தமிழ் - தமிழ் அகரமுதலி - ஞாண் முதல் - ஞானதீட்சை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஞாண் | கயிறு ; வில்லின் நாண் . |
| ஞாத்தல் | கட்டுதல் ; பொருந்துதல் . |
| ஞாதம் | அறியப்பட்டது ; அறிபவன் . |
| ஞாதவ்வியம் | அறியவேண்டியது . |
| ஞாதா | ஞானவான் ; அறிகிறவன் . |
| ஞாதி | பங்காளி , தாயாதி ; சுற்றம் ; தொலையுறவினர் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் . |
| ஞாதிரு | அறிபவன் ; ஆன்மா . |
| ஞாதுரு | அறிபவன் ; ஆன்மா . |
| ஞாதுருத்துவம் | அறிகிறவனான தன்மை . |
| ஞாதேயம் | உறவு ; உறவுத்தன்மை . |
| ஞாபகக்கருவி | அறிதற்கு உதவுங் கருவி . |
| ஞாபகக்குறி | நினைவூட்டுவதற்கு அடையாளமாக வைத்த பொருள் . |
| ஞாபகக்குறிப்பு | நினைவூட்டுவதற்குரிய சீட்டு . |
| ஞாபகக்குறை | நினைவின்மை . |
| ஞாபகங்கூறல் | குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி . |
| ஞாபகசக்தி | நினைவாற்றல் . |
| ஞாபகப்படுத்துதல் | நினைப்பூட்டுதல் ; நினைவிற் கொள்ளுதல் . |
| ஞாபகம் | நினைவு ; அறிவு ; குறிப்பிப்பது ; நற்பொருள் ; மேற்கோள் இலக்கியம் ; குறிப்பு . |
| ஞாபகம்பண்ணுதல் | காண்க : ஞாபகப்படுத்துதல் ; மனப்பாடம் பண்ணுதல் . |
| ஞாபகமறதி | நினைவின்மை . |
| ஞாபகவேது | அறிவிற்குக் காரணமாயது . |
| ஞாபித்தல் | நினைப்பூட்டுதல் . |
| ஞாய் | தாய் ; உன் தாய் . |
| ஞாயம் | காண்க : நியாயம் . |
| ஞாயில் | கோட்டையின் ஏவறை . |
| ஞாயிறு | சூரியன் ; ஞாயிற்றுக்கிழமை ; சௌரமாதம் . |
| ஞாயிறுதிரும்பி | காண்க : சூரியகாந்தி . |
| ஞாயிறுபோது | உச்சிப்போது . |
| ஞாயிறுவணங்கி | ஒரு செடிவகை . |
| ஞாலம் | உலகம் , பூமி , நிலம் ; உயர்ந்தோர் ; மாயவித்தை . |
| ஞாலமாது | ஊமத்தை ; நிலமகள் . |
| ஞாலித்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
| ஞாலுத்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
| ஞாலுதட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
| ஞாலுதல் | தொங்குதல் ; பொழுதுசாய்தல் . |
| ஞாழ் | யாழ் . |
| ஞாழல் | காண்க : புலிநகக்கொன்றை ; மயிற் கொன்றைமரம் ; பொன்னாவிரை ; குங்குமமரம் ; கோங்குமரம் ; மரவயிரம் ; ஆண்மரம் ; மல்லிகைவகை . |
| ஞாழல்மாது | காண்க : ஊமத்தை . |
| ஞாழி | வள்ளைக்கொடி . |
| ஞாளம் | தண்டு . |
| ஞாளி | நாய் ; கள் . |
| ஞாளிதம் | காண்க : ஞாழி . |
| ஞாளியூர்தி | நாயை ஊர்தியாக உடைய வைரவன் . |
| ஞாற்சி | தொங்குகை . |
| ஞாற்று | தொங்குகை . |
| ஞாற்றுதல் | தொங்கவிடுதல் . |
| ஞாறுதல் | மணம்வீசுதல் ; தோன்றுதல் . |
| ஞான்றஞாயிறு | சூரியன் மறையும் நேரம் . |
| ஞான்று | நாள் ; காலத்தில் ; ஓர் இடைச்சொல் . |
| ஞான்றுகொள்ளுதல் | கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல் . |
| ஞான்றை | காலம் . |
| ஞானக்கண் | அறிவாகிய பார்வை . |
| ஞானக்கந்தம் | காண்க : விஞ்ஞானம் . |
| ஞானக்காட்சி | இறையறிவு ; காண்க : ஞானதிருட்டி . |
| ஞானக்கூத்தன் | ஞானத்தில் கூத்தாடும் சிவன் . |
| ஞானக்கை | பரஞானமாகிய முத்திசாதனம் . |
| ஞானகிருதம் | தெரிந்து செய்த பாவம் . |
| ஞானசத்தி | முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சத்தி . |
| ஞானசபை | ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை . |
| ஞானசமாதி | துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை . |
| ஞானசரிதன் | ஞானநெறியில் ஒழுகுபவன் . |
| ஞானசரீரம் | அறிவுமயமான உடம்பு . |
| ஞானசாதகன் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன் . |
| ஞானசாதனம் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி . |
| ஞானசாதனை | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி . |
| ஞானசித்தன் | அறிவு கைவரப்பெற்றவன் . |
| ஞானசுகம் | இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்ப மகிழ்ச்சி . |
| ஞானசூனியன் | அறிவற்றவன் . |
| ஞானத்தாளன் | காண்க : ஞானி . |
| ஞானத்தில் ஞானம் | ஞானநிட்டை கூடுகை . |
| ஞானத்தில்யோகம் | ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை . |
| ஞானத்திறைவி | அறிவிற்குரிய பெண்தெய்வமான கலைமகள் . |
| ஞானதிட்டி | ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் . |
| ஞானதிருட்டி | ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் . |
| ஞானதீட்சை | ஞானவுபதேசவகை ; ஞான ஸ்நானக்கிரியை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 522 | 523 | 524 | 525 | 526 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞாண் முதல் - ஞானதீட்சை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அணியும், கழுத்தில், சிற்றுருக்களோடு, சேர்த்து, மோட்சசாதன, அணிகலவகை, ஞானநெறி, மகளிர், அறிபவன், முறையில், அடைதற்கு, வேண்டும், ஆசாரிய, அருள், உணர்ச்சி, முக்கால, ஞானத்தால், அறிதல், பயிற்சி, ஞாழி, நினைப்பூட்டுதல், அறிவு, ஞாபகப்படுத்துதல், நினைவின்மை, ஆன்மா, தாய், சூரியன், ஞானத்தில், ஞானதிருட்டி, தொங்குகை, ஊமத்தை, ஞானம்

