தமிழ் - தமிழ் அகரமுதலி - சோமராகம் முதல் - சோழியப்பை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சோமராகம் | பாலைப் பண்களுள் ஒன்று . |
| சோமவட்டம் | அமிர்தம் பெருகும் இடம் என்று கருதப்படும் புருவமத்தி . |
| சோமவல்லரி | காண்க : பொன்னாங்காணி . |
| சோமவல்லி | சீந்திற்கொடி . |
| சோமவாரம் | திங்கட்கிழமை . |
| சோமன் | சந்திரன் ; சோமசுந்தரன் ; குபேரன் ; ஒரு வள்ளல் ; எட்டு வசுக்களுள் ஒருவன் ; கருப்பூரம் ; சவர்க்காரம் ; வேட்டி ; ஆடை ; நீலபாடாணம் ; வெள்ளிமணல் . |
| சோமாறி | சோம்பேறி ; ஏனாதியர்வகை ; சமையற்காரன் . |
| சோமாறுதல் | இரவல் வாங்குதல் ; ஒருத்தியைப் பலர் புணர்தல் ; திருடுதல் ; பண்டமாற்றுதல் ; ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல் ; சோம்புதல் ; பின்வாங்குதல் . |
| சோமி | துர்க்கை . |
| சோமேசன் | காண்க : சோமசேகரன் . |
| சோர் | சோர்வு ; வஞ்சகம் ; பகட்டு . |
| சோர்ச்சி | தளர்வு ; வஞ்சகம் . |
| சோர்த்தல் | திருடுதல் . |
| சோர்தல் | தளர்தல் ; மனம்தளர்தல் ; மூர்ச்சித்தல் ; நழுவுதல் ; கண்ணீர் முதலியன வடிதல் ; கசிதல் ; கழலுதல் ; வாடுதல் ; தள்ளாடுதல் ; தடுமாறுதல் ; இறத்தல் ; விட்டொழிதல் ; துயரப்படுதல் ; உடலின் தைலம் முதலியன இறங்குதல் . |
| சோர்பதன் | தளர்ந்த காலம் . |
| சோர்பு | தளர்ச்சி . |
| சோர்பொழுது | மாலைக்காலம் . |
| சோர்வு | தளர்ச்சி ; மறதி ; மெலிவு ; இழுக்கு ; சொரிகை ; திருட்டு ; விபசாரம் . |
| சோர்வுபார்த்தல் | ஏமாறின சமயம் பார்த்தல் . |
| சோரகவி | பிறர் பாடியதைத் தான் பாடியதாகக் கூறுபவன் ; திருட்டுப் பாடல் . |
| சோரகன் | திருடன் . |
| சோரங்கொடுத்தல் | பறிகொடுத்தல் ; மனைவியின் கற்பழியப் பெறுதல் ; துன்புறுதல் . |
| சோரத்தனம் | திருட்டுக்குணம் ; ஏமாற்றுங்குணம் ; விபசாரம் . |
| சோரத்துவம் | திருட்டுக்குணம் . |
| சோரப்பார்வை | திருட்டுப்பார்வை ; விபசாரிகளின் நோக்கு . |
| சோரப்பெய்தல் | மழை மிகுதியாகப் பெய்தல் . |
| சோரப்போடுதல் | ஒரு செயலை ஆறப்போடுதல் ; பின்தள்ளிப் போடுதல் . |
| சோரபயம் | கள்வர் பயம் . |
| சோரபுத்திரன் | கணவனல்லாத பிறனுக்குப் பிறந்த புதல்வன் . |
| சோரம் | களவு ; வஞ்சனை ; விபசாரம் . |
| சோரம்போதல் | வைப்புப்பாடாணவகை ; களவுபோதல் ; விபசாரஞ்செய்தல் . |
| சோரமார்க்கம் | விபசாரம் . |
| சோரல் | தளர்தல் ; கெடுதல் . |
| சோரவித்தை | திருட்டுத்தொழில் . |
| சோரன் | திருடன் ; விபசாரம் செய்பவன் ; ஆட்டுக்குட்டி . |
| சோராவரி | கொள்ளை ; வலாற்காரம் . |
| சோராவாரி | கொள்ளை ; வலாற்காரம் . |
| சோரி | இரத்தம் ; மழை ; சிறுசெருப்படிச்செடி . |
| சோரியிளநீர் | செவ்விளநீர் . |
| சோல்தல் | கைப்பற்றுதல் ; மீட்டுக்கொள்ளுதல் . |
| சோலுதல் | கைப்பற்றுதல் ; மீட்டுக்கொள்ளுதல் . |
| சோலி | செயல் ; தொந்தரவு ; முலைக்கச்சு ; தோணியிலொதுக்கிடம் ; இரவிக்கைவகை . |
| சோலிக்காரன் | காரியக்காரன் ; தொல்லை கொடுப்பவன் . |
| சோலிசெய்தல் | வேலைசெய்தல் ; நேரம் போக்குதல் . |
| சோலிமாலி | தொல்லை . |
| சோலை | மரங்கள் செறிந்து நிழல்செய்யும் இடம் ; சீனிமரம் . |
| சோலைநுகர்வு | வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சி இன்பம் துய்த்தல் . |
| சோலைமலை | காண்க : அழகர்மலை . |
| சோவானை | மங்களகரமான ஆரத்திப்பாட்டு . |
| சோவி | காண்க : சோகி . |
| சோவெனல் | ஒலிக்குறிப்பு . |
| சோவை | காண்க : சோகை . |
| சோழகக்கச்சான் | தென்மேற்குக் காற்று . |
| சோழகக்கொண்டல் | தென்கீழ்த்திசைக் காற்று . |
| சோழகம் | தென்காற்று . |
| சோழகன் | ஒரு காட்டுச் சாதியான் ; கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று . |
| சோழங்கன் | சோழன் . |
| சோழநாடு | சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி . |
| சோழம் | காண்க : சோழநாடு ; பார்ப்பனனைக் கொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய் ; விடாதுபற்றித் துன்புறுத்துவோன் ; சோம்பேறி ; மூடன் . |
| சோழமண்டலம் | காண்க : சோழநாடு . |
| சோழன் | சோழவரசன் . |
| சோழி | காண்க : சோகி . |
| சோழிப்பல் | பலகறைபோன்ற பல் . |
| சோழியக்கடகம் | மண் அள்ளும் கூடை , சாட்டுக்கூடை . |
| சோழயக்கூடை | மண் அள்ளும் கூடை , சாட்டுக்கூடை . |
| சோழியப்பாரை | மண்வெட்டிவகை . |
| சோழியப்பை | இரப்போர் பை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 519 | 520 | 521 | 522 | 523 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோமராகம் முதல் - சோழியப்பை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விபசாரம், சோழநாடு, தொல்லை, மீட்டுக்கொள்ளுதல், கைப்பற்றுதல், சோகி, சோழன், சாட்டுக்கூடை, கூடை, அள்ளும், வலாற்காரம், காற்று, திருட்டுக்குணம், சோர்வு, திருடுதல், சோம்பேறி, இடம், வஞ்சகம், தளர்தல், ஒன்று, திருடன், தளர்ச்சி, முதலியன, கொள்ளை

