முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தோரணகம்பம் முதல் - தோற்கிடங்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தோரணகம்பம் முதல் - தோற்கிடங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தோரணகம்பம் | காண்க : தோரணக்கந்து . |
| தோரணம் | அலங்காரவாயில் ; தெருவில் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் ; ஊர்தி ; குரங்கு ; நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு ; தராசுதாங்கி ; யானைநடை . |
| தோரணவாயில் | அலங்கார வளைவுள்ள வாயில் . |
| தோரணவீதி | தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெரு . |
| தோரணன் | யானைப்பாகன் . |
| தோரணி | நல்லொழுங்கு ; முறை . |
| தோரணை | நல்லொழுங்கு ; முறை . |
| தோரணிக்கம் | நல்லொழுங்கு ; முறை . |
| தோரத்தம் | தொந்தரவு ; கட்டாயம் ; சண்டையிடும் குணம் . |
| தோராயம் | எதிர்பார்ப்பு , உத்தேசம் . |
| தோராவழக்கு | ஓயாத வழக்கு . |
| தோரி | சோறு . |
| தோரியம் | கூத்து ; வாச்சியம் . |
| தோரியமகள் | நாட்டியம் ஆடி முதிர்ந்தவள் . |
| தோரியமடந்தை | நாட்டியம் ஆடி முதிர்ந்தவள் . |
| தோரை | ஒரு மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; கைவரை ; இரத்தம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை ; மயில்விசிறி ; நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை ; அணிவிடம் . |
| தோல் | சருமம் ; உடம்பின் ; மேலுள்ள தோல் ' புறணி ; விதையின் மேற்றோல் ; கேடகம் ; துருத்தி ; மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யும் நூல் ; புகழ் ; அழகு ; சொல் ; யானை ; தோல்வி ; நற்பேறின்மை ; உடம்பு ; பக்கரை ; மூங்கில் . |
| தோல்முட்டை | கருவில்லாத முட்டை ; தோடு கடினமாவதற்கு முன் இடப்பட்ட முட்டை . |
| தோல்வி | வெற்றியின்மை . |
| தோல்வினைஞர் | சங்கிலியர் , செம்மார் . |
| தோல்வினைமாக்கள் | சங்கிலியர் , செம்மார் . |
| தோல்வு | காண்க : தோல்வி . |
| தோலடிப்பறவை | தோலால் இணைக்கப்பட்ட காலுள்ள பறவை . |
| தோலன் | புல்லன் , அற்பன் . |
| தோலான் | புல்லன் , அற்பன் . |
| தோலனம் | நிறுத்தல் . |
| தோலா | ஒரு ரூபாஎடை . |
| தோலாட்டம் | கயமைத்தனம் . |
| தோலாண்டி | இழிஞன் . |
| தோலாநாவினர் | நாவன்மையுடையவர் . |
| தோலாமை | ஈடழியாமை , தோல்வியின்மை . |
| தோலாவழக்கு | முடிவுபெறாத வழக்கு . |
| தோலாள் | பயனற்றவள் . |
| தோலி | ஒரு மீன்வகை ; அரக்கு ; பழத்தோல் . |
| தோலிகை | ஊஞ்சல் ; காது . |
| தோலின்துன்னர் | தோல்வேலை செய்வோர் . |
| தோலுழிஞை | கிடுகுபடையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை . |
| தோலோதோல் | உடம்படாமைக் குறிப்பு ; எவ்விதமும் . |
| தோவத்தி | ஆண்மக்களின் அரையாடை . |
| தோவம் | ஒரு கால அளவு . |
| தோவாளம் | கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர் . |
| தோழ் | மாட்டுத்தொழுவம் . |
| தோழம் | மாட்டுக்கொட்டில் ; கடல் ; பேரெண் . |
| தோழமை | நட்பு . |
| தோழன் | நண்பன் . |
| தோழி | பாங்கி ; பணிசெய்பவள் ; செவிலித்தாயின் மகள் ; தேவி ; அரக்கு . |
| தோழிச்சி | பாங்கி ; செவிலித்தாயின் மகள் ; தேவி . |
| தோள் | புயம் ; கை ; தொளை . |
| தோள்கொட்டுதல் | வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல் . |
| தோள்கொடுத்தல் | உதவுதல் ; சுமையைத் தாங்குதல் . |
| தோள்சேர்தல் | தழுவுதல் . |
| தோள்தட்டுதல் | காண்க : தோள்கொட்டுதல் . |
| தோள்படிகொள்ளுதல் | ஒன்றைப் பற்றாகக் கொள்ளுதல் . |
| தோள்மாற்றுதல் | காண்க : தோண்மாற்றுதல் . |
| தோள்மாறுதல் | தோளை மாறிக்கொடுத்தல் ; மனம் வேறுபடுதல் . |
| தோள்வந்தி | தோளில் அணியும் வளைவகை . |
| தோள்வலி | புசபலம் ; தோள்நோவு . |
| தோள்வளை | தோளில் அணியும் அணிவகை . |
| தோளணி | தோளில் அணியப்படும் அணிகலவகை . |
| தோளாமணி | தொளையிடப்படாத இரத்தினம் . |
| தோளி | அவுரிப்பூண்டு ; அரக்கு ; நன்னீர் மீன்வகை . |
| தோளிற்கொள்ளுதல் | திருமணஞ் செய்துகொள்ளுதல் . |
| தோளுதல் | துளைத்தல் ; தோண்டுதல் ; நீக்குதல் . |
| தோளோச்சல் | தோளையெடுத்தல் ; கையை உயர்த்துதல் . |
| தோற்கட்டு | முன்கைத் தோற்கவசம் . |
| தோற்கடித்தல் | தோற்றோடப்பண்ணல் . |
| தோற்கருவி | தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை . |
| தோற்கருவியாளர் | வாச்சியம் இசைப்போர் . |
| தோற்கவசம் | தோலால் அமைந்த சட்டை . |
| தோற்காது | காண்க : தோற்செவி . |
| தோற்காற்பறவை | காண்க : தோலடிப்பறவை . |
| தோற்கிடங்கு | தோல் பதனிடும் இடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 628 | 629 | 630 | 631 | 632 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தோரணகம்பம் முதல் - தோற்கிடங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தோல், தோல்வி, தோளில், அரக்கு, நல்லொழுங்கு, முறை, மீன்வகை, பாங்கி, மகள், செவிலித்தாயின், தோள்கொட்டுதல், தோற்கவசம், அணியும், அற்பன், தேவி, செம்மார், நாட்டியம், வாச்சியம், வழக்கு, கட்டும், முதிர்ந்தவள், முட்டை, தோலால், தோலடிப்பறவை, சொல், சங்கிலியர், புல்லன்

