முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அழிச்சாட்டியம் முதல் - அழுகற்புண் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அழிச்சாட்டியம் முதல் - அழுகற்புண் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அழுக்காமை | காண்க : அழுங்காமை . |
| அழுக்காறாமை | பொறாமை கொள்ளாமை . |
| அழுக்காறு | பிறர் ஆக்கம் பொறாமை ; மனத்தழுக்கு . |
| அழுக்கு | மாசு ; மனமாசு ; பொறாமை ; ஆணவ முதலிய பாசம் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை ; மலசலாதிகள் ; பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர் ; ஆமைவகை . |
| அழுக்குத்தேமல் | அழுக்கினால் உடலில் தோன்றும் புள்ளிகள் . |
| அழுக்குமூட்டை | பழைய வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றுபவன் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடைகள் . |
| அழுக்கெடுத்தல் | பற்றிய மாசுகளைப் போக்குதல் ; அழுக்குத் துணிகளைப் பெற்றுச் செல்லுதல் . |
| அழுகண் | கண்ணோய் வகை . |
| அழுகண்ணி | பூண்டுவகை . |
| அழுகல் | பதனழிந்தது ; தூய்மையில்லாதது . |
| அழுகள்ளன் | பாசாங்கு செய்வோன் . |
| அழுகற்சரக்கு | அழுகின பண்டம் ; அழுகுதற்குரிய பண்டம் ; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி . |
| அழுகற்சிரங்கு | நீர்கசியும் சிரங்கு . |
| அழுகற்புண் | அழுகின இரணம் . |
| அழிச்சாட்டியம் | தீம்பு ; கேடு . |
| அழிசெய்தல் | கெடுத்தல் . |
| அழிசெலவு | தோட்டவிருத்தி முதலியவற்றிற்கு ஆகும் செலவு . |
| அழிஞ்சில் | ஒரு மரம் . |
| அழிஞ்சு | ஒரு மரம் . |
| அழிஞ்சுக்காடு | பாலைநிலம் . |
| அழித்தல் | செலவழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; குலைத்தல் ; உள்ளதை மாற்றுதல் ; மறப்பித்தல் ; தடவுதல் ; நீக்குதல் ; நிந்தித்தல் ; விடைகாணுதல் . |
| அழித்தழித்து | திரும்பத்திரும்ப . |
| அழித்து | மீட்டும் ; மாறுபாடாய் . |
| அழித்துச்சொல் | இழித்துக்கூறல் . |
| அழித்துரை | இழித்துரை . |
| அழிதகவு | துன்பம் . |
| அழிதகன் | தீநெறி நடப்போன் . |
| அழிதகை | தகுதிக்கேடு . |
| அழிதல் | நாசமாதல் ; சிதைவுறுதல் ; தவறுதல் ; நிலைகெடுதல் ; தோற்றல் ; மனம்உருகுதல் ; வருந்துதல் ; மனம் உடைதல் ; பெருகுதல் ; பரிவுகூர்தல் ; செலவாதல் . |
| அழிதலை | தலையோடு . |
| அழிதூஉ | அலி . |
| அழிந்தோரை நிறுத்தல் | நிலைதாழ்ந்தாரை மீண்டும் நிலைபெறச் செய்தல் ; வேளாண் மாந்தர் இயல்புகளுள் ஒன்று . |
| அழிநோய் | குட்டம் . |
| அழிப்படுத்தல் | கதிரைக் கடாவிட்டு உழக்குதல் . |
| அழிப்பன் | சங்கரிப்பவன் ; துன்புறுத்துபவன் . |
| அழிப்பாங்கதை | விடுகதை . |
| அழிப்பாளன் | தட்டான் . |
| அழிப்பாளி | வீண்செலவு செய்வோன் . |
| அழிப்பு | சங்காரம் ; குற்றம் . |
| அழிபசி | மிக்க பசி . |
| அழிபடர் | மிகுந்த துன்பம் . |
| அழிபடுதல் | சிதைதல் ; செலவாதல் . |
| அழிபயல் | தீநெறியில் நடக்கும் பையன் . |
| அழிபாடு | அழிவு . |
| அழிபு | கேடு ; தோல்வி . |
| அழிபுண் | அழுகு இரணம் . |
| அழிபெயல் | மிக்க மழை . |
| அழிம்பன் | தீம்பு செய்பவன் . |
| அழிம்பு | தீம்பு ; வெளிப்படையான பொய் ; அவதூறு ; நீதியற்ற வழக்கு . |
| அழிமதி | கெடுமதி ; அழிமானம் . |
| அழிமேய்ச்சல் | பயிர் முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை . |
| அழியமாறுதல் | தன்நிலையை அழித்துவேறாதல் . |
| அழியல் | மனக்கலக்கம் . |
| அழியாமுதல் | நிலையான மூலநிதி ; கடவுள் . |
| அழியாமை | அழிவின்மை ; மனம் கலங்காமை . |
| அழியாவியல்பு | அருகன் எண்குணத்துள் ஒன்று . |
| அழியாவிளக்கு | நந்தாவிளக்கு . |
| அழிவது | கெடுதி . |
| அழிவழக்கு | அக்கிரம விவகாரம் ; வீண்வாதம் ; இழிந்தோர் வழக்கு . |
| அழிவாய் | சங்கமுக மணல்மேடு . |
| அழிவி | கழிமுகம் . |
| அழிவு | கேடு ; தீமை ; செலவு ; வறுமை ; வருத்தம் ; மனவுறுதியின்மை ; தோல்வி ; கழிமுகம் . |
| அழிவுகாலம் | கெட்ட காலம் ; ஊழி . |
| அழிவுபாடு | அழிவு . |
| அழுக்ககற்றி | வண்ணான் காரநீர் . |
| அழுக்கடித்தல் | அழுக்குப் போக்குதல் . |
| அழுக்கணவன் | இலை தின்னும் புழு . |
| அழுக்கம் | கவலை . |
| அழுக்கறுத்தல் | பொறாமை கொள்ளுதல் . |
| அழுக்கறுதல் | மாசு போதல் ; பொறாமை நீங்குதல் . |
| அழுகறுப்பான் | பொறாமை கொள்பவன் . |
| அழுக்கன் | ஈயாதவன் , உலோபி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழிச்சாட்டியம் முதல் - அழுகற்புண் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொறாமை, தீம்பு, அழிவு, கேடு, மனம், துன்பம், செலவாதல், ஒன்று, கழிமுகம், வழக்கு, தோல்வி, மிக்க, மரம், கெடுத்தல், மாசுபடிந்த, வெளுத்தற்குரிய, மாசு, போக்குதல், செய்வோன், இரணம், பண்டம், அழுகின, செலவு

