முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுழுத்தி முதல் - சுற்றிவாங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுழுத்தி முதல் - சுற்றிவாங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுழுத்தி | புலன்கள் செயலற்றுநிற்கும் நிலை . |
| சுழுந்து | காண்க : சுளுந்து . |
| சுழுமுனை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுழுனானை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுழுனை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுள் | உறைப்பு ; கருவாடு ; சிறுமை . |
| சுள்ளக்கம் | கோபம் ; மேட்டிமை ; வேர்க்குரு . |
| சுள்ளக்கன் | கோபக்காரன் ; அடங்காத குதிரை அல்லது மாடு . |
| சுள்ளக்காய் | மிளகாய் . |
| சுள்ளம் | சினம் . |
| சுள்ளல் | மெல்லியது . |
| சுள்ளற்கோல் | வளையுந் தடி ; சவுக்கு . |
| சுள்ளாணி | சிறிய ஆணி ; மெல்லிய ஆணி . |
| சுள்ளாப்பித்தல் | அடித்தல் ; கதிரடித்தல் . |
| சுள்ளாப்பு | உறைப்பு ; அடி ; பழிச்சொல் ; கடுமை ; மழையின்பின் அடிக்கும் கடுவெயில் . |
| சுள்ளான் | காண்க : சுள்ளெறும்பு ; கொசுவகை . |
| சுள்ளி | சிறு விறகு ; அனிச்சமரம் ; உலர்ந்த சிறு கொம்பு ; சிறுகோல் ; மரக்கிளை ; சிறுமை ; மாமரம் ; ஆச்சாமரம் ; ஞாழல் ; மயிற்கொன்றைமரம் ; நாகமல்லி ; மல்லிகை ; குங்குமம் ; எலும்பு . |
| சுள்ளிக்கோல் | சவுக்கு . |
| சுள்ளிடுதல் | உறைத்தல் ; மனம் வருந்துதல் . |
| சுள்ளிடுவான் | மிளகு ; மிளகாய் ; ஒரு பூச்சி வகை . |
| சுள்ளு | கருவாடு . |
| சுள்ளுச்சுள்ளெனல் | கடுத்தற்குறிப்பு ; கோபக் குறிப்பு . |
| சுள்ளுப்பூச்சி | தெள்ளுப்பூச்சி . |
| சுள்ளெறும்பு | செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை . |
| சுள்ளை | மட்கலஞ் சுடுஞ் சூளை ; காளவாய் . |
| சுளகம் | உள்ளங்கை : நன்மொழி . |
| சுளகு | முறம் : சுளகைப்போன்ற விசாகநாள் . |
| சுளகுகட்டுதல் | முறம்முடைதல் . |
| சுளகுபின்னல் | ஒலை முதலியவற்றில் பின்னும் ஒரு முடைசல்வகை ; ஒரு தலைப்பின்னல் வகை . |
| சுளி | புளியாரைக்கீரை . |
| சுளிக்கு | ஊன்றுகோல் ; முனை கூர்மையான ஒரு கைக்கோல்வகை . |
| சுளிகை | முருங்கைமரம் ; அணிகலவகை . |
| சுளித்தல் | கோபித்தல் ; சினக்குறிப்பு ; காலால் துகைத்தல் ; முறித்தல் ; வெறுத்தல் ; வருந்துதல் . |
| சுளிதல் | சினத்தல் |
| சுளிவு | சினக்குறிப்பு ; சினம் ; எளிது ; தணிவு . |
| சுளுக்கி | காண்க : சுளிக்கு . |
| சுளுக்கு | நரம்புப் பிறழ்ச்சி . |
| சுளுக்குநாயகம் | நரம்புச்சுளுக்கைக் குணப்படுத்தும் மருந்துச்செடி . |
| சுளுக்குப்பார்த்தல் | சுளுக்கு நீங்க மந்திரித்தல் . |
| சுளுக்குருவுதல் | எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல் . |
| சுளுக்குவழித்தல் | எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல் . |
| சுளுக்கேறுதல் | சுளுக்கிக்கொள்ளுதல் . |
| சுளுகு | நுட்ப அறிவு ; திறமைப் பேச்சு ; எளிது . |
| சுளுகுபின்னல் | ஒரு மயிர்ப்பின்னல்வகை . |
| சுளுகோடி | மேற்கூரை இணையும் மூலை . |
| சுளுந்து | மரவகை ; சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம் ; சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம் ; ஒருவகை ஆரத்திக்கலம் . |
| சுளுந்துக்காரன் | தீவட்டிக்காரன் , தீவட்டி பிடிப்பவன் . |
| சுளுவு | எளிமை . |
| சுளை | பலாப்பழம் முதலியவற்றின் சதைப்பற்று . |
| சுளைப்பிடாம் | கம்பளி . |
| சுளையம் | திருட்டு . |
| சுற்கம் | காண்க : சுல்கம் . |
| சுற்பம் | செம்பு . |
| சுற்றத்தார் | உறவினர் ; இனத்தார் ; துணைவர் ; பரிவாரம் . |
| சுற்றந்தழால் | உறவினரைத் தழுவிக்கொள்தல் . |
| சுற்றம் | உறவினரர் ; பரிவாரம் ; அரசர்க்குரியதுணையில் ஒன்று ; கூட்டம் ; ஆயத்தார் . |
| சுற்றளவு | வட்ட அளவு . |
| சுற்றாலை | சுற்றுச்சுவர் , பிராகாரம் . |
| சுற்றிக்கட்டுதல் | எழுத்துச்சுழி வரைதல் ; சூழ்ச்சிசெய்தல் ; நீரை வேறுவழி திருப்புதல் ; பொய்யாகக் கற்பித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் . |
| சுற்றிக்கொள்ளுதல் | சூழ்ந்துகொள்ளுதல் ; கவர்தல் ; வளைந்துகொள்ளுதல் . |
| சுற்றிச்சுழல் | சுற்றிவருதல் ; விடாது பற்றித்தொடர்தல் ; விடாது கெஞ்சுதல் . |
| சுற்றிச்சுழலுதல் | சுற்றிவருதல் ; விடாது பற்றித்தொடர்தல் ; விடாது கெஞ்சுதல் . |
| சுற்றிச்சுழற்றுதல் | விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல் . |
| சுற்றிப்பிடித்தல் | வளைந்து பற்றுதல் ; வயிறு மிகவும் நோதல் ; பற்றிக்கொள்ளுதல் . |
| சுற்றிப்போடுதல் | கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் . |
| சுற்றியெறிதல் | கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் . |
| சுற்றிவாங்குதல் | தேசிக்கூத்துக்குரிய கால்வகை ; சுற்றிவந்து பெற்றுக்கொள்ளுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 488 | 489 | 490 | 491 | 492 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுழுத்தி முதல் - சுற்றிவாங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நாடி, சுளுக்கு, காண்க, விடாது, கண்ணேறு, கழித்தல், நிற்கும், வரைக்கும், பிங்கலைகளுக்கு, இடைகலை, இடையிலுள்ள, மூலாதாரத்திலிருந்து, உச்சித்துளை, உருவுதல், தீப்பந்தம், பரிவாரம், சுற்றிவருதல், பற்றித்தொடர்தல், முடியைச், பண்ணிகாரம், முதலியவற்றை, எறிந்து, சுற்றிப், மந்திரித்து, மணமக்கள், முதலியோரின், கெஞ்சுதல், சினக்குறிப்பு, மிளகாய், சினம், சவுக்கு, சிறுமை, கருவாடு, சுளுந்து, உறைப்பு, சுள்ளெறும்பு, சுள்ளி, எண்ணெய், முதலியவற்றால், எளிது, சுளிக்கு, சிறு, வருந்துதல், நீங்கும்

