முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » செவ்வல்நார் முதல் - செவிப்பாடு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - செவ்வல்நார் முதல் - செவிப்பாடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செவ்வல்நார் | காண்க : செவ்வாம்பல் . |
| செவ்வல்லி | செவ்வள்ளிக்கொடி ; செந்நிறமான அல்லிவகை ; காண்க : மஞ்சிட்டி . |
| செவ்வலரி | ஓர் அலரிவகை . |
| செவ்வழி | நன்னெறி ; முல்லைப்பண் . |
| செவ்வழிப்பாலை | பாலை யாழ்த்திறத்துள் ஒன்று . |
| செவ்வழிபாடு | முற்றும் அடங்கி ஒழுகுகை . |
| செவ்வழியாழ் | முல்லைப்பண் . |
| செவ்வள்ளி | ஓர் வள்ளிக்கொடிவகை . |
| செவ்வன் | செவ்வகையாக . |
| செவ்வனம் | செவ்வகையாக . |
| செவ்வனிறை | நேர்விடை . |
| செவ்வாப்பு | காமாலைவகை ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி . |
| செவ்வாப்புக்கட்டி | காமாலைவகை ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி . |
| செவ்வாம்பல் | செந்நிறமான அல்லிவகை . |
| செவ்வாய் | ஒன்பது கோள்களுள் ஒன்று ; செவ்வாய்க்கிழமை ; பிடாரிகோயில் திருவிழா . |
| செவ்வாய்நோன்பு | செவ்வாய்ப் பிள்ளையார் , ஆண்டுக்கு இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாள மகளிரால் மிக மறைவாகக் கடைப்பிடிக்கப்படும் விரதம் . |
| செவ்வாரம் | நிலக்கிழானும் பயிரிடுவோனும் பிரித்துக் கொள்ளும் சரிவாரம் . |
| செவ்வாழை | ஒரு வாழைவகை . |
| செவ்வானம் | செக்கர்வானம் . |
| செவ்வி | காலம் ; ஏற்ற சமயம் ; காட்சி ; அரும்பு ; பக்குவம் ; புதுமை ; அழகு ; சுவை ; மணம் ; தன்மை ; தகுதி ; சித்திரைநாள் . |
| செவ்விதின் | செம்மையாக . |
| செவ்விது | நேரானது ; நன்று . |
| செவ்விநிறம் | மாந்தளிர்க்கல் . |
| செவ்விபார்த்தல் | ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல் . |
| செவ்விய | நேர்மையான . |
| செவ்வியம் | மிளகுகொடி . |
| செவ்வியன் | நேர்மையுடையவன் . |
| செவ்வியான் | நேர்மையுடையவன் . |
| செவ்வியோன் | நேர்மையுடையவன் . |
| செவ்விளகி | கழுதைவண்டு . |
| செவ்விளநீர் | செந்தெங்கின் இளங்காய் . |
| செவ்விளிம்பன் | சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை . |
| செவ்விளை | காண்க : செவ்விளநீர் . |
| செவ்விறகி | காண்க : செவ்விளகி . |
| செவ்வினையாளர் | நற்செய்கை உடையோர் . |
| செவ்வு | செம்மை ; நேர்மை ; திக்கு ; முத்துக்களின் அளவுவகை . |
| செவ்வெண் | பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர் . |
| செவ்வெண்ணெய் | பிறந்த குழந்தையின் வாயில் தடவும் தேன்கூட்டிய ஆமணக்கெண்ணெய் . |
| செவ்வே | நன்றாக ; நேரே ; மேல்முகமாக . |
| செவ்வேள் | முருகக்கடவுள் . |
| செவ்வை | நேர்மை ; மிகுதி ; வழி முதலியவற்றின் செப்பம் ; சரியான நிலை . |
| செவ்வைக்கேடு | ஒழுங்கின்மை . |
| செவ்வைப்பூசல் | அறப்போர் . |
| செவத்தல் | காண்க : சிவத்தல் . |
| செவந்தரை | காண்க : கோலாட்டம் . |
| செவல் | செந்நிறமான விலங்கு ; செம்மண் நிலம் . |
| செவலை | செந்நிறமுள்ள விலங்கு . |
| செவி | காது ; கேட்கை ; பாத்திரத்தின் காது வளையம் ; வீணையின் முறுக்காணி ; ஓரங்குல மழை . |
| செவிக்குத்து | காதுநோவு . |
| செவிக்கெட்டுதல் | கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் . |
| செவிக்கேறுதல் | கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் . |
| செவிகொடுத்தல் | காதுகொடுத்துக் கேட்டல் . |
| செவிகொள்தல் | கேட்டல் . |
| செவிகொளுதல் | கேட்டல் . |
| செவிச்செல்வம் | கேள்வியாகிய செல்வம் . |
| செவிச்சொல் | காதில் இரகசியமாய்க் கூறுதல் . |
| செவிசாய்த்தல் | சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல் . |
| செவிட்டுதல் | கொல்லுதல் ; ஒருபுறங் கண் சாய்த்துப் பார்த்தல் . |
| செவிடன் | காது கேளாதவன் . |
| செவிடி | காது கேளாதவள் . |
| செவிடு | காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை . |
| செவிடுசெல்லுதல் | ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் . |
| செவிடுபடுதல் | ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் . |
| செவிடெறிதல் | சத்தத்தால் அலைவுறுதல் . |
| செவித்துறண்டி | குறும்பிவாங்கி . |
| செவிதாழ்த்தல் | காண்க : செவிகொடுத்தல் . |
| செவிதின்னுதல் | இரகசியம் பேசுதல் . |
| செவிநிறக்கல் | காண்க : மாந்தளிர்க்கல் . |
| செவிப்படுத்துதல் | காதில் மெல்ல அறிவித்தல் . |
| செவிப்படுதல் | கேட்கப்படுதல் . |
| செவிப்பண் | நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . |
| செவிப்பறையறைதல் | மந்திரம் முதலியவற்றைப் பிறர் செவியிற் படாதவாறு இரகசியமாகக் கூறுதல் . |
| செவிப்பாடு | கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 505 | 506 | 507 | 508 | 509 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செவ்வல்நார் முதல் - செவிப்பாடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காது, நேர்மையுடையவன், கேட்டல், காதில், செவிடெறிதல், செந்நிறமான, கேட்டற்கு, போதல், கேள்விப்படுதல், இனிதாயிருத்தல், செவிகொடுத்தல், செவிதாழ்த்தல், கூறுதல், விலங்கு, கேளாது, மிகுதியால், செவ்விளநீர், ஒன்று, செவ்வகையாக, முல்லைப்பண், அல்லிவகை, செவ்வாம்பல், காமாலைவகை, குழந்தைகளுக்குத், மாந்தளிர்க்கல், செவ்விளகி, செவ்வாய்க்கிழமை, சிவப்புக்கட்டி, தலையிலுண்டாகும், நேர்மை

