முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மருந்துச்சரக்கு முதல் - மல்லம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மருந்துச்சரக்கு முதல் - மல்லம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மருந்துச்சரக்கு | மருந்து செய்ய உதவும் பண்டம் . |
| மருந்துச்சாலை | மருந்துச்சரக்கு விற்கும் கடை ; வெடிமருந்துக் கிடங்கு . |
| மருந்துபோடுதல் | காண்க : மருந்துவைத்தல் ; பூச்சிமருந்து தெளித்தல் . |
| மருந்துவைத்தல் | வசியமருந்திடுதல் . |
| மருந்தெண்ணெய் | மருந்துச்சரக்குகள் கூட்டிக் காய்ச்சிய தைலம் . |
| மருநிலம் | நீரும் நிழலுமற்ற நிலம் . |
| மருப்பு | விலங்கின் கொம்பு ; யானைத்தந்தம் ; யாழின் உறுப்புவகை ; மரக்கொம்பு ; பிறைச்சந்திரனின் இருகோடு ; இஞ்சி . |
| மருப்புத்தாடி | யானைத் தந்தத்தாற் செய்த விரலுறை . |
| மருபுகா | ஒரு வாழைவகை . |
| மருபூ | காண்க : மருநிலம் . |
| மருமக்கட்டாயம் | மலையாளத்தில் ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடையும் உரிமைமுறை . |
| மருமக்கள் | ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள் ; ஒருத்தியின் உடன்பிறந்தான் மக்கள் . |
| மருமகப்பிள்ளை | காண்க : மருகன் . |
| மருமகள் | மகன் மனைவி ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள் ; ஒருவனின் உடன்பிறந்தாள் மகள் . |
| மருமகன் | மகள் கணவன் ; ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன் . |
| மருமதாரை | உயிர்நிலை ; மார்பு . |
| மருமம் | காண்க : மருமதாரை ; விதைப்பை ; கமுக்கம் , இரகசியம் ; உடம்பு . |
| மருமராஞ்சம் | வில்லின் நாணொலி ; காற்றால் அசையுஞ் சீலையாலும் இலையாலும் எழும் ஒலி . |
| மருமாட்டி | வழித்தோன்றியவள் ; மருமகள் . |
| மருமான் | காண்க : மருமகன் ; வழித்தோன்றல் . |
| மருவகம் | காண்க : மருக்காரை ; மருக்கொழுந்து ; கடாரநாரத்தை . |
| மருவலர் | பகைவர் . |
| மருவலார் | பகைவர் . |
| மருவார் | பகைவர் . |
| மருவாளி | பச்சைக்கருப்பூரம் ; வைப்புச் சூடன் வகை . |
| மருவிதழ் | பூவிதழ் . |
| மருவீட்டுச்சடங்கு | திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு . |
| மருவீடு | திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு . |
| மருவு | மருவுகை ; மணம் ; மணச்செடிவகை ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து . |
| மருவுதல் | கலந்திருத்தல் ; வழக்கப்படுதல் ; தோன்றுதல் ; கிட்டுதல் ; தழூவுதல் ; பயிலுதல் ; புணர்தல் ; தியானித்தல் ; பதித்தல் . |
| மருள் | மயக்கம் ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; உன்மத்தம் ; கள் ; குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று ; பண்வகை ; எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை ; சிறு செடிவகை ; புதர் ; பேய் ; ஆவேசம் ; புல்லுரு . |
| மருள | ஓர் உவமஉருபு . |
| மருளல் | அஞ்சல் ; மயங்கல் ; எழுத்திலாவோசை ; பேசலால் எழும் ஒலி ; வியத்தல் ; ஒப்பாதல் . |
| மருளன் | அறிவுமயக்கமுள்ளவன் ; தெய்வமேறப் பெற்றவன் ; மதவெறிப்பிடித்தவன் . |
| மருளாளி | பேயாவேசங்கொண்டு குறி சொல்லும் பூசாரி ; ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன் . |
| மருளி | மயக்கம் ; புத்திமயக்கமுள்ளவன் . |
| மருளிந்தம் | ஒரு பண்வகை . |
| மருளிந்தராகம் | ஒரு பண்வகை . |
| மருளிந்தளம் | ஒரு பண்வகை . |
| மருளுதல் | மயங்குதல் ; வெருவுதல் ; வியத்தல் ; ஒப்பாதல் . |
| மருளூமத்தை | ஊமத்தைவகை . |
| மரூஉ | நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் . |
| மருஉமொழி | நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் . |
| மரை | ஒரு மான்வகை ; காட்டுப்பசு ; தவளை ; இரத்தினக்குற்றம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; தாமரை . |
| மரைக்காயர் | துருக்கரில் ஒருவகையார் . |
| மரைக்கிட்டி | வில்முடுக்கு . |
| மரைநீகம் | தவளை . |
| மரையா | காட்டுப்பசு . |
| மரையாடு | ஆட்டுவகை . |
| மரையான் | காண்க : மரையா . |
| மல் | வளம் ; வருவாய் ; வலிமை ; மல்தொழில் ; மற்போர் செய்பவன் ; திருமாலாடிய கூத்து ; பருமை ; காண்க : மல்லுச்சட்டம் ; துகில்வகை . |
| மல்காத்தல் | காண்க : மல்லாத்தல் . |
| மல்குதல் | நிறைதல் ; செழித்தல் ; அதிகமாதல் . |
| மல்லகசாலை | மல்வித்தை பயிலுமிடம் . |
| மல்லகதி | குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று . |
| மல்லசம் | மிளகு . |
| மல்லம் | மற்போர் ; மல்லகதி ; வலிமை ; கிண்ணம் ; தட்டம் ; கதுப்பு ; வேள்வியில் எஞ்சியது ; பள்ளியறை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 852 | 853 | 854 | 855 | 856 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருந்துச்சரக்கு முதல் - மல்லம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பண்வகை, உடன், ஒருத்தியின், ஒருவனின், சொல், மகன், மகள், பகைவர், இயல்புவழக்கு, வியத்தல், எட்டனுள், ஒன்று, மூன்றனுள், ஒப்பாதல், நட்பு, மருவி, மரையா, வலிமை, மற்போர், மல்லகதி, தவளை, காட்டுப்பசு, சிதைந்து, மயக்கம், வழங்கும், இலக்கணம், அல்லது, மக்கள், மருமகள், பிறந்தான், உடன்பிறந்தாள், மருநிலம், மருந்துச்சரக்கு, உதவும், மருந்துவைத்தல், மருமகன், மருமதாரை, பிள்ளைவீட்டுக்கு, அழைத்துச், செல்லுஞ், வீடு, பெண், எழும், திருமணத்திற்குப்பின், மணமக்களைப், சடங்கு

