தமிழ் - தமிழ் அகரமுதலி - நிதனம் முதல் - நிமிட்டுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிதனம் | அழிவு ; சாவு ; வறுமை ; பிறந்த நாளுக்கு ஏழாநாள் . |
| நிதாககரன் | சூரியன் . |
| நிதாகம் | முதுவேனிற்காலம் ; வெப்பம் ; வியர்வை . |
| நிதாந்தன் | மேன்மையுள்ளவன் . |
| நிதார்த்தம் | உறுதி ; நேர்மை ; உண்மை ; சமன் செய்கை . |
| நிதானக்காரன் | யோசனையுள்ளவன் . |
| நிதானம் | ஆதிகாரணம் ; நோய்க்காரணம் ; இரத்தினம் ; பொன் ; படை ; தீர்மானம் ; உத்தேசம் ; நோக்கம் ; நேர்மை ; சமம் ; பிரமாணம் ; சாவதானம் ; முடிவு ; பௌத்தர் கூரும் பேதைமை , செய்கை , உணர்வு , அருவுரு , வாயில் , ஊறு , நுகர்வு , வேட்கை , பற்று , பவம் , தோற்றம் , வினைப்பயன் என்னும் பன்னிரண்டு நிதானங்கள் . |
| நிதானவான் | நேராளி , அறிவாளி . |
| நிதானன் | ஆதிகாரணனான கடவுள் . |
| நிதானி | முன்யோசனையுள்ளவன் . |
| நிதானித்தல் | உறுதிசெய்தல் , அளவு திட்டப் படுத்துதல் , அனுமானித்தல் . |
| நிதி | பொன் , பொருட்குவை , ஐக்கிய நாணயச் சங்கம் . |
| நிதிக்கிழவன் | குபேரன் . |
| நிதிக்கோன் | குபேரன் . |
| நிதித்தியாசனம் | இடைவிடாத் தியானம் . |
| நிதிநிட்சேபம் | பூமியின் கீழுள்ள புதையல் . |
| நிதிப்பலகை | பொற்பலகை . |
| நிதிப்பொதி | பொற்கிழி . |
| நிதிபதி | காண்க : நிதியின்கிழவன் . |
| நிதியம் | பொருள்திரள் ; பொன் ; கடவுண்மணி வகை . |
| நிதியின்கிழவன் | குபேரன் ; தலைச்சங்கப் புலவருள் ஒருவர் . |
| நிதியோன் | குபேரன் . |
| நிதீசன் | குபேரன் . |
| நிதுவனம் | கலப்பு ; புணர்ச்சி ; மகிழ்ச்சி ; விளையாட்டு . |
| நிதேசம் | கட்டளை ; சொல் ; அண்மை . |
| நிந்தகன் | இழிவாகப் பேசுவோன் . |
| நிந்தம் | தனியுரிமை . |
| நிந்தனை | இகழ்ச்சி . |
| நிந்தாத்துதி | இகழ்தல்போலப் புகழ்தல் . |
| நிந்தித்தல் | இகழ்தல் ; பொருட்படுத்தாதிருத்தல் . |
| நிந்திதம் | பரிகாசம் , ஏளனம் , தடை , இகழப்பட்டது . |
| நிந்திப்பு | காண்க : நிந்தனை . |
| நிந்து | வயிற்றில் இறந்த பிள்ளையைப் பெற்றவள் . |
| நிந்தை | காண்க : நிந்தனை |
| நிந்தையுவமை | உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமை அணி . |
| நிப்பரம் | பாரமின்மை , அசைவின்மை . |
| நிப்பாட்டுதல் | நிறுத்துதல் ; தாமதித்தல் ; நேராக நடுதல் . |
| நிபத்தி | உண்மை ; தோன்றுமிடம் ; உதவி . |
| நிபத்தியை | போர்க்களம் . |
| நிபதனம் | விழுகை ; கீழ்இறக்குகை . |
| நிபந்தம் | கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து ; தாவரப்பொருள் ; தவணையாகச் செலுத்துவது ; அணை ; கடமை ; யாப்பு . |
| நிபந்தனம் | தொகுப்பு . |
| நிபந்தனை | கட்டுப்பாடு ; ஏற்பாடு ; தண்டனை ; பொதுவிதி . |
| நிபம் | காரணம் ; உவமை ; வஞ்சனை ; கோள் . |
| நிபாதம் | இறங்குகை ; செயலொழிகை ; இறப்பு ; காண்க : உடம்பொடுபுணர்த்தல் . |
| நிபாதனம் | கொல்லுகை . |
| நிபானம் | கிணறு ; நீர்த்தொட்டி ; பாற்குடம் . |
| நிபிடம் | காண்க : நிபுடம் . |
| நிபீடனம் | மல்வித்தை . |
| நிபுடம் | நெருக்கம் . |
| நிபுணத்துவம் | திறமை . |
| நிபுணம் | திறமை ; சிறப்பு . |
| நிபுணன் | மிகவல்லோன் ; கலைவல்லோன் ; புதன் . |
| நிம்பம் | வேப்பமரம் . |
| நிம்பன் | வேப்பமாலையுடைய பாண்டியன் . |
| நிம்பிரி | பொறாமை . |
| நிம்பிரித்தல் | கோபித்தல் . |
| நிம்பை | திருமகள் . |
| நிம்மதி | மனவமைதி . |
| நிம்மந்தம் | ஒற்றுமையின்மை ; அகங்காரம் . |
| நிம்மளம் | மனவமைதி ; களங்கமற்றது . |
| நிமந்தக்காரர் | கோயில் வேலைக்காரர் ; திருவடி தாங்குவோர் . |
| நிமந்தப்புறம் | அறத்துக்கு விடப்பட்ட நிலம் . |
| நிமந்தம் | கோயில் ஊழியம் ; கோயிலின் ஏற்பாடு . |
| நிமம் | பிடர்த்தலை . |
| நிமலம் | மாசின்மை . |
| நிமலன் | மலமற்ற கடவுள் ; தூயன் . |
| நிமலை | களங்கமற்ற பார்வதி . |
| நிமிட்டுதல் | கிள்ளுதல் ; நெருடித் தூண்டுதல் ; கசக்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 661 | 662 | 663 | 664 | 665 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிதனம் முதல் - நிமிட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குபேரன், காண்க, நிந்தனை, பொன், ஏற்பாடு, கோயில், மனவமைதி, திறமை, நிபுடம், விடப்பட்ட, நிதியின்கிழவன், உண்மை, நேர்மை, செய்கை, கடவுள், சொல், உவமை

