முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சூசிகம் முதல் - சூத்திரப்பொம்மை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சூசிகம் முதல் - சூத்திரப்பொம்மை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சூசிகம் | ஒரு வாத்தியவகை . |
| சூசிகன் | தையற்காரன் . |
| சூசிகாதரம் | துதிக்கையைக் கொண்டிருப்பதாகிய யானை . |
| சூசிகாபாணம் | ஒரு கூரிய அம்புவகை . |
| சூசிகாமுகம் | ஊசிபோன்ற கூர்வாயுடையசங்கு . |
| சூசிகாவாயு | காண்க : சூதகவாயு . |
| சூசிகாவியூகம் | ஊசி முனைபோல் முனைசிறுத்து வர அமைக்கும் படைவகுப்புவகை . |
| சூசிகை | ஊசி ; குறிப்பு ; யானைத்துதிக்கை . |
| சூசித்தல் | சுருக்குதல் ; குறிப்பித்தல் . |
| சூசிப்பித்தல் | குறிப்பித்தல் ; சுருங்கச்சொல்லல் . |
| சூசிபத்திரம் | பொருளட்டவணை . |
| சூசீபத்திரம் | பொருளட்டவணை . |
| சூசியம் | சூட்டிறைச்சி . |
| சூசுகம் | முலைக்கண் . |
| சூட்சக்காரன் | கூர்மையுள்ளவன் ; தந்திரமுள்ளவன் . |
| சூட்சி | வஞ்சகம் ; ஆலோசனை சூழ்ச்சி . |
| சூட்சித்தல் | ஆராய்ந்தறிதல் . |
| சூட்சியன் | மந்திரி ; ஆலோசனை வல்லவன் . |
| சூட்சுமசரீரம் | நுண்ணிய உடல் . |
| சூட்சுமபுத்தி | நுண்ணிறிவு ; அறிவுக்காட்சி . |
| சூட்சுமம் | நுண்மை ; பொருளின் நுண்ணியவடிவம் ; திறமை ; இழிந்தது ; அறிவுநுட்பம் ; சூழ்ச்சி ; சுருக்கம் ; செட்டு ; சுருக்கவழி ; எச்சரிக்கை ; நுட்பமான கூறு . |
| சூட்டடுப்பு | அடுப்புவகை . |
| சூட்டாணி | காண்க : சூட்டுக்கோல் . |
| சூட்டிக்கை | கூரியவறிவு ; சுறுசுறுப்பு . |
| சூட்டிஞ்சி | ஏவறைகளைக்கொண்ட மதில் . |
| சூட்டிவிடுதல் | பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல் ; நியமித்தல் ; ஒப்படைத்தல் . |
| சூட்டிறைச்சி | சுட்ட இறைச்சி . |
| சூட்டு | தரித்தல் ; மாலை ; நுதலணி மாலை ; நெற்றிப்பட்டம் ; கோழி , மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை ; பாம்பின் படம் ; வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம் , வட்டகை ; ஏவறை ; சுடப்பட்டது ; தீவட்டிவகை . |
| சூட்டுக்கோல் | சூடு இடுதற்குரிய கம்பி . |
| சூட்டுதல் | அணிவித்தல் ; ஒருவரை பாட்டால் புனைதல் ; பட்டம் முதலியன கொடுத்தல் ; முடிபுனைதல் ; ஆணை முதலியன செலுத்துதல் ; பரப்புதல் ; சுமத்துதல் ; சூட்டிவிடுதல் . |
| சூட்டுமாலை | தோளணிமாலை . |
| சூட்டுமிதி | நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை . |
| சூட்டுவலி | சூட்டினால் உடம்பில் ஏற்படும் நோவு ; மகப்பேற்றுவலி . |
| சூட்டெண்ணெய் | உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய் ; வேப்பெண்ணெய் . |
| சூட்டோடுசூடாய் | உடன்தொடர்ச்சியாக . |
| சூடகம் | கைவளை ; கிணறு ; சடை . |
| சூடங்கெட்டுப்போதல் | நிலைகெட்டு முடிவாதல் . |
| சூடடித்தல் | காண்க : சூட்டுமிதி . |
| சூடம் | கருப்பூரம் ; தலையுச்சி ; சீழ்க்கை . |
| சூடன் | கருப்பூரவகை ; மீன்வகை . |
| சூடாகரணம் | குழந்தைகட்குக் குடுமி வைக்கும் சடங்கு . |
| சூடாமணி | முடிமணி ; ஒரு தெய்வமணி . |
| சூடாலம் | சணல்விதை ; தலை . |
| சூடாலைக்கல் | ஒரு கல்வகை . |
| சூடி | சீலை . |
| சூடிக்கொடுத்தாள் | ஆண்டாள் நாச்சியார் . |
| சூடிகை | மணிமுடி ; தூண் . |
| சூடிச்சி | எவட்சாரம் . |
| சூடு | வெப்பம் ; அரிக்குவியல் ; சுடப்பட்டது ; சுடுபுண் ; சூட்டுக்குறி ; ஒற்றடம் ; கோபமுண்டாக்குதல் ; கோபம் ; உணர்ச்சி ; விலையேற்றம் ; கண்ணோய்வகை ; வடு . |
| சூடுகாட்டுதல் | சிறுசூடுபடுத்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; சூடாக்குதல் ; சுரக்குறி தோற்றுதல் ; கடுமைக்குறி காட்டுதல் . |
| சூடுகாணல் | சுட்டுக்கொள்ளுதல் ; சுரக்குறிதெரிதல் ; வெப்பமாக இருத்தல் . |
| சூடுதல் | அணிதல் ; பெயர்முதலியன தரித்தல் ; கவிதல் ; வளைந்துபோதல் . |
| சூடுபிடித்தல் | நீர்க்கடுப்பு உண்டாதல் ; வேகமாகச் செய்தல் . |
| சூடுபோடுதல் | விலங்குகளுக்குக் குறியிடுதல் . |
| சூடுமிதித்தல் | காண்க : சூட்டுமிதி . |
| சூடை | தலை ; குடுமி ; வரு மீன்வகை . |
| சூத்தாட்டி | வேலை கழப்புகிறவன் ; தகுதி கடந்து உடம்பட்டுத் தயை சம்பாதிப்பவன் . |
| சூத்தி | மிதியடி . |
| சூத்திரக்கயிறு | பாவையை ஆட்டும் கயிறு ; பையின் சுருக்குக் கயிறு ; காற்றாடிப் பட்டத்தில் குறுக்கே கட்டும் கயிறு ; மந்திரம் செபிக்கும் போது அதன் தொகையை விரலில் சுற்றி அறிதற்கு உதவும் செபக்கயிறு . |
| சூத்திரதாரன் | நாடகம் நடத்துவோன் . |
| சூத்திரதாரி | பதுமையைக் கயிறுகட்டி ஆட்டுபவன் ; நாடகத்தை நடத்துபவன் ; கடவுள் . |
| சூத்திரப்பதுமை | காண்க : சூத்திரப்பாவை . |
| சூத்திரப்பா | இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல் . |
| சூத்திரப்பாவை | கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை . |
| சூத்திரப்பிரதிமை | கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை . |
| சூத்திரப்பொம்மை | கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 491 | 492 | 493 | 494 | 495 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூசிகம் முதல் - சூத்திரப்பொம்மை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கயிறு, காண்க, சூட்டுமிதி, பொம்மை, கொடுத்தல், முதலியவற்றால், ஆட்டப்படும், முதலியன, குடுமி, சூத்திரப்பாவை, சூடு, மீன்வகை, முதலியவற்றின், ஆலோசனை, சூட்டிறைச்சி, பொருளட்டவணை, குறிப்பித்தல், சூழ்ச்சி, சூட்டுக்கோல், மாலை, தரித்தல், சூட்டிவிடுதல், சுடப்பட்டது

