தமிழ் - தமிழ் அகரமுதலி - தழனாள் முதல் - தளதளத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தழனாள் | அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள் . |
| தழாத்தொடர் | ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந்தொடர் . |
| தழால் | தழுவுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் . |
| தழிச்சுதல் | தழுவுதல் ; புகுதல் . |
| தழிஞ்சி | தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை ; தோற்றவர் மேல் ஆயுதஞ் செலுத்தாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை . |
| தழீஇந்தழீஇமெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| தழு | தழுவுகை . |
| தழுக்குதல் | செழிப்படைதல் . |
| தழுத்தல் | காண்க : தழுதழுத்தல் . |
| தழுதணை | கற்பாசி ; படர்தாமரை . |
| தழுதழுத்தல் | நாக்குழறுதல் ; நாத்தடுமாறிப் பேசல் . |
| தழுதாழை | வாதமடக்கிமரம் . |
| தழும்பிடுதல் | புண்ஆறி வடுவாதல் . |
| தழும்பு | வடு ; குறி ; குற்றம் ; சிதைவு . |
| தழும்புதல் | தழும்புண்டாதல் ; பழகியிருத்தல் . |
| தழுவணி | குரவைக்கூத்து . |
| தழுவணை | பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை ; திண்டு ; கடலட்டை . |
| தழுவல் | தழுவுதல் ; கையில் எடுக்கக்கூடிய நெல்லரித் தொகுதி . |
| தழுவாவட்டை | காண்க : கடலட்டை . |
| தழுவு | அணைப்பு ; இருகையிலும் அணைக்கும் அளவு . |
| தழுவுதல் | அணைத்தல் ; மேற்கொள்ளுதல் ; அன்பாய் நடத்துதல் ; நட்பாக்கிக்கொள்ளுதல் ; உள்ளடக்குதல் ; பூசுதல் ; பொருந்துதல் ; சூழ்தல் ; புணர்தல் . |
| தழுவுதொடர் | ஒரு சொல் மற்றொரு சொல்லை நேரே தழுவிநிற்கும் தொடர் . |
| தழூஉ | அணைப்பு ; மகளிராடும் குரவைக்கூத்து . |
| தழை | இலை ; தளிர் ; மயிற்றோகை ; பீலிக்குடை ; தழையாலான மகளிர் உடை ; ஒரு மாலைவகை ; காண்க : பச்சிலை ; தழைகை ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு . |
| தழைக்கண்ணி | இலைமாலை . |
| தழைத்தல் | செழித்தல் ; பூரித்தல் ; மிகுதல் ; வளர்ச்சியடைதல் ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேராத சீட்டுகளை இறக்குதல் . |
| தழைத்தானை | இலையாற் செய்யப்பட்ட மேலாடை . |
| தழைதல் | தளிர்த்தல் ; செழித்தல் ; தாழ்தல் . |
| தழைதாம்பு | தழையும் சிறுகொம்பும் . |
| தழைப்பு | செழிப்பு ; தளிர்த்தல் . |
| தழையணி | காண்க : தழையுடை . |
| தழையிடுவார் | பூவும் இலையும் கோயிலுக்குத் தந்து பணிசெய்வோர் . |
| தழையுடை | தழையாலான உடை . |
| தழைவு | தளிர்ப்பு ; குழை ; செழிப்பு ; வளமை ; மிகுதி . |
| தழைவுகொடுத்தல் | பலமுடைமையாதல் . |
| தள் | காண்க : தள்ளு . |
| தள்ளம்பாறுதல் | தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் . |
| தள்ளமாறுதல் | தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் . |
| தள்ளல் | பொய் . |
| தள்ளாட்டம் | அசைவு ; தடுமாற்றம் ; சோர்வு . |
| தள்ளாடுதல் | தடுமாறுதல் ; ஆடுதல் ; தத்தளித்தல் ; மனம் அலைதல் . |
| தள்ளாதகாலம் | கிழப்பருவம் . |
| தள்ளாதவன் | வலுவற்றவன் . |
| தள்ளாமை | தளர்ச்சி ; இயலாமை ; இல்லாமை . |
| தள்ளாவாரம் | சோம்பல் . |
| தள்ளிச்சி | உவர்மண் என்னும் பூநீறு . |
| தள்ளிப்போடுதல் | நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் . |
| தள்ளிவிடுதல் | நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் . |
| தள்ளிவெட்டி | மதிற்பொறிவகை . |
| தள்ளிவைத்தல் | இடம்விட்டு வைத்தல் ; நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் ; விலக்கிவைத்தல் . |
| தள்ளு | அகற்றுகை ; கழிவு ; நீக்குகை ; கைவிடல் . |
| தள்ளுண்டவன் | விலக்கப்பட்டவன் . |
| தள்ளுண்ணல் | தள்ளப்படுதல் . |
| தள்ளுதல் | விலகுதல் ; குன்றுதல் ; மறதியால் சோர்தல் ; தடுமாறுதல் ; கழித்தல் ; புறம்பாக்குதல் ; ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அமுக்குதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; மறத்தல் ; தூண்டுதல் ; தவறுதல் ; வலியுடைத்தாதல் ; வெளியேறுதல் ; முன்செல்லுமாறு தாக்குதல் . |
| தள்ளுபடி | தள்ளப்பட்டது ; கழிக்கப்பட்டது ; நீக்கப்பட்டது . |
| தள்ளுமட்டம் | யானையின் இளங்கன்று . |
| தள்ளுவண்டி | கையால் தள்ளிச்செலுத்தும் சிறுவண்டி . |
| தள்ளுறுதல் | தள்ளப்படுதல் ; வருந்துதல் . |
| தள்ளை | தாய் . |
| தளகர்த்தம் | படைத்தலைமை . |
| தளகர்த்தன் | படைத்தலைவன் . |
| தளசிங்கம் | பெருவீரன் . |
| தளதளத்தல் | பலமாதல் ; ஒளிர்தல் ; நெகிழ்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 549 | 550 | 551 | 552 | 553 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தழனாள் முதல் - தளதளத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தழுவுதல், சொல், அலைதல், தத்தளித்தல், நாள், தள்ளாடுதல், விலக்கிவிடுதல், ஒத்திவைத்தல், அசைதல், தருக்கத்தில், இருத்தல், தடுமாறுதல், தள்ளப்படுதல், தள்ளு, பெருங்கலக்கத்தில், அடைதல், தோல்வி, செழிப்பு, தழுதழுத்தல், குரவைக்கூத்து, புறத்துறை, கூறும், சொல்லை, நேரே, கடலட்டை, அணைப்பு, செழித்தல், தளிர்த்தல், எண்ணிக்கையில், சீட்டாட்டத்தில், தழையாலான, தழையுடை

