முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » துட்டகண்டகன் முதல் - துடைத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - துட்டகண்டகன் முதல் - துடைத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துட்டகண்டகன் | மிகக் கொடியவன் ; பிறரை வருத்தி வேலைவாங்குவோன் . |
| துட்டகம் | பொல்லாங்கு . |
| துட்டகன் | தீமைபுரிவோன் . |
| துட்டத்தனம் | தீக்குணம் . |
| துட்டதேவதை | மாடன் , காட்டேறி முதலிய கொடுந்தெய்வங்கள் . |
| துட்டநிக்கிரகம் | தீயோரையழித்தல் . |
| துட்டம் | தீமை ; கொடுமை ; மரகதக் குற்றங்களுள் ஒன்றாகிய நீலோற்பலநிறம் . |
| துட்டரி | (வி) தொடரிச்செடி . |
| துட்டன் | தீயோன் ; தேள் . |
| துட்டாட்டம் | முருட்டுதனம் ; தீய வாழ்வு . |
| துட்டாப்பு | சிட்டைமரத்திடையே கட்டிய பாரம் சுமத்தல் ; செரியாமை . |
| துட்டி | மனநிறைவு ; கெட்டவள் ; சாவுத்தீட்டு ; சாதுயர் ; சம்பளம் பிடிக்கை . |
| துட்டு | பணம் ; இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட செப்புநாணயம் ; தீமை . |
| துட்டுக்கட்டை | குறுந்தடி . |
| துட்டுத்தடி | குறுந்தடி . |
| துட்டுத்துக்காணி | பணம் ; சில்லறைப்பணம் ; செல்வம் . |
| துட்டுவம் | சிறுமை ; புன்மை . |
| துட்டை | கட்டுக்கடங்காதவள் ; கற்பில்லாதவள் . |
| துட்பதம் | பாசாங்கு . |
| துடக்கம் | காண்க : தொடக்கம் . |
| துடக்கறுப்பான் | காண்க : முடக்கொற்றான் ; கொற்றான்கொடி . |
| துடக்கு | சம்பந்தம் ; தன்னகப்படுத்துவது ; மாதவிலக்கு ; உறவினர்களின் பிறப்பிறப்புகளில் காக்கும் தீட்டு . |
| துடக்குதல் | கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தொடங்குதல் ; சம்பந்தப்படுத்துதல் . |
| துடங்குதல் | காண்க : தொடங்குதல் . |
| துடப்பம் | துடைப்பம் . |
| துடர் | சங்கிலி . |
| துடர்தல் | காண்க : தொடர்தல் . |
| துடராமுறி | விடுதலை ஆவணம் . |
| துடரி | தொடரிச்செடி ; புலிதொடக்கி ; திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு மலை . |
| துடவர் | நீலகிரி மலைச்சாதியார் . |
| துடவை | தோட்டம் ; சோலை ; விளைநிலம் . |
| துடி | சலிப்பு ; காலநுட்பம் ; வேகம் ; சுறுசுறுப்பு ; அறிவுநுட்பம் ; மேன்மை ; வலி ; அகில்மரம் ; காண்க : தூதுளை , கூதாளிச்செடி ; சங்கஞ்செடி ; ஏலச்செடி ; மயிர்ச்சாந்து ; உடுக்கை ; காண்க : துடிக்கூத்து ; துடிகொட்டுபவன் ; சிறுமை ; திரியணுகம் . |
| துடிகம் | தும்பைச்செடி . |
| துடித்தல் | படபடவெனச் சலித்தல் ; மனம்பதைத்தல் ; பரபரத்தல் ; மின்னுதல் ; பசி முதலியவற்றால் வருந்துதல் ; துடுக்காதல் . |
| துடிதலோகம் | பௌத்தமத நூல்களில் கண்ட தேவலோகம் . |
| துடிதுடித்தல் | மனம் பதைபதைத்தல் ; கடுகடுத்தல் . |
| துடிநிலை | போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை ; வழிவழியாய் துடிகொட்டி வருபவனது குணங்களைப் புகழும் புறத்துறை . |
| துடிநூல் | உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல் . |
| துடிப்பு | நாடியடிக்கை ; நடுக்கம் ; பரபரப்பு ; சினம் ; பிரம்பு முதலியவற்றின் வீச்சு ; செருக்கு ; விலை முதலியவற்றின் ஏற்றம் ; ஊற்றம் . |
| துடியடி | துடிபோன்ற காலையுடைய யானைக் கன்று . |
| துடியன் | துடிகொட்டுபவன் ; சுறுசுறுப்புள்ளவன் ; சினமுள்ளவன் ; தீயன் . |
| துடியாஞ்சி | காண்க : சங்கஞ்செடி . |
| துடியாடல் | காண்க : துடிக்கூத்து . |
| துடுக்கன் | செருக்குள்ளவன் . |
| துடுக்கு | குறும்புத்தனம் ; சுறுசுறுப்பு ; தீச்செயல் . |
| துடுக்குக்காரன் | செருக்குள்ளவன் ; தீயவன் . |
| துடுப்பாற்றி | ஒரு கடல்மீன்வகை . |
| துடுப்பு | சட்டுவம் ; அகப்பை ; வலிதண்டு ; பூங்கொத்து ; அகப்பைபோன்ற காந்தள்மடல் . |
| துடும்புதல் | ததும்புதல் ; கூடுதல் . |
| துடுமெனல் | ஒலிக்குறிப்பு ; நீரில் விழுதற்குறிப்பு . |
| துடுமை | ஒரு தோற்றக்கருவிவகை . |
| துடுவை | நெய்த்துடுப்பு . |
| துடை | தொடை என்னும் உறுப்பு ; சுவர்க்கட்டை ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; அரசமரம் ; காண்க : விடமூங்கில் . |
| துடைகாலன் | தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையோன் . |
| துடைகாலி | தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையவள் . |
| துடைத்தல் | தடவிப்போக்குதல் ; பெருக்கித் தள்ளுதல் ; அழித்தல் ; துவட்டுதல் ; கொல்லுதல் ; தீற்றுதல் ; காலியாக்குதல் ; நீக்குதல் ; கைவிடுதல் ; ஒப்பமிடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 590 | 591 | 592 | 593 | 594 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துட்டகண்டகன் முதல் - துடைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியவற்றின், துடிகொட்டுபவன், புறத்துறை, செருக்குள்ளவன், விளைவிக்கும், கேடு, குடும்பத்துக்குக், துடிக்கூத்து, சங்கஞ்செடி, பணம், தொடரிச்செடி, குறுந்தடி, சிறுமை, சுறுசுறுப்பு, தொடங்குதல், தீமை

