தமிழ் - தமிழ் அகரமுதலி - சேலகம் முதல் - சேனைக்கணிமகன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சேலகம் | கோரைக்கிழங்கு . |
| சேலம் | ஆடை ; ஓரூர் . |
| சேலவன் | மீனாகப் பிறப்பெடுத்த திருமால் . |
| சேலியால் | இலாமிச்சைப்புல் . |
| சேலேகம் | சந்தனமரம் ; சிந்தூரம் . |
| சேலை | புடைவை , மகளிர் சீலை ; ஆடை ; அசோகமரம் ; முழுத் துணியின் பாதி . |
| சேலைபோடுதல் | கைம்பெண்ணானவட்குக் கோடிபோடுதல் . |
| சேலோதம் | சந்தனமரம் . |
| சேவகம் | ஊழியம் ; வீரம் ; யானைக்கூடம் ; உறக்கம் ; காண்க : பேயுள்ளி . |
| சேவகமெழுதுதல் | படையில் அமர்த்துதல் . |
| சேவகமோடி | போர்வீரனுக்குரிய கருவிகள் ; வீரம் ; வீரனுக்குரிய மாதிரிகை . |
| சேவகன் | வீரன் ; ஊழியன் ; காண்க : சேவகன்பூடு . |
| சேவகன்பூடு | காண்க : சிற்றாமுட்டி , காந்தள் ; சிறுபுள்ளடி . |
| சேவகனார் | வீரத் தெய்வமாகிய ஐயனார் . |
| சேவடி | சிவந்த பாதம் . |
| சேவதக்குதல் | எருதுக்கு விதையடித்தல் . |
| சேவம் | பாம்பு ; ஆண்குறி ; உயரம் . |
| சேவல் | மயில் ஒழிந்த பறவைகளின் ஆண் ; கோழியின் ஆண் ; ஆண் அன்னம் ; முருகக் கடவுள் ஊர்தியாகிய மயில் ; காவல் ; ஆண் குதிரை ; சேறு . |
| சேவலங்கொடியோன் | சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் . |
| சேவலோன் | சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் . |
| சேவற்கொடியோன் | சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் . |
| சேவனை | ஊழியத்தொழில் ; கோயில்தொண்டு ; விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை . |
| சேவனைக்காரர் | கோயில் மேளக்காரர் . |
| சேவா | வாடகை . |
| சேவாகாலம் | திருமால் கோயில் முதலியவற்றில் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை . |
| சேவாலங்கொட்டை | காண்க : நேர்வாளம் . |
| சேவாலிகம் | காண்க : கருநொச்சி . |
| சேவித்தல் | பணிசெய்தல் ; வணங்குதல் ; காணுதல் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல் ; மருந்து முதலியன உட்கொள்ளுதல் . |
| சேவிதம் | தொண்டு . |
| சேவியம் | வெள்ளை வெட்டிவேர் . |
| சேவுகம் | ஊழியம் ; வீரம் . |
| சேவை | தொண்டு ; வணக்கம் ; வழிபடுதல் ; காட்சி ; ஒரு மரவகை ; காட்டு மங்குஸ்தான் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுகை ; ஒருவகைப் பணிகாரம் . |
| சேவையூர் | சிதம்பரம் . |
| சேழ் | மேலிடம் . |
| சேழம் | மீதி . |
| சேளம் | மீதி . |
| சேற்கண்ணி | அரிதாரம் . |
| சேற்பனம் | கபம் . |
| சேற்றுக்கடி | காண்க : சேற்றுப்புண் . |
| சேற்றுக்கால் | வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் வேளாண்மை ; சேடையாக்கி விதைக்கும் வயல் ; களிமண் வயல் . |
| சேற்றுப்புண் | சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண் . |
| சேற்றுப்புழி | உழப்பட்ட நிலம் . |
| சேற்றுமம் | கபம் . |
| சேறடி | வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி . |
| சேறடை | வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி . |
| சேறல் | செல்லுகை . |
| சேறாடி | ஒரு விருதுவகை ; காண்க : சேறடி , சேறடை . |
| சேறாடுதல் | வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல் ; துகைத்துக் குழைத்தல் . |
| சேறு | சகதி ; குழம்பு ; சாரம் ; இனிமை ; கள் ; தேன் ; திருவிழா ; பாகு ; சீழ் ; பனம்பழம் ; தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு ; விளாம்பழம் ; மணி ; நீரோட்டம் . |
| சேறுகுத்தி | சேற்றைத் தள்ளற்கு உதவும் கருவி . |
| சேறுஞ்சுரியுமாய் | குழைவாய் . |
| சேனம் | பருந்து . |
| சேனம்பாம்பு | ஒரு மீன்வகை . |
| சேனன் | ஒரு பழைய பட்டப்பெயர் . |
| சேனா | விலாங்குமீன் ; நிலாவிரைப்பூண்டு . |
| சேனாங்கம் | படையுறுப்பு . |
| சேனாசமுத்திரம் | கடல்போன்ற பெரும்படை ; பெருங்கூட்டம் . |
| சேனாதிபதி | படைத்தலைவன் . |
| சேனாதிபன் | படைத்தலைவன் . |
| சேனாதிராயன் | முருகக்கடவுள் ; படைத்தலைவன் . |
| சேனாபத்தியம் | படைத்தலைமை . |
| சேனாபதி | படைத்தலைவன் ; ஒரு பண்வகை . |
| சேனாமுகம் | முதற்படை ; படையின் ஒரு தொகை . |
| சேனாவரையன் | படைத்தலைவன் ; தொல்காப்பிய உரையாசிரியருள் ஒருவர் . |
| சேனாவு | தகரைச்செடி . |
| சேனை | யானை , தேர் , குதிரை , காலாள் என்னும் நாற்படை ; ஆயுதம் ; கூட்டம் ; நண்பரும் உறவினரும் ; தெரு ; கடைத்தெரு ; சந்தை ; பல ; சேணம் ; கருணைக்கிழங்கு ; சேனைப்பால் . |
| சேனைக்கணிமகன் | சேனையிலுள்ள நிமித்திகன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 511 | 512 | 513 | 514 | 515 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேலகம் முதல் - சேனைக்கணிமகன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, படைத்தலைவன், முருகக், முதலியன, கடவுள், கொண்ட, கொடியிற், பிரபந்தம், கருவி, சேற்றைத், சேவலைக், திவ்வியப், வீரம், சேறு, சக்கரத்திற்படும், சேறடி, வண்டிச், தடுக்க, சந்தனமரம், சேறடை, ஊழியம், அமைக்குங், வயல், சேற்றுப்புண், திருமால், கோயில், மயில், குதிரை, சேவகன்பூடு, ஓதுகை, கபம், மீதி, தொண்டு, வயலில்

