தமிழ் - தமிழ் அகரமுதலி - தருமதி முதல் - தலமுகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தருமதி | நிலுவை . |
| தருமதேவதை | அறக்கடவுள் ; இயக்கிதேவி ; யமன் . |
| தருமநாள் | பரணிநாள் . |
| தருமநியாயம் | அறநூல்களில் கூறும் நீதி . |
| தருமநீதி | அறநூல்களில் கூறும் நீதி . |
| தருமப்பள்ளி | அறப்புறமான கல்விச்சாலை . |
| தருமப்பிணம் | ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம் . |
| தருமப்பெட்டி | தருமக் காணிக்கையிடும் பெட்டி . |
| தருமபத்தினி | கணவனோடு உடனிருந்து வைதிகக் கருமங்களை நடத்தும் மனைவி . |
| தருமபீடிகை | புத்தர் பாதங்கள் அமைந்த பீடம் . |
| தருமபுத்திரன் | பாண்டவருள் மூத்தோன் ; தருமபத்தினியிடம் பிறந்த மகன் . |
| தருமபுரம் | யமலோகம் ; சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம் . |
| தருமம் | நற்செயல் ; விதி ; நீதி ; தானம் முதலிய அறம் ; நல்லொழுக்கம் ; கடமை ; இயற்கை ; பதினெண்வகைப்பட்ட அறநூல் . |
| தருமமன்று | தருமசபை . |
| தருமமுதல்வன் | அருகக்கடவுள் . |
| தருமமூர்த்தி | தருமமே உருவானவன் . |
| தருமராசன் | பாண்டவருள் மூத்தவன் ; புத்தன் ; அருகன் ; யமன் ; பாலைமரம் . |
| தருமரேகை | அறஞ்செய் குணத்தைக் குறிக்கும் கைரேகை . |
| தருமலோபம் | அறக்கடமை தவறுகை . |
| தருமவட்டி | நியாயவட்டி . |
| தருமவதி | அறச்செயலுள்ள பெண் . |
| தருமவந்தன் | காண்க : தருமவான் . |
| தருமவாகனன் | அறமே வடிவான காளையை ஊர்தியாகக் கொண்ட சிவன் . |
| தருமவாசனம் | காண்க : தருமசபை . |
| தருமவாட்டி | அறச்செயலுள்ள பெண் . |
| தருமவாடி | பிச்சை வழங்குமிடம் . |
| தருமவாளன் | அறச்சிந்தையுள்ளோன் . |
| தருமவான் | அறச்சிந்தையுள்ளோன் . |
| தருமவினைஞர் | அறப்புறங் காவலர் . |
| தருமவைத்தியசாலை | நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவம் செய்யுமிடம் . |
| தருமன் | அறக்கடவுள் ; யமன் ; தருமபுத்திரன் ; புத்தன் ; அருகன் ; பாண்டவருள் மூத்தோன் ; திருக்குறள் உரைகாரருள் ஒருவர் . |
| தருமாசனத்தார் | நீதிபதிகள் . |
| தருமாசனத்துக் கருத்தாக்கள் | நீதிபதிகள் . |
| தருமாசனம் | காண்க : தருமசபை ; பார்ப்பனருக்குவிட்ட இறையிலி நிலம் . |
| தருமாத்திகாயம் | சமரணது பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்கு உதவும் பொருள் . |
| தருமாத்துமா | காண்க : தருமவான் . |
| தருமாதருமம் | நியாய அநியாயம் . |
| தருமி | காண்க : தருமவான் ; ஒரு வேதியத் தொண்டன் ; தருமத்தையுடைய பொருள் . |
| தருமிருகம் | குரங்கு . |
| தருராசன் | மரங்களின் அரசனாகிய பனை . |
| தருவாரி | கல்லுப்பு . |
| தருவி | துடுப்பு ; ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி ; பேர் மாத்திரத்துக்கு உள்ளது . |
| தருவித்தல் | வருவித்தல் |
| தருவை | பெரிய ஏரி . |
| தரூடம் | தாமரைப்பூ . |
| தரை | பூமி ; நிலம் ; ஆணித்தலை ; நரம்பு ; சூற்பை . |
| தரைக்காற்று | பூமியில் எழுந்து வீசுங்காற்று . |
| தரைகாணுதல் | அளவிடுதல் ; கீழ்விழுதல் . |
| தரைதட்டுதல் | கப்பல் தரையில் மோதுதல் . |
| தரைப்படுத்துதல் | தோற்கச்செய்தல் . |
| தரைமகன் | பூமியின் மகனான செவ்வாய் . |
| தரைமட்டம் | நிலமட்டம் . |
| தரையர் | பூமியிலுள்ளோர் . |
| தரையிடுதல் | அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல் . |
| தரையோடு | தரையிற் பாவுதற்குரிய ஓடு . |
| தல்லம் | குழி ; நீரிருக்கும் பள்ளம் . |
| தல்லி | தாய் . |
| தல்லிகை | திறப்பு . |
| தல்லு | புணர்ச்சி . |
| தல்லுதல் | இடித்து நசுக்குதல் . |
| தல்லுமெல்லு | இழுபறி . |
| தல்லை | தெப்பம் ; இளம்பெண் . |
| தலக்கம் | இழிசெயல் . |
| தலக்கு | நாணம் . |
| தலகம் | தடாகம் . |
| தலசம் | பூமியில் தோன்றிய முத்து . |
| தலசயனம் | மாமல்லபுரம் முதலியவற்றிற் போலத் திருமால் நிலத்திற் பள்ளிகொண்ட திருக்கோலமுள்ள இடம் . |
| தலசுத்தி | உண்கலம் இடுவதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுத் தூய்மை செய்கை ; பிறப்பு இறப்பு நிகழ்ந்த வீட்டை மந்திர நீரால் தூய்மைசெய்தல் . |
| தலத்தாது | காண்க : நிலப்பனை . |
| தலத்தார் | கோயில் அதிகாரிகள் . |
| தலபுட்பம் | காண்க : தாழை . |
| தலம் | இடம் ; பூமி ; உலகம் ; தெய்வத்தலம் ; ஆழம் ; காடு ; கீழ் ; வீடு ; செய் ; தலை ; நகரம் ; இலை ; உடலுறுப்பு ; இதழ் . |
| தலமுகம் | நிருத்தக் கைவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 542 | 543 | 544 | 545 | 546 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தருமதி முதல் - தலமுகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தருமவான், தருமசபை, பொருள், பாண்டவருள், யமன், நீதி, அறச்சிந்தையுள்ளோன், இடம், பூமியில், நிலம், பூமி, நீதிபதிகள், அருகன், தருமபுத்திரன், கூறும், அறநூல்களில், மூத்தோன், புத்தன், அறச்செயலுள்ள, அறக்கடவுள், பெண்

