தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆசானுபாகு முதல் - ஆசுரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆசியம் | வாய் ; முகம் ; சிரிப்பு ; முகத்திற்குரியது ; பரிகாசம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று . |
| ஆசிரமம் | முனிவர் உறைவிடம் ; பன்னசாலை ; வாழ்க்கைநிலை . |
| ஆசிரமி | ஆசிரமநிலையில் நிற்பவன் ; சன்னியாசி . |
| ஆசிரயணம் | சார்ந்து நிற்கை . |
| ஆசிரயம் | சார்ந்து நிற்கை . |
| ஆசிரயித்தல் | சார்தல் . |
| ஆசிரிதம் | சார்ந்திருக்கை . |
| ஆசிரிதன் | சார்ந்திருப்பவன் . |
| ஆசிரியக்கல் | தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு . |
| ஆசிரியச்சீர் | காண்க : அகவல் உரிச்சீர் . |
| ஆசிரியச் சுரிதகம் | அகவலால் ஆகிய சுரிதகம் என்னும் பாவுறுப்பு . |
| ஆசிரியத்தளை | மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத் தொடுக்கும் செய்யுள் தளை . |
| ஆசிரியத்தாழிசை | ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ; ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ , மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது . |
| ஆசிரியத்துறை | காண்க : அகவற்றுறை . |
| ஆசிரியப்பா | காண்க : அகவற்பா . |
| ஆசிரியப்பிரமாணம் | ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி . |
| ஆசிரியம் | காண்க : அகவற்பா ; ஆசிரியக்கல் . |
| ஆசிரியவசனம் | மேற்கோள் . |
| ஆசிரியவிருத்தம் | காண்க : அகவல்விருத்தம் . |
| ஆசிரியவுரிச்சீர் | காண்க : அகவல்உரிச்சீர் . |
| ஆசிரியன் | குரு ; போதகாசிரியன் ; நூலாசிரியன் ; உரையாசிரியன் ; புலவன் . |
| ஆசினி | ஈரப்பலா ; மரவயிரம் ; மரப்பொதுப்பெயர் ; மரவுரி ; வானம் ; சிறப்பு . |
| ஆசீயம் | கருஞ்சீரகம் . |
| ஆசீர்வசனம் | வாழ்த்துரை . |
| ஆசீர்வதித்தல் | வாழ்த்துதல் . |
| ஆசீர்வாதம் | வாழ்த்து . |
| ஆசீல் | மதிப்பு . |
| ஆசீல்கட்டுதல் | மதிப்பிடுதல் . |
| ஆசீவகப்பள்ளி | ஆசீவகத் தவத்தோர் உறைவிடம் . |
| ஆசீவகன் | சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி . |
| ஆசு | குற்றம் ; ஆணவமலம் ; புல்லிது ; நுட்பம் ; ஐயம் ; துன்பம் ; பற்றுக்கோடு ; வாளின் கைப்பிடி ; கவசம் ; கைக்கவசம் ; பற்றாசு ; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை ; எதுகை இடையில் வரும் ய் , ர் , ல் , ழ் என்னும் ஒற்றுகள் ; நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று ; இலக்கு ; விரைவு ; ஆசுகவி ; இடைக்கார்நெல்வகை ; அச்சு . |
| ஆசுக்காயம் | நரிவெங்காயம் . |
| ஆசுகம் | காற்று ; அம்பு ; பறவை . |
| ஆசுகவி | கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ; ஆசுகவி பாடும் புலவன் . |
| ஆசுகன் | காற்று ; சூரியன் . |
| ஆசுகி | பறவை . |
| ஆசுசுக்கணி | நெருப்பு . |
| ஆசுணம் | காண்க : அசோகம் ; அரசு . |
| ஆசுபத்திராமரம் | மரவகை . |
| ஆசுபொதுமக்கள் | சமணருள் ஒரு சாரார் . |
| ஆசுமணை | நெய்தற் கருவிகளுள் ஒன்று . |
| ஆசுரம் | அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் . |
| ஆசுரவைத்தியம் | அறுவை மருத்துவம் . |
| ஆசுராப்பண்டிகை | மொகரம் பண்டிகை . |
| ஆசுரி | அசுரப்பெண் . |
| ஆசானுபாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் . |
| ஆசானுவாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் . |
| ஆசி | வாழ்த்து ; வாழ்த்தணி ; ஒத்த தரை ; போர் . |
| ஆசிக்கல் | காகச்சிலை . |
| ஆசிகம் | முகம் . |
| ஆசிடுதல் | பற்றாசு வைத்தல் ; நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல் ; எதுகையில் ய , ர , ல , ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல் . |
| ஆசிடை | வாழத்து ; கூட்டம் ; ஆடை . |
| ஆசிடையெதுகை | காண்க : ஆசெதுகை . |
| ஆசிடைவெண்பா | நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது . |
| ஆசித்தல் | விரும்புதல் . |
| ஆசிதகம் | இருத்தல் . |
| ஆசிதம் | ஒருவண்டிப் பாரம் ; இருநூறு துலாங்கொண்ட பாரம் ; வாழுமிடம் ; நகரம் . |
| ஆசிமொழி | வாழ்த்தணி . |
| ஆசியக்காரன் | விகடம் செய்வோன் . |
| ஆசியசீரகம் | கருஞ்சீரகம் . |
| ஆசியநாடகம் | நகைச்சுவையுள்ள நாடகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசானுபாகு முதல் - ஆசுரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, நேரிசை, ஆசுகவி, முதற்குறளின், இடையில், என்னும், கருவிகளுள், வாழ்த்தணி, வெண்பாவில், இறுதிச்சீர்க்கும், பாரம், காற்று, பறவை, முழந்தாளளவு, கையுடையோன், போர், பாடும், நீண்ட, சமணருள், தன்னைக், சுரிதகம், ஆசிரியக்கல், நிற்கை, உறைவிடம், சார்ந்து, ஆசிரியப்பா, ஒத்த, வாழ்த்து, முகம், கருஞ்சீரகம், புலவன், வருவது, அகவற்பா, பற்றாசு

