தமிழ் - தமிழ் அகரமுதலி - தம்பனை முதல் - தமிழ்நடவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தம்பனை | ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்துக் கட்டுகை . |
| தம்பா | கள் அளக்குங் கருவி . |
| தம்பி | பின் பிறந்தோன் ; வயதிற் சிறியவனைக் குறிக்கும் சொல் ; தம்பிமுறையான் . |
| தம்பி | (வி) வாயுவையடக்கு . |
| தம்பிக்கை | ஒருவகைச் சிறுசெம்பு . |
| தம்பிகை | ஒருவகைச் சிறுசெம்பு . |
| தம்பிடித்தல் | மூச்சடக்குதல் . |
| தம்பித்தல் | அசையாதிருத்தல் ; மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல் . |
| தம்பிராட்டி | தனக்குத்தானே தலைவி ; உடன் கட்டையேறுபவள் . |
| தம்பிரான் | கடவுள் ; தனக்குத்தானே தலைவன் ; திருவாங்கூர் அரசர் பட்டப்பெயர் ; சைவத்துறவி ; துறவித் தலைவர் . |
| தம்பிரான்தோழன் | சிவபிரானுக்குத் தோழனாகிய சுந்தரமூர்த்தி நாயனார் . |
| தம்புதல் | குட்டுதல் . |
| தம்புரா | பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி . |
| தம்பூரு | பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி . |
| தம்போலி | வச்சிரப்படை . |
| தம்மடக்குதல் | காண்க : தம்பிடித்தல் . |
| தம்மதம் | உடன்பாடு ; காண்க : நஞ்சுண்டை . |
| தம்மவன் | சுற்றத்தான் . |
| தம்மனை | தாய் . |
| தம்மாகும்மா செய்தல் | வீண்செலவு செய்தல் . |
| தம்மான் | தலைவன் . |
| தம்மி | தாமரை . |
| தம்மிடுதல் | நிறுத்தப்படுதல் ; தணிதல் . |
| தம்மிலம் | மகளிர் மயிர்முடி . |
| தம்முன் | முன்னோன் , அண்ணன் . |
| தம்மோய் | காண்க : தம்மனை . |
| தம்மோன் | காண்க : தம்மான் . |
| தமக்கை | அக்காள் ; தமக்கை ; முறையாள் . |
| தமகன் | கொல்லன் . |
| தமசம் | இருள் ; தாமதகுணம் . |
| தமசு | இருள் ; தாமதகுணம் . |
| தமத்தமப்பிரபை | காண்க : தமப்பிரபை . |
| தமத்தல் | தணிதல் ; விலை மலிதல் ; நிரம்புதல் . |
| தமதமவெனல் | நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு . |
| தமப்பன் | தகப்பன் . |
| தமப்பிரபை | ஏழ் நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம் . |
| தமம் | இருள் ; தாமதகுணம் ; இராகு ; சேறு ; கள்வரை வாட்டும் ஒருவகை நரகம் ; ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களிற் செல்லாமல் மனத்தை மறித்தல் . |
| தமயன் | மூத்த சகோதரன் ; அண்ணன் முறையான் . |
| தமர் | உற்றார் ; தமக்கு வேண்டியவர் ; சிறந்தோர் ; வேலையாள்கள் ; கருவியால் அமைத்த துளை ; துளையிடும் கருவி . |
| தமர்ப்படுதல் | இணங்கல் ; விரும்பல் . |
| தமர்மை | நட்பு . |
| தமரகம் | மூச்சுக்குழல் ; உடுக்கை . |
| தமரகவாயு | நெஞ்சடைப்பு நோய் ; இரைப்பு நோய் . |
| தமரத்தை | ஒரு மரவகை . |
| தமரம் | ஒலி ; அரக்கு ; தமரத்தைமரம் . |
| தமராணி | துளையாணி ; தமரில் மாட்டும் ஊசி . |
| தமரித்தல் | ஒலித்தல் ; விரும்பல் . |
| தமரிப்பு | விருப்பம் ; ஒலி . |
| தமருகம் | உடுக்கை . |
| தமரூசி | துளையிடும் ஊசி ; தமரில் மாட்டும் ஆணி . |
| தமரோசை | கிலுகிலுப்பைச்செடி . |
| தமலி | சட்டுவம் . |
| தமள் | உற்றாள் . |
| தமன் | உற்றான் . |
| தமனகம் | காண்க : மருக்கொழுந்து . |
| தமனம் | காண்க : மருக்கொழுந்து . |
| தமனி | வன்னிமரம் ; நல்ல இரத்தம் ஓடும் குழாய் . |
| தமனியக்கூடம் | பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம் . |
| தமனியப்பொதியில் | பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம் . |
| தமனியம் | பொன் . |
| தமனியன் | இரணியன் ; பிரமன் ; சனி . |
| தமாசு | வேடிக்கை . |
| தமாலகி | காண்க : கீழாநெல்லி . |
| தமாலம் | பச்சிலைமரம் ; இலை ; நுதற்குறி ; மூங்கில் தோல் . |
| தமி | தனிமை ; ஒப்பின்மை ; கதியின்மை ; இரவு . |
| தமிசிரம் | குறைவு ; இருள் . |
| தமிசு | வேங்கைமரம் . |
| தமிட்டம் | காண்க : தம்பட்டம் . |
| தமித்தல் | தனியாதல் ; தண்டித்தல் . |
| தமியம் | கள் . |
| தமியள் | திக்கற்றவள் ; தனியாயிருப்பவள் . |
| தமியன் | திக்கற்றவன் ; தனித்தவன் . |
| தமியாட்டி | காண்க : தமியள் . |
| தமிழ் | இனிமை ; நீர்மை ; தமிழ்மொழி ; தமிழ் நூல் ; தமிழ்நாடு ; தமிழர் . |
| தமிழ்க்குச்சரி | குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| தமிழ்க்கூத்தர் | தமிழ்க்கூத்து ஆடுபவர் . |
| தமிழ்நடவை | தமிழ் வழங்கும் இடமாகிய தமிழகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 538 | 539 | 540 | 541 | 542 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தம்பனை முதல் - தமிழ்நடவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இருள், கருவி, பொன், தாமதகுணம், தமிழ், நோய், உடுக்கை, நரகம், தமரில், துளையிடும், விரும்பல், மருக்கொழுந்து, அம்பலம், தமியள், வேய்ந்த, கூடுதற்குரிய, தமப்பிரபை, பலர், மாட்டும், தமக்கை, தனக்குத்தானே, தலைவன், தம்பிடித்தல், சிறுசெம்பு, தம்பி, ஒருவகைச், பக்கச், சுருதிக்குரிய, தணிதல், அண்ணன், தம்மான், செய்தல், நரம்புக், தம்மனை, சொல்

