தமிழ் - தமிழ் அகரமுதலி - தாசநெறி முதல் - தாண்டகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தாசநெறி | அடிமைநெறி ; சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை . |
| தாசமார்க்கம் | அடிமைநெறி ; சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை . |
| தாசரதி | தசரதன் மகனான இராமன் . |
| தாசரி | தாதன் ; மலைப்பாம்பு ; பாம்புப் பிடாரன் . |
| தாசன் | ஊழியக்காரன் ; அடிமை ; பக்தன் ; வைணவர் கூறும் வணக்கச்சொல் . |
| தாசனாப்பொடி | பற்பொடி . |
| தாசி | தோழி ; தொண்டுபுரிபவள் ; அடிமைப்பெண் ; விலைமகள் ; பரணிநாள் ; மருதோன்றிமரம் . |
| தாசியநாமம் | சமய உண்மை தெரிவிக்கும் சடங்கில் ஞானாசாரியன் கொடுக்கும் அடிமைப்பெயர் . |
| தாசியம் | அடிமைத்தன்மை . |
| தாசினாப்பொடி | காண்க : தாசனாப்பொடி . |
| தாசு | நாழிகைவட்டில் ; இரண்டரை நாழிகை கொண்ட ஒருமணி நேரம் ; சூதாடுகருவி . |
| தாசுவம் | கொடை . |
| தாசேரகம் | ஒட்டகம் . |
| தாசேரம் | ஒட்டகம் . |
| தாசோகம் | நான் அடியேன் ' என்று பொருள்படும் வணக்கச்சொல் ; வீரசைவர்களின் மாகேசுர பூசை . |
| தாட்கம் | கொடிமுந்தரிகை . |
| தாட்கவசம் | செருப்பு . |
| தாட்கூட்டு | மகளிர் கையணிவகை . |
| தாட்கோரை | கோரைப்புல்வகை . |
| தாட்கோல் | தாழ்ப்பாள் ; திறவுகோல் . |
| தாட்சண்ணியம் | காண்க : தாட்சிண்ணியம் . |
| தாட்சணம் | காண்க : தாட்சிண்ணியம் . |
| தாட்சணியம் | காண்க : தாட்சிண்ணியம் . |
| தாட்சணை | காண்க : தாட்சிண்ணியம் . |
| தாட்சம் | கொடிமுந்தரிகை ; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி . |
| தாட்சன் | கருடன் . |
| தாட்சாயணி | தக்கன் மகளாகத் தோன்றிய உமாதேவி ; இருபத்தேழு நட்சத்திரப் பொது ; உரோகிணிநாள் . |
| தாட்சி | தாமதம் ; இழிவு ; தாழ்ந்து பணிகை . |
| தாட்சிண்ணியம் | இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை . |
| தாட்சிணியம் | இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை . |
| தாட்சிணை | இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை . |
| தாட்டன் | பெருமைக்காரன் ; தலைமை ஆண் குரங்கு ; போக்கிரி ; ஒருவனை இகழ்ச்சி தோன்றக் குறிக்கும் சொல் . |
| தாட்டாந்தம் | எடுத்துக்காட்டு ; உபமேயம் . |
| தாட்டாந்திகம் | எடுத்துக்காட்டு ; உபமேயம் . |
| தாட்டான் | தலைவன் ; கணவன் . |
| தாட்டானை | கிழக்குரங்கு . |
| தாட்டி | திறமை ; தடவை ; துணிவு ; தடையின்மை ; பெருமிதம் ; கெட்டிக்காரி ; அகலம் ; ஆண்தன்மை வாய்ந்தவள் ; வைப்பாட்டி . |
| தாட்டிகம் | வலிமை ; இறுமாப்பு . |
| தாட்டிகன் | பலவான் ; தீங்குபுரிவோன் . |
| தாட்டுதல் | காலங்கடத்தல் ; நீக்குதல் ; மறுத்தல் . |
| தாட்டுப்பூட்டெனல் | வெகுளிக்குறிப்பு ; பகட்டுக்குறிப்பு . |
| தாட்டுப்போட்டு | குழப்பம் . |
| தாடடோட்டம் | புரட்டு ; குழப்பம் ; தாமதம் . |
| தாட்டோட்டு | புரட்டு ; குழப்பம் ; தாமதம் . |
| தாட்படை | கோழி . |
| தாட்பாள் | கதவடைக்குந் தாழ் ; எலிப்பொறியின் தாள் . |
| தாடகம் | காண்க : நீர்முள்ளி ; வீழி . |
| தாடங்கம் | பெண்கள் காதில் அணியும் தோடு . |
| தாடபத்திரம் | ஓலையாலான காதணி . |
| தாடம் | அடிக்கை . |
| தாடனம் | தட்டுதல் ; அடித்தல் ; வலக்கை இளம் பிறையாகவும் இடக்கை பதாகையாகவும் மார்பிற்கு நேரே எட்டுவிரல் உயர்த்திப் பிடிக்கும் அபிநயக்கைவகை . |
| தாடாளன் | மேன்மையுள்ளவன் ; பெருமுயற்சியுடையவன் . |
| தாடாற்றி | கடுமையைத் தணித்துச் சமநிலைக்குக் கொண்டுவருகை . |
| தாடி | மோவாய் ; மோவாய் மயிர் ; சேவற்கழுத்தில் தொங்கும் சதை ; பசு முதலியவற்றின் அலைதாடி ; வாளின் பிடி ; தட்டுகை . |
| தாடித்தல் | அடித்தல் ; கொட்டுதல் . |
| தாடிதபதம் | வலக்கால் படத்தின் நுனியை இடக்கால் பக்கத்தில் ஊன்றி நிற்கும் நிலை . |
| தாடிமஞ்சம் | சத்திக்கொடி . |
| தாடிமப்பிரியம் | மாதுளம்பழத்தை விரும்பும் கிளி . |
| தாடிமம் | சிற்றேலம் ; பூமாதுளை . |
| தாடிரி | காண்க : கண்டங்கத்திரி . |
| தாடு | வலிமை ; தலைமை . |
| தாடை | கன்னம் ; தாடையெலும்பு ; பெரும்பல் ; விருப்பம் ; மோவாய் . |
| தாடைஎலும்பு | கன்னத்தின் கீழெலும்பு . |
| தாண்டகச்சந்தம் | தாண்டக அடி மிக்குச் சந்த அடி குறைந்துவரும் செய்யுள் ; சந்த அடியும் தாண்டக அடியும் கலந்து ஓசையுடன் அமையும் பாட்டு . |
| தாண்டகம் | செய்யுள்வகை ; இருபத்தாறெழுத்தின் மிக்க எழுத்தான் அடிக்கொண்டுவரும் பா ; ஒரு நூல்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 556 | 557 | 558 | 559 | 560 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாசநெறி முதல் - தாண்டகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தாட்சிண்ணியம், கண்ணோட்டம், தாமதம், ஒருதலைச், சார்பு, மோவாய், குழப்பம், மரியாதை, இரக்கம், புரட்டு, சிவனை, வலிமை, உபமேயம், அடித்தல், அடிமைநெறி, அடியும், சந்த, தாண்டக, எடுத்துக்காட்டு, தலைமை, வழிபடுகை, வணக்கச்சொல், கொடிமுந்தரிகை, ஒட்டகம், சொல், வைத்து, உருவத், திருமேனியாகக், கோயிலில், தாசனாப்பொடி

