முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அறைக்கீரை முதல் - அன்றைக்கன்று வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அறைக்கீரை முதல் - அன்றைக்கன்று வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அன்றியுரைத்தல் | மாறுபட்டுச் சொல்லுதல் . |
| அன்றில் | கிரவுஞ்சப் பறவை ; மூல நட்சத்திரம் ; மயில் . |
| அன்றினார் | பகைவர் . |
| அன்று | அந்நாள் ; மாறுபாடு ; ஓர் அசைச்சொல் . |
| அன்றுதல் | சினத்தல் . |
| அன்றுமுதல் | அந்நாள் தொடங்கி . |
| அன்றை | அந்நாள் . |
| அன்றைக்கன்று | அன்றன்று ; ஒவ்வொரு நாளும் . |
| அறைகழித்தல் | மகப்பேற்றுக்குப் பின் அறையினின்று வெளிவருவதற்குரிய சடங்கு . |
| அறைகாரன் | கோயில் சரக்கறைக்கு உரியவன் . |
| அறைகுறை | அறுத்தலும் குறைத்தலுமாக உள்ள நிலை ; முற்றுப்பெறாமை ; தேவை ; துன்பம் . |
| அறைகுறைபார்த்தல் | செப்பனிடுதல் . |
| அறைகூவுதல் | போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் . |
| அறைகூறுதல் | போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் . |
| அறைதல் | அடித்தல் ; மோதுதல் ; சொல்லுதல் ; கடாவுதல் ; ஒலித்தல் ; பறை முதலியன கொட்டுதல் ; மண்ணெறிந்து கட்டுதல் . |
| அறைநன் | அறுப்பவன் ; அடிப்பவன் ; சொல்லுவோன் . |
| அறைப்பிள்ளை | காண்க : அறைக்குழந்தை . |
| அறைப்புரை | அறைவீடு . |
| அறைபோக்கு | அற்றுப்போதல் ; ஒதுங்குகை ; கெட்டழிகை . |
| அறைபோதல் | கீழறுக்கப்படுதல் ; கெட்டழிதல் . |
| அறைமுறையிடுதல் | குறைதெரிவித்தல் ; இல்லாமை சொல்லி முறையிடுதல் . |
| அறையல் | அறைதல் ; சொல்லல் . |
| அறையிடுதல் | அறைகூவுதல் . |
| அறையினாம் | கோயில் அறைகாரனுக்கு விட்ட மானியம் . |
| அறையுண்ணல் | அடிக்கப்படுதல் ; அறுக்கப்படுதல் . |
| அறையோ | முறையிடும் மொழி ; வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல் ; ஒரு வஞ்சினமொழி . |
| அறையோலை | வரையறை செய்யும் ஆவணம் . |
| அறைவகுத்தல் | புரையோடுதல் . |
| அறைவாசல் | கோயில் சரக்கறை ; அறையின் வாயில் . |
| அறைவாய் | கணவாய் . |
| அறைவீடு | மடைப்பள்ளி ; அறை ; உள்ளறை . |
| அன் | ஆண்பால் வினை விகுதி ; தன்மையொருமை விகுதி ; ஆண்பால் பெயர் விகுதி ; ஆண்பால் வினையாலணையும் பெயர் விகுதி ; சாரியை ; எதிர்மறை காட்டும் வடமொழி முனனொட்டுத் திரிபுசொல் . |
| அனபகம் | சமுத்திரப் பாலைக்கொடி ; அன்பு நிலையம் ; அன்பு மனம் . |
| அனபகர் | சமுத்திரப்பாலை . |
| அன்பன் | தோழன் ; கணவன் ; பக்தன் . |
| அன்பிலி | அன்பில்லாதவன் . |
| அன்பு | தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று ; நேயம் ; அருள் ; பக்தி . |
| அன்புகூர்தல் | பற்றுக்கொள்ளுதல் . |
| அன்புடைக் காமம் | ஐந்திணைபற்றி நிகழும் ஒத்த காமம் . |
| அன்புவைத்தல் | பற்றுக்கொள்ளுதல் ; அபிமானங் காட்டுதல் . |
| அன்புறல் | நேசத்தில் அழுந்தல் . |
| அன்மயம் | மாறு ; ஐயம் . |
| அன்மை | அல்லாமை ; தீமை . |
| அன்மொழி | ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை . |
| அன்மொழித்தொகை | ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை . |
| அன்யாபதேசம் | உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள் ; சாக்கிட்டுச் சொல்லும் சொல் . |
| அன்வயத்தார் | சுற்றத்தார் . |
| அன்வயம் | காண்க : அன்னுவயம் ; தாதான்மிய குணம் ; இயைபு . |
| அன்வயித்தல் | செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல் ; ஒரு சொல் மற்றொன்றோடு இயைதல் . |
| அன்வாதேயம் | திருமணத்தின் பின்பு தாய்வழி தந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோரால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்ப்பொருள் . |
| அன்றமை | காற்று . |
| அன்றன்று | நாள்தோறும் . |
| அன்றாடகம் | நாள்தோறும் . |
| அன்றாடம் | நாள்தோறும் . |
| அன்றாடங்காய்ச்சி | நாட்கூலி பெற்று வாழ்வோர் . |
| அன்றாடு | காண்க : அன்றன்று . |
| அன்றாடுகாசு | வழங்குகிற நாணயம் . |
| அன்றாள்கோ | அப்பொழுது ஆளும் அரசன் . |
| அன்றி | அல்லாமல் |
| அன்றிக்கே | அல்லாமல் |
| அன்றியனைத்தும் | அவையெல்லாம் . |
| அன்றியில் | அன்றி . |
| அன்றியும் | அல்லாமலும் . |
| அறைக்கீரை | பாத்திக் கீரைவகை . |
| அறைக்கீரைக்காய் | வெள்ளரிக்காய் . |
| அறைக்குழந்தை | ஈனில்லைவிட்டு நீங்காத குழந்தை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறைக்கீரை முதல் - அன்றைக்கன்று வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அழைத்தல், சொல், விகுதி, காண்க, அன்பு, நாள்தோறும், ஆண்பால், அந்நாள், கோயில், அன்றன்று, தொக்குவரும்தொகை, மொழிமேல், ஐந்தொகை, சுற்றத்தார், அல்லாமல், அன்றி, சொல்லுதல், மற்றொன்றோடு, காமம், கணவன், அறைகூவுதல், அறைதல், வலிய, அறைக்குழந்தை, அறைவீடு, போருக்கு, பெயர், பற்றுக்கொள்ளுதல்

