முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுந்தோபசுந்தநியாயம் முதல் - சும்மா வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுந்தோபசுந்தநியாயம் முதல் - சும்மா வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுந்தோபசுந்தநியாயம் | சுந்தன் , உபசுந்தன் என்ற இருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டு மாய்ந்தாற்போல் ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி . |
| சுப்பல் | சுள்ளிவிறகு . |
| சுப்பி | சுள்ளிவிறகு . |
| சுப்பியம் | காண்க : மாவிலிங்கம் ; விளாமரம் ; பாம்புகொல்லி ; மாவிலிங்கமரப்பட்டை . |
| சுப்பிரசன்னம் | தெளிவு ; அருள் . |
| சுப்பிரசுதை | காட்டெருமைப் பால் |
| சுப்பிரதந்தி | வடமேற்றிசைப் பெண்யானை . |
| சுப்பிரதீபம் | மிக்க வொளி ; கூர்மையான அறிவு ; வடகீழ்த்திசை யானை . |
| சுப்பிரதீபன் | சீர்த்தி பெற்றோன் . |
| சுப்பிரபாதம் | திருப்பள்ளியெழுச்சி . |
| சுப்பிரம் | வெண்மை ; தூய்மை ; மிக்கவொளி ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; முத்துக் குற்றத்துள் ஒன்று ; சந்தனம் ; வெண்மை ; வெள்ளி . |
| சுப்பிரமணியன் | முருகக்கடவுள் . |
| சுப்பிரமதுவா | கூவைநீறு . |
| சுப்பிரயோகம் | மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை . |
| சுப்பிராங்கி | இந்திரன் குதிரை . |
| சுப்பிரி | நான்முகன் . |
| சுப்பிவிறகு | சுள்ளிவிறகு . |
| சுப்பு | வேற்றுமையுருபு . |
| சுப்பெனல் | நீர்வற்றல் . |
| சுபக்கம் | வாதத்தில் தன் கொள்கை ; சிவஞான சித்தியாரில் சைவ சமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி . |
| சுபக்கிரகம் | நற்கோள் ; வளர்பிறைச் சந்திரன் ; புதன் ; குரு , சுக்கிரன் ஆகிய நற்கோள் . |
| சுபகரம் | நன்மைசெய்வது . |
| சுபகருமம் | மங்கலச்செயல் . |
| சுபகன்மம் | மங்கலச்செயல் . |
| சுபகிருது | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தாறாம் ஆண்டு |
| சுபங்கரி | மங்கலத்தைச் செய்பவளான பார்வதி . |
| சுபசரிதம் | நன்னடக்கை . |
| சுபசரிதை | மங்கலவரவு . |
| சுபசூசகம் | மங்கலத்தைக் காட்டுங் குறி . |
| சுபசூசனம் | மங்கலத்தைக் காட்டுங் குறி . |
| சுபசோபனம் | மங்கலச் செய்தி . |
| சுபட்சம் | தன் கொள்கை ; சிவஞான சித்தியில் சைவசமயக் பகுதி . |
| சுபத்திரை | அருச்சுனன் மனைவி ; கறுப்புப் பசு . |
| சுபதம் | நன்மை தருவது ; அரசமரம் . |
| சுபந்தம் | உருபு ஏற்ற பெயர்ச்சொல் . |
| சுபம் | மங்கலம் ; நன்மை ; பேறு ; முத்தி ; மங்கலச் செயல் ; அழகு ; வெண்மை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று . |
| சுபமங்களம் | வாழ்த்துப்பாட்டு ; முதிர்ந்த பருவத்தில் நேரும் நல்ல சாவு . |
| சுபமுகூர்த்தம் | நல்வேளை . |
| சுபர்ணன் | அழகிய சிறகுகளையுடைய கருடன் . |
| சுபன்னன் | அழகிய சிறகுகளையுடைய கருடன் . |
| சுபா | நாட்டின் பகுதி . |
| சுபாங்கி | அழகிய உறுப்புள்ளவள் . |
| சுபாங்கை | அழகிய உறுப்புள்ளவள் . |
| சுபாசுபம் | நன்மை தீமைகள் . |
| சுபாலிகை | அடுப்பு . |
| சுபாவக்காரன் | நல்லவன் ; மூடன் . |
| சுபாவங்காட்டுதல் | இயல்பைக் காட்டுதல் ; இழிகுணம் காட்டுதல் ; நடித்தல் . |
| சுபாவசித்தம் | இயற்கையாகவே அமைந்திருப்பது . |
| சுபாவப்பேச்சு | கபடமற்ற பேச்சு . |
| சுபாவம் | இயல்பு ; இயற்கையுணர்வு ; உண்மை ; இயற்கை ; கலப்பற்றது ; கபடின்மை ; மூடத்தன்மை . |
| சுபாவி | காண்க : சுபாவக்காரன் . |
| சுபாவிகம் | இயற்கைத் தன்மை . |
| சுபானு | அறுபதாண்டுக் கணக்கில் பதினேழாம் ஆண்டு |
| சுபிட்சம் | காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு . |
| சுபுகம் | மோவாய் . |
| சுபுட்பம் | காண்க : இலவங்கம் ; பவளமல்லிகை . |
| சுபேதார் | ஓர் இராணுவ அதிகாரி . |
| சுபை | நாட்டுப்பகுதி . |
| சுபையதார் | காண்க : சுபேதார் . |
| சுபோதம் | மெய்யறிவு . |
| சும்பகம் | ஊசிக்காந்தம் . |
| சும்பகன் | காமவேட்டைக்காரன் . |
| சும்பன் | மூடன் . |
| சும்பனம் | இதழ் முதலியன சுவைக்கை ; முத்தமிடல் ; சப்புதல் . |
| சும்பித்தல் | முத்தமிடுதல் ; சப்புதல் . |
| சும்பிதகரணம் | புணர்ச்சிவகை . |
| சும்பிதம் | காண்க : சும்பனம் . |
| சும்புதல் | வாடிச் சுருங்குதல் . |
| சும்புள் | கடப்பமரம் . |
| சும்புளித்தல் | பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல் . |
| சும்மா | தொழிலின்றி ; இயல்பாய் ; அமைதியாய் ; வறிதாக ; காரணமின்றி ; பயனின்றி ; கருத்தின்றி ; விளையாட்டாய் ; இலவசமாய் ; தடையின்றி ; அடிக்கடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 480 | 481 | 482 | 483 | 484 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தோபசுந்தநியாயம் முதல் - சும்மா வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அழகிய, ஒன்று, பகுதி, வெண்மை, சுள்ளிவிறகு, நன்மை, உறுப்புள்ளவள், சிறகுகளையுடைய, சுபாவக்காரன், கருடன், முதலியவற்றால், சப்புதல், சும்பனம், சுபேதார், காட்டுதல், மூடன், காட்டுங், மங்கலச்செயல், நற்கோள், சிவஞான, கொள்கை, அறுபதாண்டுக், கணக்கில், குறி, மங்கலத்தைக், ஆண்டு, மங்கலச்

