முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மிளகுசாறு முதல் - மீசுவைத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மிளகுசாறு முதல் - மீசுவைத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மிளகுசாறு | மிளகு அதிகம் சேர்த்த இரசம் . |
| மிளகுதண்ணீர் | மிளகு அதிகம் சேர்த்த இரசம் . |
| மிளகுதிரி | அம்மைவகை . |
| மிளகுதைலம் | மிளகு சேர்த்துச் செய்த தைலம் . |
| மிளகுபொடி | மிளகுதூள் ; மிளகும் சீரகமும் உப்பும் கலந்து சோற்றோடு உண்ண உதவும் பொடி . |
| மிளகுரசம் | காண்க : மிளகுசாறு . |
| மிளப்பு | இலவங்கம் . |
| மிளிர் | பெருமை ; ஒளி . |
| மிளிர்த்தல் | புரட்டுதல் ; கீழ்மேலாக்குதல் . |
| மிளிர்தல் | புரளுதல் ; கீழ்மேலாதல் ; குதித்தல் ; ஒளிசெய்தல் ; பெருமையடைதல் . |
| மிளிறு | கரடி . |
| மிளை | காவற்காடு ; குறுங்காடு ; சிறுதூறு ; காட்டுவேலி ; காவல் . |
| மிற்கு | இரை ; மென்மை ; பேசுதல் . |
| மிறல் | பெருமை . |
| மிறுக்கு | மிடுக்கு ; வருத்தம் . |
| மிறை | அச்சம் ; குற்றம் ; வருத்தம் ; வேதனை ; வளைவு ; அரசிறை . |
| மிறைக்கவி | காண்க : சித்திரகவி . |
| மிறைக்கொளிதிருத்துதல் | ஆயுதத்தின் வளைவுநீக்குதல் . |
| மிறைக்கொளுவுதல் | ஆயுதத்தின் வளைவுநீக்குதல் . |
| மிறைத்தல் | துன்புறுத்தல் ; விறைத்தல் ; மிடுக்காயிருத்தல் ; துன்பப்படல் ; பாடுபடல் . |
| மின் | மின்னல் ; ஒளி ; பெண் ; முன்னிலையேவற்பன்மை விகுதியுள் ஒன்று . |
| மின்சாரக்கம்பி | மின்னாற்றல் செல்லும் கம்பி . |
| மின்சாரம் | பொருளணுக்களின் அசைவால் ஏற்படும் ஒருவகையாற்றல் . |
| மின்சாரயந்திரம் | மின்னாற்றலை உண்டாக்கும் பொறி . |
| மின்சாரவண்டி | மின்னாற்றலால் இயங்கும் தொடர்வண்டி . |
| மின்மினி | ஒளிவீசும் ஒரு பூச்சிவகை . |
| மின்மினிப்பூச்சி | ஒளிவீசும் ஒரு பூச்சிவகை . |
| மின்மினிபறத்தல் | ஒளிமிகுதியால் கண்ணொளி மழுங்குதல் . |
| மின்விளக்கு | மின்னாற்றலால் ஒளிதரும் விளக்கு . |
| மின்வெட்டு | மின்னல் பாய்கை . |
| மின்னல் | மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி ; ஒளிமிக்க நாணயம் . |
| மின்னற்கொடி | மின்னலின் ஒளிவீச்சு . |
| மின்னார் | அழகிய பெண்டிர் . |
| மின்னி | நீர்ப்பயறு ; கருங்காக்கணம் . |
| மின்னுக்கொடி | காண்க : மின்னற்கொடி . |
| மின்னுதல் | மின்னல் ; ஒளிவீசுதல் . |
| மின்னெறிதல் | மின்னல் ; ஒளிவீசுதல் . |
| மினுக்கம் | காண்க : மினுக்கு . |
| மினுக்கி | தன்னை அழகுபடுத்துபவள் , பகட்டுபவள் . |
| மினுக்கு | ஒளி , சிறப்பு ; பகட்டு . |
| மினுக்குதல் | பளபளப்புண்டாக்குதல் ; பகட்டுதல் ; அரிசி தீட்டுதல் . |
| மினுக்குமினுக்கெனல் | விட்டுவிட்டு ஒளிவீசல் . |
| மினுக்கெண்ணெய் | உடலுக்குப் பளபளப்புண்டாக்கும் தைலவகை ; மரப்பொருள்களுக்குரிய பூச்செண்ணெய் . |
| மினுங்குதல் | ஒளிவீசுதல் ; விளக்கமாய்த் தோன்றுதல் . |
| மினுமினுத்தல் | ஒளிவீசல் ; ஒளிகுன்றுதல் . |
| மினுமினுப்பு | ஒளி . |
| மீ | ஒர் உயிர்மெய்யெழுத்து ( ம் + ஈ ) ; மேலிடம் ; உயரம் ; வானம் ; மேன்மை . |
| மீக்கட்டணம் | மேல்கட்டணம் ; மேல்வரி . |
| மீக்குணம் | பெருமிதமாய் நடக்குந்தன்மை . |
| மீக்குவம் | மருதமரம் . |
| மீக்கூர்தல் | மிகுதல் . |
| மீக்கூற்றம் | புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் . |
| மீக்கூற்று | புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் . |
| மீக்கூறல் | மேம்பாடு ; மிகுத்துக்கூறல் . |
| மீக்கூறு | புகழ் . |
| மீக்கூறுதல் | உயர்த்திக் கூறுதல் . |
| மீக்கொள்ளுதல் | உயர்தல் ; மிகுதல் ; மேலாக மதித்தல் ; மிகுதியாகக் கொள்ளுதல் ; மேலே தரித்தல் . |
| மீக்கோள் | ஏறுதல் ; மேல்தாங்குகை ; பொலிவு ; மேற்பார்வை . |
| மீகண் | கண்ணின் மேலிடம் ; மேலிடம் . |
| மீகாமன் | காண்க : மீகான் . |
| மீகாரம் | மாளிகையின் மேலிடம் . |
| மீகான் | மாலுமி . |
| மீகை | மேலெடுத்த கை ; கொடிவகை . |
| மீச்செலவு | நீதி தவறிய செயல் ; மேற்போதல் . |
| மீசரம் | மேலானது ; விரைவு ; மிகுதி . |
| மீசரன் | மேலானவன் . |
| மீசு | காண்க : மீது ; மிகுதி . |
| மீசுமீட்டல் | மேலாக எடுக்கை . |
| மீசுரம் | காண்க : மீசரம் ; மிகக் கடுமையானது . |
| மீசுவைத்தல் | மேலே வைக்கை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 877 | 878 | 879 | 880 | 881 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிளகுசாறு முதல் - மீசுவைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மின்னல், மேலிடம், மேலாக, புகழ், ஒளிவீசுதல், சொல், மிளகு, மினுக்கு, ஒளிவீசல், மதிக்கப்படுஞ், மிகுதி, மீசரம், மீகான், மேலே, மிகுதல், ஒளிவீசும், இரசம், சேர்த்த, அதிகம், மிளகுசாறு, பெருமை, வருத்தம், பூச்சிவகை, மின்னாற்றலால், வளைவுநீக்குதல், ஆயுதத்தின், மின்னற்கொடி

