முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தொட்டுத்தெறித்தல் முதல் - தொடுப்புக்கத்தி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தொட்டுத்தெறித்தல் முதல் - தொடுப்புக்கத்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தொட்டுத்தெறித்தல் | ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல் ; மிகச் சிறிய அளவு கொடுத்தல் . |
| தொட்டுத்தொட்டு | சிறுகச்சிறுக . |
| தொட்டுப்பிடித்தல் | மகப்பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவிசெய்தல் . |
| தொட்பம் | திறமை . |
| தொடக்கம் | தொடங்குகை ; ஆரம்பம் ; ஆதி ; செல்வம் ; வருக்கம் . |
| தொடக்கு | கட்டு ; பற்று ; மகளிர் சூதகம் . |
| தொடக்குதல் | சிக்கிக்கொள்ளுதல் ; ஆரம்பித்தல் ; கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தரித்தல் ; பொருத்தல் . |
| தொடங்கல் | தொடங்குதல் ; ஆரம்பிக்கை ; முதற்படைப்பு ; செய்ய முயலுகை . |
| தொடங்கு | கால்விலங்கு , தளை . |
| தொடங்குதல் | ஆரம்பித்தல் ; முயலுதல் ; ஒத்தல் . |
| தொடர் | தொடர்கை ; சங்கிலி ; விலங்கு ; பஞ்சு ; வரிசை ; பிசின் ; பூமாலை ; மரபுவழி ; சொற்றொடர் ; பழைமை ; நட்பு ; உறவு ; உலோகங்களை உருக்க உதவும் மட்பாண்டம் . |
| தொடர்ச்சி | தொடர்கை ; உறவுமுறை ; பரம்பரைத்தொடர்பு ; நட்பு ; வழக்குத்தொடர்ச்சி ; பூங்கொத்து ; முயற்சி ; வரிசை ; காரணகாரியத் தொடர்பு ; தொடுசு ; செறிவு . |
| தொடர்ச்சொல் | சொற்களின் தொடர் ; தொடர் மொழி . |
| தொடர்ச்சொற்புணர்த்தல் | முப்பத்திரண்டு தந்திர உத்தியில் ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்துவைத்தல் . |
| தொடர்தல் | இடையறாது வருதல் ; பிணைந்து நிற்றல் ; அமைதல் ; தாக்குதல் ; பின்பற்றுதல் ; மிகுதல் ; நெருங்குதல் ; கட்டல் ; தேடல் ; வழக்கிற்கு இழுத்தல் . |
| தொடர்ந்தார் | நண்பர் . |
| தொடர்நிலைச்செய்யுள் | பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல் . |
| தொடர்ப்பாடு | தொடர்ச்சி ; பற்று ; காமநுகர்ச்சி . |
| தொடர்ப்பூ | விரிபூ . |
| தொடர்பற | முழுதும் . |
| தொடர்பு | தொடர்கை ; நட்பு ; உறவு ; நியதி ; ஒட்டுகை ; பாட்டு ; பரம்பரைத் தொடர்பு ; வரிசை ; காரண காரிய சம்பந்தம் . |
| தொடர்முழுதுவமை | உவமானம் உவமேயம் இரண்டிலும் பொதுதன்மையைத் தெரிவிக்கும் சொல் தனித்தனி வரும் அணி . |
| தொடர்மொழி | இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக்கொண்ட சொல் ; இரண்டு சொற்களால் ஆகும் தொடர் . |
| தொடர்வட்டி | வட்டிக்கு வட்டி . |
| தொடர்வண்டி | இரயில்வண்டி ; புகைவண்டி . |
| தொடர்வு | காண்க : தொடர்ச்சி . |
| தொடரர் | மேவினர் . |
| தொடராமுறி | விடுதலைப்பத்திரம் ; ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச்சீட்டு . |
| தொடரி | செடிவகை ; முட்செடிவகை ; காண்க : புலிதொடக்கி . |
| தொடரெழுத்து | நிலைமொழி ஈற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து . |
| தொடல் | சங்கிலி . |
| தொடலை | தொங்கவிடுகை ; மாலை ; மகளிர் விளையாட்டுவகை ; மணிக்கோவைகளால் தொடுக்கபட்ட மேகலை . |
| தொடி | வளைவு ; கைவளை ; தோள்வளை ; வீரவளை ; சுற்றுவட்டம் ; பூண் . |
| தொடிசு | காண்க : தொடுசு . |
| தொடித்தடி | வளைதடி ; பூண்கட்டிய ஊன்றுகோல் . |
| தொடிமகள் | காண்க : விறலி . |
| தொடு | தோட்டம் ; மருதநிலம் ; வஞ்சகம் . |
| தொடுக்கம் | பொன் . |
| தொடுக்கை | ஆடு அடைக்கும் இடம் ; தொடுத்தல் . |
| தொடுகழல் | செருப்பு . |
| தொடுசு | தொடர்ச்சி ; கூத்திவைப்பு . |
| தொடுத்தல் | இயைத்தல் ; தொடங்குதல் ; கட்டுதல் ; பூட்டுதல் ; வளைத்தல் ; எய்தல் ; அணிதல் ; சேர்த்துவைத்தல் ; பாத் தொடுத்தல் ; உண்டாக்குதல் ; வழக்குத் தொடர்தல் ; பூ முதலியன இணைத்தல் . |
| தொடுதல் | தீண்டுதல் ; தோண்டுதல் ; பிடித்தல் ; பிழிதல் ; தொடங்குதல் ; உண்ணல் ; ஆணையிடுதல் ; செலுத்துதல் ; வாச்சியம் வாசித்தல் ; அடித்தல் ; செருப்பணிதல் . |
| தொடுதுணை | உதவி . |
| தொடுதோல் | காண்க : தொடுகழல் . |
| தொடுப்பி | புறங்கூறுவோன் . |
| தொடுப்பு | தொடுத்தல் ; தொடர்ந்திருக்கை ; கட்டு ; சேர்க்கை ; சங்கிலி ; கலப்பை ; சால் வளைத்து உழுதல் ; விதைப்பு ; புறங்கூறல் ; செய்கைத் தொடர்ச்சி ; கட்டுக்கதை ; செருப்பு ; பழக்கம் ; கள்ளக்கணவன் ; ஆசைநாயகி ; களவு . |
| தொடுப்புக்கத்தி | பட்டாக்கத்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 621 | 622 | 623 | 624 | 625 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொட்டுத்தெறித்தல் முதல் - தொடுப்புக்கத்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தொடர்ச்சி, காண்க, தொடர், தொடங்குதல், தொடுத்தல், சொல், தொடர்பு, தொடுசு, வரிசை, நட்பு, சங்கிலி, தொடர்கை, வழக்குத், கட்டு, தொடுகழல், செருப்பு, பற்று, சேர்த்துவைத்தல், உறவு, கட்டுதல், ஆரம்பித்தல், மகளிர், தொடர்தல்

