முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தெவ்வம் முதல் - தெறிக்கப்பேசுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தெவ்வம் முதல் - தெறிக்கப்பேசுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தெவ்வம் | பகைவன் . |
| தெவ்வர்முனைப்பதி | பாசறை . |
| தெவ்வன் | பகைவன் . |
| தெவ்வினை | போர் . |
| தெவ்வு | பகை ; சந்திரன் ; கொள்ளுகை . |
| தெவ்வுதல் | கொள்ளுதல் ; கவர்தல் ; நிறைத்தல் ; மன்றாடிக் கேட்டல் . |
| தெவம் | மாமரம் . |
| தெவிட்டல் | உமிழப்பட்டது . |
| தெவிட்டு | உணவில் வெறுப்பு . |
| தெவிட்டுதல் | தேக்கிடுதல் ; அசையிடுதல் ; திரளுதல் ; நிறைதல் ; தங்குதல் ; ஒலித்தல் ; உமிழ்தல் ; அருவருத்தல் ; அடைதல் ; அடைத்தல் ; வெல்லுதல் ; மறைத்தல் ; நினைத்தல் . |
| தெவிளுதல் | திரளுதல் ; நிறைதல் . |
| தெவு | கொள்ளுகை . |
| தெவுளுதல் | காண்க : தெவிளுதல் . |
| தெழ்கு | இடையில் அணியும் அணிவகை . |
| தெழி | ஒலி . |
| தெழித்தல் | அதட்டுதல் ; மிதித்துழக்குதல் ; முழக்குதல் ; ஆரவாரித்தல் ; ஒலித்தல் ; அடக்குதல் ; வருத்துதல் ; நீக்குதல் ; பிரித்தல் . |
| தெழிப்பு | ஆரவாரம் . |
| தெள் | தெள்ளுப்பூச்சி . |
| தெள்கு | தெள்ளுப்பூச்சி . |
| தெள்குதல் | தெளிவாதல் ; தேங்குதல் . |
| தெள்விளி | தெளிந்த ஓசை ; தெளிந்த சொல் ; இசைப்பாட்டு ; கூவி வெருட்டும் ஓசை . |
| தெள்ளத்தெளிதல் | மிகத் தெளிவாதல் . |
| தெள்ளி | யானை . |
| தெள்ளிச்சி | பூநீறு , உவர்மண் . |
| தெள்ளிதின் | தெளிவாக . |
| தெள்ளிமை | தெளிவு ; அறிவுநுட்பம் . |
| தெள்ளியர் | தெளிந்த அறிவுடையவர் . |
| தெள்ளு | பூச்சிவகை ; காண்க : இரிக்கி . |
| தெள்ளுதல் | தெளிவாதல் ; ஆராய்தல் ; படைத்தல் ; கொழித்தல் ; அலைகொழித்தல் ; தெளிவித்தல் ; அனுபவமுதிர்தல் . |
| தெள்ளேணம் | கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு . |
| தெளி | தெளிவு ; சாறு ; ஒளி ; விதைப்பு . |
| தெளிஞன் | அறிஞன் . |
| தெளித்தல் | தெளிவித்தல் ; வெளிப்படுத்துதல் ; துப்புரவாக்கல் ; ஊடலுணர்த்துதல் ; விதைத்தல் ; கொழித்தல் ; புடைத்தல் ; சாறு வடித்தல் ; நிச்சயித்தல் ; சூளுறுதல் ; தூவுதல் ; நீக்குதல் ; உருக்கி ஓடவைத்தல் . |
| தெளிதல் | தெளிவாதல் ; அமைதியுறுதல் ; ஒளிர்தல் ; வெண்மையாதல் ; குணப்படுதல் ; செழித்தல் ; ஒழிதல் ; துளைத்தல் ; அறிதல் ; முடிவுக்கு வருதல் ; ஆராய்தல் ; தேறுதல் ; நம்புதல் ; இலாபம் காணுதல் . |
| தெளிநீர் | தூய நீர் ; நன்னீர் . |
| தெளிப்பு | தூய்மைசெய்கை ; தூவுகை ; கொழிக்கை ; வடிக்கை . |
| தெளிர் | யாழின் உள்ளோசை . |
| தெளிர்த்தல் | ஒலித்தல் ; செழித்தல் ; மகிழ்ச்சியுறுதல் . |
| தெளிர்தல் | ஒளிபெறுதல் . |
| தெளிவு | விளக்கம் , துலக்கம் ; உடற்செழிப்பு ; பதநீர் ; நினைவு ; மன அமைவு ; அறிவு ; நற்காட்சி ; உளக்குறிப்பு ; நீக்கம் ; சான்று ; ஆராய்வு ; நம்பிக்கை ; சாறு ; கஞ்சித்தெளிவு ; இலாபம் ; பொருள் புலப்பட அமையும் செய்யுளின் குணம் ; பாடற்பயன்வகை . |
| தெளிவெண்ணெய் | பச்சையாக வடித்த வேப்பெண்ணெய் . |
| தெற்கு | தென்றிசை . |
| தெற்குமுகமாய்ப்போதல் | இறத்தல் . |
| தெற்றல் | மாறுபாடுடையவன் ; அறிவில் தெளிந்தவன் . |
| தெற்றி | சித்திரகூடம் ; திண்ணை ; மேட்டிடம் ; மரவகை ; பழிபாவம் விளைவிப்பவன் ; மாடம் . |
| தெற்றியம்பலம் | கோயில் முதலியவற்றில் அமைந்த சித்திரகூடம் . |
| தெற்று | பின்னல் ; வேலி அடைப்பு ; செறிவு ; இடறுகை ; மாறுபாடு ; தவறு ; தேற்றம் . |
| தெற்றுதல் | இடறுதல் ; தடைப்படுதல் ; மாறுபடல் ; பிழைசெய்தல் ; பின்னல் ; பிணங்குதல் ; தொடுத்தல் ; இறுக்குதல் ; பல்லைக் கடித்தல் ; வாய்கொன்னுதல் ; அலைத்தல் ; தடுத்தல் ; இகலுதல் ; செறிதல் ; மோதுதல் ; மாற்றுதல் . |
| தெற்றுப்பல் | ஒன்றோடொன்று பின்னியிருக்கும் பல் . |
| தெற்றுமாற்று | ஏமாற்று . |
| தெற்றுவாசல் | திட்டிவாயில் . |
| தெற்றுவாய் | காண்க : திக்குவாய் . |
| தெற்றென | விரைவாக ; உடனே ; தெளிவாக . |
| தெற்றெனவு | தெளிவு ; வெட்கமின்மை . |
| தெறல் | அழித்தல் ; கோபித்தல் ; வருத்துதல் ; வெம்மை . |
| தெறி | சிதறுகை ; அணி ; அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு ; குறும்புப் பேச்சு . |
| தெறிக்கடித்தல் | சிதறவடித்தல் ; எதிரி அடங்கும்படி பேசுதல் . |
| தெறிக்கப்பேசுதல் | நிதானமின்றிக் கடுத்துப் பேசுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 610 | 611 | 612 | 613 | 614 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெவ்வம் முதல் - தெறிக்கப்பேசுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தெளிவு, தெளிவாதல், காண்க, சாறு, ஒலித்தல், தெளிந்த, திரளுதல், தெளிவித்தல், கொழித்தல், செழித்தல், இலாபம், பேசுதல், பின்னல், சித்திரகூடம், ஆராய்தல், பகைவன், நீக்குதல், வருத்துதல், நிறைதல், தெள்ளுப்பூச்சி, சொல், தெளிவாக, கொள்ளுகை, தெவிளுதல்

