தமிழ் - தமிழ் அகரமுதலி - துமிதம் முதல் - துர்ப்பரிசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துமிதம் | மழைத்துளி . |
| துமிதல் | வெட்டுண்ணல் ; உமிதல் ; அழிதல் ; விலக்குதல் . |
| துமுக்கி | துப்பாக்கி . |
| துமிலம் | பேராரவாரம் . |
| துமுலம் | குழப்பம் . |
| துய் | உணவு ; பஞ்சு ; பஞ்சின் நுனி ; புளியம் பழத்தின் ஆர்க்கு ; மென்மை ; கதிர் ; பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி ; சிம்பு ; கூர்மை . |
| துய்த்தல் | புலன்களால் நுகர்தல் ; உண்ணுதல் ; நூல்நூற்றல் ; நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது . |
| துய்ப்பு | நுகர்ச்சி . |
| துய்ய | தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான . |
| துய்யம் | தூய்மை . |
| துய்யமல்லி | நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாநெல்வகை . |
| துய்யன் | தூயன் ; வெள்ளிமணல் . |
| துய்யா | திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் ; நெசவுப் பின்னல் கயிறு . |
| துய்யாள் | தூய்மையுடையாள் ; நாமகள் . |
| துயக்கம் | சோர்வு ; தடை . |
| துயக்கன் | மனத்திரிவை உண்டாக்குபவன் . |
| துயக்கு | சோர்வு ; துயரம் ; மனமயக்கம் ; ஆசை ; பந்தம் ; தடை ; மனத்திரிவு . |
| துயக்குதல் | தளரச் செய்தல் . |
| துயங்குதல் | சோர்தல் . |
| துயம் | இரண்டு ; திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்கள் உடையதுமான மந்திரம் ; கொடி . |
| துயர் | துன்பம் ; அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம் . |
| துயர்தல் | வருந்துதல் ; தொடர்தல் . |
| துயரடி | துன்பம் ; சோர்வு . |
| துயரம் | துன்பம் ; மனத்துக்கம் ; இரக்கம் ; மழை . |
| துயரி | யாழ்நரம்பு . |
| துயல்வருதல் | அசைதல் . |
| துயல்தல் | அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் . |
| துயலுதல் | அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் . |
| துயவு | அறிவின் திரிபு . |
| துயில் | உறக்கம் ; கனா ; தங்குகை ; இறப்பு ; புணர்ச்சி ; ஆடை . |
| துயில்கூர்தல் | உறங்குதல் . |
| துயில்மடிதல் | உறங்குதல் . |
| துயில்வு | உறக்கம் . |
| துயிலார் | உறக்கமில்லாத தேவர் . |
| துயிலார்தல் | உறங்குதல் . |
| துயிலி | ஒரு கீரைவகை ; ஓர் ஆடைவகை . |
| துயிலிடம் | உறங்கும் இடம் ; மக்கட்படுக்கை . |
| துயிலுணர்தல் | விழித்தல் . |
| துயிலுதல் | உறங்குதல் ; தங்குதல் ; இறத்தல் ; மறைதல் . |
| துயிலெடுத்தல் | தூக்கத்திலிருந்து எழுப்புதல் . |
| துயிலெடுப்பு | தூக்கத்திலிருந்து எழுப்புதல் . |
| துயிலெடை | துயிலெழுப்பல் . |
| துயிலெடைநிலை | பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை ; அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை . |
| துயிலெடைமாக்கள் | அரசரைத் துயிலெழுப்பும் சூதர் . |
| துயிலெழுதல் | உறக்கம்விட்டு எழுதல் . |
| துயிலெழுமங்கலம் | பாணர் முதலியோர் அரசரைத் துயிலெழப் பாடும் மங்கலப்பாடல் . |
| துயிலேற்றல் | உறக்கம்விட்டு எழுதல் . |
| துயற்சி | தூக்கம் . |
| துயிற்றுதல் | உறங்கச்செய்தல் ; தங்கப்பண்ணுதல் . |
| துயினடை | தூக்கத்திடையே எழுந்து செல்லச் செய்யும் நோய் . |
| துயுலி | கீரைவகை . |
| துர் | தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| துர்க்கடம் | இடர்ப்பாடு . |
| துர்க்கதன் | வறுமையுற்றவன் . |
| துர்க்கதி | கெட்ட நடத்தை ; வறுமை ; நரகம் . |
| துர்க்கந்தம் | தீநாற்றம் . |
| துர்க்கம் | அரண் ; மலைக்கோட்டை . |
| துர்க்கருமம் | தீச்செயல் . |
| துர்க்காதேவி | கொற்றவை ; பார்வதி . |
| துர்க்காபூசை | நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் மூன்றுநாள் பூசை . |
| துர்க்குணம் | தீக்குணம் . |
| துர்க்குணன் | தீயவன் . |
| துர்க்குறி | தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் . |
| துர்க்கை | சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம் ; பூரநாள் . |
| துர்ச்சரிதம் | கெட்ட நடத்தை . |
| துர்ச்சனன் | தீயவன் . |
| துர்த்தினம் | தீய நாள் ; சூரிய கிரணமின்றி மேக மூட்டமுள்ள நாள் . |
| துர்த்தூரம் | ஊமத்தஞ்செடி . |
| துர்த்தேவதை | சிறுதெய்வம் . |
| துர்நடத்தை | தீயொழுக்கம் . |
| துர்ப்பரிசம் | காண்க : சிறுகாஞ்சொறி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 594 | 595 | 596 | 597 | 598 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துமிதம் முதல் - துர்ப்பரிசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உறங்குதல், அசைதல், சோர்வு, துன்பம், எழுதல், உறக்கம்விட்டு, அரசரைத், செய்யும், நடத்தை, நாள், தீயவன், முதலியோர், கெட்ட, கீரைவகை, தொங்குதல், இரண்டு, துயரம், பறத்தல், துயில், தூக்கத்திலிருந்து, பின்னல், உறக்கம், எழுப்புதல்

