தமிழ் - தமிழ் அகரமுதலி - நரிநிறம் முதல் - நல்லவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நரிநிறம் | பலநிறக்கலப்பு ; பல எண்ணம் ; வெறுப்பு . |
| நரிப்பு | நரித்தன்மை ; இகழ்வு ; வியப்பு ; நொறுங்குகை . |
| நரிப்புத்தி | தந்திரபுத்தி . |
| நரிப்புறம் | மிருகசீரிடநாள் |
| நரிமருட்டி | கிலுகிலுப்பைச்செடி . |
| நரிமிரட்டல் | இளங்குழந்தைகட்குத் தூக்கத்தில் உண்டாகும் அழுகையும் சிரிப்பும் . |
| நரியன் | குள்ளன் ; சூதுள்ளவன் ; பெருநெல்வகை . |
| நரியிலந்தை | இலந்தைவகை . |
| நரியுடை | முசுமுசுக்கை . |
| நரியுணி | நரியால் உண்ணப்படுவதான நண்டு . |
| நரியுப்பு | கறியுப்பு . |
| நரிவாற்புல் | ஒரு புல்வகை . |
| நருக்கல் | நசுக்குண்டது ; குத்தல்வலி ; வேகாதசோறு ; வயிற்றுவலிவகை . |
| நருக்கு | குட்டுகை . |
| நருக்குதல் | நொறுக்குதல் ; கொல்லுதல் ; துண்டாக்குதல் ; குட்டுதல் . |
| நருக்கெனல் | குத்தல் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| நருங்குதல் | நொறுங்குதல் ; தேய்தல் . |
| நருநருத்தல் | நெறுநெறுத்தல் ; புன்மையாதல் . |
| நருநரெனல் | நெறுநெறெனற் குறிப்பு . |
| நருமுதல் | பல்லால் கடித்தல் ; பல்லைக் கடித்தல் . |
| நருவல் | நருங்கினது ; மலம் . |
| நருவிசு | நாகரிகம் ; சிக்கனம் ; துப்புரவு ; நேர்மையானது . |
| நரேசன் | மக்கள் தலைவனான அரசன் . |
| நரேந்திரன் | மக்கள் தலைவனான அரசன் . |
| நரை | வெண்மை ; வெண்மயிர் ; எருது ; இடபராசி ; சாமரம் ; கவரிமா ; மூப்பு ; பெருமை ; வெள்ளைக்குதிரை ; பறவைவகை ; நாரை . |
| நரைக்கொம்பு | வெள்ளைக் கழியான எலும்பு . |
| நரைச்சல் | பயிர் முதலியவற்றின் வெளிறின தன்மை . |
| நரைஞர் | முதியவர் ; முடி வெளுத்தவர் . |
| நரைத்தல் | மயிர்வெளுத்தல் ; பயிர்வெளிறுதல் ; நிறம்வெளுத்தல் . |
| நரைதிரையில்லான் | மூப்படையாத காகம் . |
| நரைப்பு | மயிர் வெண்மையாகை . |
| நரைமை | மூப்பு . |
| நரையல்லி | காண்க : வெள்ளாம்பல் . |
| நரையன் | நரைத்தவன் ; பருவமின்றி நரைத்தவன் ; வல்லூறுவகை ; சாம்பல் நிறமுள்ள விலங்கு . |
| நரையான் | சின்னது ; நாரை ; மீன்கொத்திப் பறவை ; காகம் ; நெல்வகை ; நாரைப்பசு ; நருங்கின குழந்தை . |
| நல் | நல்ல ; வறுமை . |
| நல்கல் | பெருங்கொடை ; அன்பு ; கொடுக்கை ; அருள் . |
| நல்குதல் | கொடுத்தல் ; விரும்புதல் ; தலையளி செய்தல் ; படைத்தல் ; வளர்த்தல் ; தாமதித்தல் ; பயன்படுதல் ; உவத்தல் ; அருள்செய்தல் . |
| நல்குரவு | வறுமை . |
| நல்கூர் | எளிமை . |
| நல்கூர்தல் | வறுமையடைதல் ; களைப்படைதல் ; துன்புறுதல் . |
| நல்கூர்ந்தான் | வறியோன் . |
| நல்கூர்ந்தோன் | வறியோன் . |
| நல்ல | நன்மையான ; மிக்க ; கடுமையான . |
| நல்லசேவகன் | சிறந்த வீரன் ; ஐயனார் . |
| நல்லணி | மங்கலநாண் . |
| நல்லதண்ணீர் | குடிதண்ணீர் ; சுவையுள்ள நீர் . |
| நல்லதனம் | நட்பு ; ஒத்துப்போகும் இயல்பு . |
| நல்லதனம்பண்ணுதல் | சாந்தப்படுத்துதல் . |
| நல்லது | அறம் ; நன்மையானது ; காண்க : நல்லபாம்பு . |
| நல்லதுசொல்லுதல் | புத்திமதி சொல்லுதல் ; அன்பாய்ப் பேசுதல் ; வழியனுப்புதல் . |
| நல்லதுபண்ணுதல் | இணக்குதல் . |
| நல்லதுபொல்லாது | நன்மை தீமை . |
| நல்லநடத்தை | நல்லொழுக்கம் . |
| நல்லநினைப்பு | நல்லெண்ணம் ; சிறந்த ஞாபகம் . |
| நல்லப்பன் | தந்தையுடன் பிறந்தவன் . |
| நல்லபழக்கம் | நற்பயிற்சி ; நெருங்கின நட்பு ; நல்லோர் இணக்கம் . |
| நல்லபாம்பு | நாகப்பாம்பு . |
| நல்லபுத்தி | மயக்கமற்ற அறிவு ; கூரிய அறிவு ; நற்போதனை . |
| நல்லம் | கறுப்பு ; கரி ; இஞ்சி . |
| நல்லமழை | அதிக மழை . |
| நல்லமனம் | விரிந்தவுள்ளம் ; தூய சிந்தை . |
| நல்லமாதிரி | நல்லவகை ; நல்லொழுக்கம் . |
| நல்லவர் | அறிஞர் ; நல்லோர் ; நண்பர் ; பெண்கள் ; காண்க : நல்லபாம்பு . |
| நல்லவழி | நல்ல பாதை ; நன்னடக்கை ; நற்குலம் ; மோட்சவழி . |
| நல்லவளம் | மிகுந்த செழிப்பு ; தக்க சமயம் . |
| நல்லவார்த்தை | இன்சொல் ; உவப்புச்சொல் ; வாழ்த்துரை ; கெஞ்சுமொழி ; சமாதானப்பேச்சு . |
| நல்லவெல்லம் | கரும்புவெல்லம் ; கருப்புக்கட்டி . |
| நல்லவேளை | நற்சமயம் ; நல்ல நெருக்கடியான நேரம் ; நாய்க்கடுகுசெடி . |
| நல்லவை | நற்செயல்கள் ; அறிவு , ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தோர் சபை ; நியாயம் பேசுவோர் சபை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 641 | 642 | 643 | 644 | 645 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நரிநிறம் முதல் - நல்லவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நல்ல, காண்க, நல்லபாம்பு, அறிவு, வறுமை, வறியோன், சிறந்த, நல்லோர், நட்பு, நல்லொழுக்கம், நரைத்தவன், தலைவனான, மக்கள், கடித்தல், அரசன், மூப்பு, காகம், நாரை, குறிப்பு

