூலதனமுள்ளவன் ; தலைவன் ; சொந்தக்காரன் ; நிலமுடையவன் . |
| முதலான | தொடக்கமாகவுடைய . |
| முதலி | தலைவன் ; பெரியோன் ; ஒரு பட்டப்பெயர் ; தாழைமரம் ; சீமை இலுப்பை ; அரசாங்கத் தலைமை அதிகாரி ; தொடக்கமாகவுடைய . |
| முதலிய | காண்க : முதலான . |
| முதல¦டு | முதலில் இடுகை ; முதலில் இட்ட பொருள் ; ஆண்டின் முதல் அறுவடை ; வாணிக முதல் ; முதலிற் செலுத்துந் தொகை ; அசல்கடன் தொகைக்குப் பணம் செலுத்துகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 889 | 890 | 891 | 892 | 893 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்துக்கற்கம் முதல் - முதல¦டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முத்துமாலை, மூன்று, கடவுள், தொடக்கமாகவுடைய, தலைவன், முத்துக், முதலான, பொருள், முதலில், வேற்றுமையுருபு, முதலியவற்றில், முதல்வன், தொடக்கம், ஆண்டின், என்னும், படைத்தல், முருகக்கடவுள், ஒன்று, அலங்கரித்த, தொங்கல், புடைவைவகை, முத்துப்போடுதல், கோத்த, இடம்

