தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆக்கக்கிளவி முதல் - ஆக்வானம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆக்கெளுத்தி | கெளிற்று மீன்வகை ; கடல் கெளிற்றுவகை . |
| ஆக்கேபம் | காண்க : ஆட்சேபம் . |
| ஆக்கை | யாக்கை ; உடம்பு ; நார் . |
| ஆக்கையிலி | காண்க : அனங்கன் . |
| ஆக்கொத்துமம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆக்கொல்லி | ஒரு புழு ; தில்லைமரம் . |
| ஆக்ஞை | ஆணை . |
| ஆக்வானம் | தேவதைகளை வேண்டி அழைக்கை . |
| ஆக்கஞ்செப்பல் | தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை . |
| ஆக்கணாங்கெளிறு | கெளிற்று மீன்வகை . |
| ஆக்கதம் | முதலை . |
| ஆக்கந்திதம் | குதிரை நடைவகையுள் ஒன்று . |
| ஆக்கப்பாடு | பேறு . |
| ஆக்கப்பெயர் | காரணக் குறியினாலாவது இடு குறியினாலாவது இடையில் ஆக்கப்பட்ட பெயர் ; மரபுவழிப் பெயருக்கு மாறுபட்டது . |
| ஆக்கப்பெருக்கம் | வருமானம் . |
| ஆக்கப்பொருள் | ஆகுபெயர்ப் பொருள் . |
| ஆக்கம் | காண்க : ஆக்கக்கிளவி ; அமைத்துக் கொள்ளுகை ; கைகூடுகை ; உண்டுபண்ணுகை ; படைப்பு ; செல்வம் ; பொன் ; பெருக்கம் ; இலாபம் ; ஈட்டம் ; கொடிப்படை ; திருமகள் ; மங்களகரம் ; வாழ்த்து . |
| ஆக்கமகள் | திருமகள் . |
| ஆக்கர் | படைக்கப்பட்ட தேவர் ; திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் ; துறப்பணம் . |
| ஆக்கரிவாள் | அறுவாள்வகை ; தோட்டவேலைக்குதவும் கத்தி . |
| ஆக்கல் | காண்க : ஆக்குதல் . |
| ஆக்கவினை | வளர்ச்சிப்பணி ; ஆக்கத்தால் வரும் வினைச்சொல் . |
| ஆக்கவினைக்குறிப்பு | ஆக்கச் சொல்லைக் கொண்டிருக்கும் வினைக்குறிப்புச் சொல் . |
| ஆக்கவும்மை | சொல்லின் பொருள் பிறிதொன்று மாயிருத்தலைக் குறிப்பிடும் 'உம்' இடைச்சொல் ; பாலுமாயிற்று எனின் அதுவே மருந்துமாயிற்று என்பதைக் குறிப்பது போல்வது . |
| ஆக்கன் | செயற்கையானது . |
| ஆக்காட்டுதல் | வாயைத்திறத்தல் . |
| ஆக்கியரிவாள் | வெற்றிலைக் காம்பறியும் கத்தி . |
| ஆக்கியாதம் | சொல்லப்பட்டது ; அறிவிக்கப்பட்டது ; வினைச்சொல் . |
| ஆக்கியானம் | கட்டுக்கதை ; வெளிப்படுத்துதல் ; பேசுதல் . |
| ஆக்கியோன் | படைத்தோன் ; நூல்செய்தவன் . |
| ஆக்கிரகம் | விடாப்பிடி ; கடுஞ்சினம் ; கைக்கொள்ளுகை ; கட்டாயம் ; அருளுகை . |
| ஆக்கிரகாயணி | புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் ; மார்கழி மாத மதிநிறை நாள் ; மிருக சீரிடம் . |
| ஆக்கிரகித்தல் | பலவந்தமாயெடுத்தல் ; வெல்லல் . |
| ஆக்கிரந்திதம் | குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை . |
| ஆக்கிரமணம் | வலிந்து கவர்கை . |
| ஆக்கிரமம் | அடைதல் ; கடந்துபோதல் ; மேலெழுச்சி ; வீரம் . |
| ஆக்கிரமித்தல் | வலிந்து கவர்தல் ; உள்ளே அடக்கிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் . |
| ஆக்கிராணப்பொடி | மூக்குத்தூள் . |
| ஆக்கிராணம் | மோந்துபார்க்கை ; மூக்கு ; மூக்கில் இடும் மருந்துப்பொடி . |
| ஆக்கிராணித்தல் | மோத்தல் . |
| ஆக்கிராந்தம் | கைக்கொள்ளப்பட்டது ; பாரமேற்றப்பட்டது ; மறைக்கப்பட்டது ; மேலிடப்பட்டது ; வெல்லப்பட்டது . |
| ஆக்கினாசக்கரம் | சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை . |
| ஆக்கினாசத்தி | அரசனாணையின் வன்மை . |
| ஆக்கினாபங்கம் | ஆணை மீறுகை . |
| ஆக்கினேயம் | அக்கினிக்குரியது ; தென்கீழ்த்திசை ; காண்க : ஆக்கினேயாத்திரம் ; ஆக்கினேய புராணம் ; சிவாகமத்துள் ஒன்று ; திருநீறு . |
| ஆக்கினேயாத்திரம் | அக்கினியைத் தேவதையாகக் கொண்ட அம்பு . |
| ஆக்கினை | தண்டனை ; கட்டளை ; கட்டைவிரல் . |
| ஆக்கினைப்பத்திரம் | அரசனது எழுத்து மூலமான கட்டளை . |
| ஆக்கு | படைப்பு . |
| ஆக்குத்தாய் | அநீதியாய் . |
| ஆக்குதல் | செய்தல் ; படைத்தல் ; சமைத்தல் ; அமைத்துக்கொள்ளுதல் ; மாற்றுதல் ; உயர்த்துதல் . |
| ஆக்குப்புரை | சமையற் பந்தல் . |
| ஆக்கும் | போலும் . |
| ஆக்குரோசம் | கடுஞ்சினம் . |
| ஆக்குவயம் | பெயர் . |
| ஆக்கக்கிளவி | ஆக்கம் உணர்த்தும் சொல் ; செயற்கையை உணர்த்தும் ஆயினான் ; ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் . |
| ஆக்கங்கூறுதல் | வாழ்த்துதல் . |
| ஆக்கச்சொல் | காண்க : ஆக்கக்கிளவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆக்கக்கிளவி முதல் - ஆக்வானம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், ஆக்கக்கிளவி, வினைச்சொல், ஆக்குதல், கத்தி, கடுஞ்சினம், வலிந்து, உணர்த்தும், கட்டளை, ஆக்கினேயாத்திரம், திருமகள், படைப்பு, குறியினாலாவது, ஒன்று, குதிரை, பெயர், பொருள், கெளிற்று, ஆக்கம், மீன்வகை

