முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சொற்படுத்துதல் முதல் - சோகம்பாவனை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சொற்படுத்துதல் முதல் - சோகம்பாவனை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சொற்படுத்துதல் | இசைக்கு இணங்கப் பதமமைத்தல் . |
| சொற்படுதல் | பலன்மிகுதல் . |
| சொற்பத்திலேபார்த்தல் | காரியங்களை எளிதின் முடிக்க முயலுதல் ; நயமாக வாங்குதல் . |
| சொற்பதம் | சொல்லளவு ; சொல்லாற் குறிக்கப்படும் நிலை . |
| சொற்பபுத்தி | குறைந்த அறிவு ; இழிதன்மை . |
| சொற்பம் | சிறியது . |
| சொற்பவிலை | மலிவான விலை . |
| சொற்பழி | பிறர் கூறும் நிந்தைமொழி . |
| சொற்பழுத்தவர் | நாவன்மையுடையவர் . |
| சொற்பனம் | காண்க : சொப்பனம் . |
| சொற்பாடு | உடன்படிக்கை ; பழிச்சொல் . |
| சொற்பானு | இராகு . |
| சொற்பிரயோகம் | சொற்களை ஆளுகை . |
| சொற்பிழை | சொற்குற்றம் ; எழுத்துக் குற்றம் . |
| சொற்பின்வருநிலையணி | செய்யுளில் முன்வந்த சொல்லே வெவ்வேறு பொருளில் பின்னும் வரும் அணிவகை . |
| சொற்பு | சொல்லுகை . |
| சொற்புத்தி | புத்திமதி . |
| சொற்புரட்டு | பொய் . |
| சொற்புள் | பின் வருவதைத் சொல்லும் காக்கை . |
| சொற்பெருக்கு | சொற்பொழிவு . |
| சொற்பொருட்பின்வருநிலை | சொல்லும் பொருளும் ஒன்றே மறித்து வருவது . |
| சொற்பொருள்விரித்தல் | சொற்பொருள் விளங்க உருவு முதலானவற்றை விரித்துச் சொல்லும் உத்தி . |
| சொற்பொழிவு | அவையில் உரையாற்றுகை . |
| சொற்போர் | ஒரு பொருள் குறித்துப் பேசி வாதிடுவது . |
| சொற்றல் | சொல்லுதல் . |
| சொற்றாமம் | புகழ்ச்சி ; புகழ்மாலை . |
| சொற்றிரிபு | சொல்லின்கண் நிகழும் மாறுபாடு . |
| சொற்றிருத்தல் | உச்சரிப்பு நேர்மை ; எழுத்துப் பிழையின் திருத்தம் . |
| சொற்றொடர் | பல மொழிகள் கொண்ட வாக்கியம் முதலியன . |
| சொற்றொடர்நிலைச்செய்யுள் | காண்க : அந்தாதி . |
| சொறி | தினவு ; காண்க : சொறிசிரங்கு ; சுரசுரப்பு ; காஞ்சொறிச்செடி ; மீன்வகை . |
| சொறிக்கல் | செம்பாறாங்கல் ; மஞ்சள் அரைக்குங் கல் ; சுக்கான் கல் . |
| சொறிக்கிட்டம் | இரும்புத் துரு . |
| சொறிக்கட்டை | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| சொறிகொள்ளிநாய் | பைத்தியம் பிடித்த நாய் . |
| சொறிசிரங்கு | கடுந்தினவை உண்டாக்கக்கூடிய சொறிவகை . |
| சொறிதல் | தினவு நீங்க நகத்தால் தேய்த்தல் ; கெஞ்சிக்கேட்டல் ; தினவுண்டாதல் . |
| சொறிதேய்த்தல் | தினவுக்காக உரைசுதல் ; இழிவாய்க் கருதுதல் ; கோபமூட்டுதல் . |
| சொறிந்துகொடுத்தல் | தூண்டுதல் ; வாழ்வு கருதி ஒருவனை அணுகி இச்சகமாகத் தொழில் செய்தல் . |
| சொறிபுண் | சிறு பிள்ளைகட்கு உண்டாகும் கட்டுக்கரப்பான் . |
| சொறியன் | சொறியுள்ளவன் ; ஒருவகைத் தவளை ; காண்க : சிறுகாஞ்சொறி . |
| சொறிவு | தினவு . |
| சொறுண்டுதல் | சொறிதல் . |
| சொன்ஞானம் | அறிவுடைமொழி . |
| சொன்மகள் | சொல்மடந்தையாகிய கலைமகள் . |
| சொன்மடந்தை | சொல்மடந்தையாகிய கலைமகள் . |
| சொன்மாரி | சொல்லாலாகிய மழை ; இடையறாத பெரும்பேச்சு . |
| சொன்மாலை | புகழ்ச்சி ; புகழ்மாலை . |
| சொன்மிக்கணி | காண்க : சொற்பின்வருநிலையணி . |
| சொன்முதல் | நாதத்துக்குக் காரணமான மாயை . |
| சொன்றி | சோறு ; சுக்கு . |
| சொன்னகாரன் | தட்டான் . |
| சொன்னசீரம் | கரும்பு . |
| சொன்னம் | பொன் ; சோளம் ; கால்வாய் . |
| சொன்னல் | சோளம் ; இரும்பு . |
| சொன்னி | மணம் . |
| சொனகு | பெரும்புல்வகை . |
| சொனாகம் | வேலிப்பருத்தி , உத்தாமணிக்கொடி . |
| சோ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஒ) ; உமை ; அரண் ; வாணாசுரண் நகர் ; வியப்புப் பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் . |
| சோகநீக்கி | மாதவிக்கொடி . |
| சோகம் | துன்பம் ; சோர்வு ; காமனது ஐந்தம்புகளால் ஏற்படும் துன்பநிலையுள் ஒன்றான உணவில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகு துன்பம் ; சோம்பல் ; திரள் ; ஒட்டகம் ; துடை ; கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்கை ; அசோகமரம் ; கூம்புகை ; கடுகுரோகிணிப்பூண்டு ; உருண்டை . |
| சோகம்பாவனை | ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 516 | 517 | 518 | 519 | 520 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொற்படுத்துதல் முதல் - சோகம்பாவனை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தினவு, சொல்லும், சோளம், துன்பம், கடவுளும், ஒன்றெனப், ஆன்மாவும், கலைமகள், சொறிசிரங்கு, சொற்பொழிவு, சொற்பின்வருநிலையணி, புகழ்ச்சி, புகழ்மாலை, சொறிதல், சொல்மடந்தையாகிய

