தமிழ் - தமிழ் அகரமுதலி - திகை முதல் - திட்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திகை | திகைப்பு ; ஈளை ; மயக்கம் ; தேமல் ; திசை . |
| திகைத்தல் | மயங்குதல் ; அடங்குதல் ; சோர்தல் . |
| திகைதல் | முடிவுறுதல் ; தீர்மானமாதல் . |
| திகைதி | தேதி . |
| திகைப்பு | பிரமிப்பு ; ஈளை . |
| திகைப்பூடு | மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை . |
| திகைப்பூண்டு | மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை . |
| திங்கட்கண்ணியன் | சந்திரனை முடியிற்கொண்டவனான சிவன் . |
| திங்கட்கிழமை | சந்திரனுக்கு உரியதான நாள் ; வாரத்தின் இரண்டாம் நாள் . |
| திங்கட்குடையோன் | சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன் . |
| திங்கட்குலன் | சந்திரகுலப் பாண்டியன் . |
| திங்கட்குழவி | பிறைச்சந்திரன் . |
| திங்கண்முக்குடையோன் | அருகன் . |
| திங்கணாள் | சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிடம் . |
| திங்கள் | சந்திரன் ; மாதம் ; திங்கட்கிழமை ; பன்னிரண்டு . |
| திங்கள்மணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| திங்ஙு | வினைமுற்று விகுதிகள் . |
| திசாதிசை | வேறுபட்ட திசைகள் . |
| திசாமுகம் | திக்கு . |
| திசாயம் | குங்கிலியம் . |
| திசாலம் | பொழுது . |
| திசி | திசை . |
| திசிலன் | இராக்கதன் ; சந்திரன் . |
| திசை | திக்கு ; கோள் ஆட்சிக்காலம் ; நற்பேற்றுக்காலம் ; திரி ; நிலைமை ; அதிகாரத்துக்குட்பட்ட இடம் ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| திசைக்கல் | எல்லைக்கல் . |
| திசைகட்டுதல் | காண்க : திக்குக்காட்டுதல் . |
| திசைகாவல் | நாட்டின் அமைதியைக் காப்போன் ; திசைகாவல் வரி . |
| திசைச்சொல் | செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல் . |
| திசைத்தல் | மயங்குதல் . |
| திசைதப்புதல் | வழிதவறுதல் . |
| திசைநா | கொடிவேலிமரம் . |
| திசைநாற்கோணம் | நான்கு கோணத்திக்குகள் . |
| திசைப்பாலகர் | காண்க : திக்குப்பாலகர் . |
| திசைப்பு | திகைப்பு ; ஈளை . |
| திசைப்புரட்டன் | திசைகளை மாற்றுவோன் ; பெரும் பொய்யன் . |
| திசைபோதல் | எங்கும் பரவுதல் . |
| திசைமுகன் | நான்முகனான பிரமன் . |
| திசைமொழி | காண்க : திசைச்சொல் . |
| திசையடித்தல் | நல்லூழ் வாய்த்தல் . |
| திசையானை | காண்க : திக்கசம் . |
| திசையோனி | கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள் . |
| திட்குதல் | மனங்குலைதல் . |
| திட்டஞ்செய்தல் | கட்டளையிடுதல் ; ஏற்பாடுசெய்தல் . |
| திட்டம் | காணப்படுவது ; நிலவரம் ; கட்டளை ; செவ்வை ; ஏற்பாடு ; மதிப்பு ; உறுதி ; நிறைவு ; கட்டளை அளவு ; அரசிறை மதிப்பு ; செலவு மதிப்பு ; சாகுபடி மதிப்பு முதலியன . |
| திட்டவட்டம் | செவ்வை ; ஏற்பாடு ; உறுதி . |
| திட்டனம் | இலுப்பைமரம் . |
| திட்டாணி | மரத்தைச் சுற்றிய மேடை . |
| திட்டாந்தப்பேச்சு | உறுதிவார்த்தை ; கற்பனையாகப் பேசும் பேச்சு . |
| திட்டாந்தப்போலி | இயைபில்லாத எடுத்துக் காட்டு . |
| திட்டாந்தம் | எடுத்துக்காட்டு ; உறுதி . |
| திட்டி | திட்டிவாயில் ; மேடு ; துவாட்டா என்னும் தேவதச்சன் ; பலகணி ; பார்வை ; காண்க : மஞ்சிட்டி ; திருட்டிப்பொட்டு ; கண்ணேறு தினை ; மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து . |
| திட்டித்தம்பம் | கண்கட்டுவித்தை . |
| திட்டித்தல் | புதிதாக உண்டாக்குதல் . |
| திட்டிப்பொட்டு | கண்ணேறு படாமலிருக்கக் கன்னத்தில் வைக்கும் மைப்பொட்டு . |
| திட்டிவாசல் | பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில் ; சிறிய வாயில் . |
| திட்டிவாயில் | பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில் ; சிறிய வாயில் . |
| திட்டிவிடம் | பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு . |
| திட்டு | மேட்டுநிலம் ; சிறு குன்று ; ஆற்றிடைக்குறை ; வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து ; இடைச்சுவர் ; வசை ; நூறு எண்கொண்ட காலாள் முதலியவற்றின் தொகை . |
| திட்டுதல் | வைதல் . |
| திட்டுமுட்டு | நெஞ்சடைப்பு ; குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை ; எதிர்நிந்தனை . |
| திட்டுமுட்டுப்படுதல் | மூச்சுவிட இயலாது துன்புறல் . |
| திட்டெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| திட்டை | மேட்டுநிலம் ; திண்ணை ; உரல் ; காண்க : வெள்ளெருக்கு ; ஓர் ஊர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 567 | 568 | 569 | 570 | 571 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திகை முதல் - திட்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிறிய, மதிப்பு, வாயில், திகைப்பு, திசை, உறுதி, பெரிய, கண்ணேறு, திட்டிவாயில், ஏற்பாடு, போது, மேட்டுநிலம், முதலியவற்றின், உதவும், உட்செல்வதற்கு, சாத்தப்படும், செவ்வை, கதவுகள், என்னும், பூண்டுவகை, சந்திரனை, செய்யும், மயங்கச், மயங்குதல், மிதித்தவர்களை, திங்கட்கிழமை, நாள், திசைச்சொல், சொல், திசைகாவல், திக்கு, கொண்ட, சந்திரன், கட்டளை

