முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » செய்யுட்பொருத்தம் முதல் - செருக்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - செய்யுட்பொருத்தம் முதல் - செருக்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செய்யுட்பொருத்தம் | மங்கலம் , சொல் , எழுத்து , தானம் , பால் , உண்டி , வருணம் , நாள் , கதி , கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம் . |
| செய்யுட்போலி | உரைநடைவகையுள் ஒன்று . |
| செய்யுண்முடிபு | செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு . |
| செய்யுணடை | செய்யுளில் வழங்கும் நடை . |
| செய்யுள் | பாட்டு ; காவியம் ; உரை ; விளைநிலம் ; செய்கை . |
| செய்யுள்வழக்கு | செய்யுளில் வழங்குஞ் சொல் . |
| செய்யுள்வழு | யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம் . |
| செய்யுள்விகாரம் | வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் , விரித்தல் , தொகுத்தல் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை , எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு . |
| செய்யுளுறுப்பு | எழுத்து , அசை , சீர் , தளை , அடி , தொடை என்னும் செய்யுளின் உறுப்புகள் . |
| செய்யோள் | திருமகள் ; சிவந்த நிறத்தினள் . |
| செய்யோன் | செந்நிறமுடையோன் ; செவ்வாய் ; அருகன் ; சூரியன் . |
| செய்வது | செய்யத்தக்கது ; கருத்தா . |
| செய்வினை | வினைமுதல் வினை ; முற்பிறப்பில் செய்த கருமம் ; பில்லிசூனியம் ; செய்யுந்தொழில் . |
| செய்வினைமடிதல் | உரிய தொழிலிற் சோம்புதல் . |
| செய்சேதி | உப்பு . |
| செய | அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு ; வெற்றிக் குறிப்பான சொல் . |
| செயத்தம்பம் | வெற்றித்தூண் . |
| செயநீர் | சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் . |
| செயநீர்க்கருத்தன் | நவச்சாரம் . |
| செயப்படுபொருள் | வினைமுதலது தொழிலின் பயனை அடைவது ; நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள் . |
| செயப்படுபொருள் குன்றாதவினை | செயப்படு பொருளைப் பெறவல்ல வினைச்சொல் . |
| செயப்படுபொருள் குன்றுயவினை | செயப்படு பொருளைப் பெறமாட்டாத வினைச்சொல் . |
| செயப்பாட்டுவினை | படுவிகுதி புணர்ந்த முதனிலைகளையுடையதாய்ச் செயப்படு பொருளை எழுவாயாகக்கொண்ட வினை ; பழவினை . |
| செயபரம் | காண்க : மரமஞ்சள் . |
| செயம் | வெற்றி ; பிறந்த நாளிலிருந்து 360 ஆம் நாளாகிய நன்னாள் . |
| செயர் | வீட்டுவரி , சந்தைவரி முதலிய பலவகை வருவாய் . |
| செயல் | தொழில் ; பொருள் தேடுகை ; இழைப்பு வேலை ; வேலைப்பாடு ; காவல் ; ஒழுக்கம் ; வலிமை ; செல்வாக்கு ; செய்யல் நிலைமை ; சேறு . |
| செயலழிதல் | வலியழிதல் . |
| செயலறவு | வலியின்மை . |
| செயலறுதல் | வலியழிதல் ; அழகு அழிதல் ; ஒழுக்கம் கெடுதல் . |
| செயலை | அசோகமரம் . |
| செயற்கை | இயற்கைக்கு மாறானது ; காண்க : செயற்கைப்பொருள் ; தொழில் ; தன்மை . |
| செயற்கைச்சாக்காடு | பொய்ச் சாவு . |
| செயற்கைப்பொருள் | காரணத்தால் தன்மைதிரிந்த பொருள் ; உண்டாக்கப்பட்ட பொருள் . |
| செயற்கையழகு | புனைந்துண்டாகிய எழில் . |
| செயற்கையளபெடை | செய்யுளின் ஒசை நிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை . |
| செயற்கைவாசனை | உண்டாக்கப்பட்ட மணம் ; சேர்க்ககைக் குணம் . |
| செயித்தல் | வெற்றியடைதல் ; செயல் கைகூடுதல் . |
| செயிர் | குற்றம் ; கோபம் ; போர் ; வருத்துகை ; நோய் . |
| செயிர்த்தல் | வெகுளுதல் ; வருத்துதல் ; குற்றஞ் செய்தல் . |
| செயிர்ப்பு | குற்றம் ; சினம் . |
| செயிரியர் | பாணர் . |
| செரித்தல் | சீரணமாதல் ; நிலையாகப் பெறுதல் . |
| செரிப்பித்தல் | சீரணிக்கச்செய்தல் ; தொல்லையை நீக்குதல் ; நிலைநிறுத்துதல் ; நிலையாகப் பெறுதல் . |
| செரு | போர் ; ஊடல் . |
| செருக்கடுத்தல் | அகந்தைகொள்ளுதல் . |
| செருக்கம் | கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் . |
| செருக்கல் | கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் . |
| செருக்களம் | போர்க்களம் . |
| செருக்களவஞ்சி | போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் நூல்வகை . |
| செருக்கு | அகந்தை ; மகிழ்ச்சி ; ஆண்மை ; மயக்கம் ; செல்வம் ; செல்லம் . |
| செருக்குதல் | ஆணவங்கொள்ளுதல் ; பெருமிதமுறுதல் ; களித்தல் ; மிகுத்தல் ; நன்கு நுகர்தல் ; மதர்த்தல் ; பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக்கொள்ளுதல் ; மயங்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 502 | 503 | 504 | 505 | 506 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செய்யுட்பொருத்தம் முதல் - செருக்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், செய்யுளில், மயக்கம், குற்றம், செயப்படு, செயப்படுபொருள், பொருள், செயற்கைப்பொருள், போர், உண்டாக்கப்பட்ட, பெறுதல், வரும், உண்டலால், கள்முதலியன, வலியழிதல், நிலையாகப், செயல், செய்யுளின், வழங்குஞ், செய்யுள், எழுத்து, வினை, பொருளைப், தொழில், காண்க, வினைச்சொல், ஒழுக்கம்

