முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுடுகாட்டுக்கோட்டம் முதல் - சுண்ணமிடித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுடுகாட்டுக்கோட்டம் முதல் - சுண்ணமிடித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுடுகாட்டுக்கோட்டம் | காண்க : சக்கரவாளக்கோட்டம் . |
| சுடுகாட்டுப்பாட்டம் | மயான வரிவகை . |
| சுடுகாடு | பிணம் எரிக்கும் மயானம் . |
| சுடுகோல் | சூட்டுக்கோல் . |
| சுடுசுடுத்தல் | சினக்குறிப்புக் காட்டுதல் . |
| சுடுசுடெனல் | விரைவுக்குறிப்பு ; சினக்குறிப்பு . |
| சுடுசுண்ணச்சாந்து | நீற்றின் சுண்ணாம்பு . |
| சுடுசுண்ணம் | நீற்றின் சுண்ணாம்பு . |
| சுடுசொல் | துன்புறுத்தும் மொழி . |
| சுடுசோறு | புதிதாகச் சமைத்த அன்னம் . |
| சுடுதண்ணீர் | வெந்நீர் . |
| சுடுதல் | காய்தல் ; காயச்செய்தல் ; எரித்தல் ; பலகாரம் செய்தல் ; காளவாயில் வேகவைத்தல் ; மருந்து நீற்றுதல் ; வெடி சுடுதல் ; சூடிடுதல் ; கெடுத்தல் ; தீயிலிடுதல் ; வருத்துதல் . |
| சுடுதுரத்தம் | சித்திரப்பாலாவிப் பூண்டு . |
| சுடுநாற்றம் | மயிர் , பிணம் முதலியன சுடுதலால் உண்டாகும் நாற்றம் . |
| சுடுநிலம் | காண்க : சுடுகாடு . |
| சுடுநீர் | வெந்நீர் . |
| சுடுநோக்கு | கொள்ளிக்கண் ; கொடிய பார்வை உடைய கண் . |
| சுடுபடை | காண்க : சுடுகோல் |
| சுடுபுண் | சுட்டதனால் உண்டான புண் . |
| சுடுபொன் | புடமிட்ட பொன் . |
| சுடுமட்பலகை | செங்கல் . |
| சுடுமண் | சுட்ட ஓடு ; மட்பாண்டம் ; செங்கல் . |
| சுடுமூஞ்சி | கடுகடுத்த முகம் ; கடுகடுத்த முகமுடையவன்(ள்) . |
| சுடுவல் | குருதி ; இரத்தம் . |
| சுடுவன் | குருதி ; இரத்தம் . |
| சுடுவான் | மரக்கலத்திலுள்ள சமையலறை . |
| சுடுவு | சும்மாடு . |
| சுண்ட | முற்றும் . |
| சுண்டக்கட்டுதல் | இழுத்துக் கட்டுதல் . |
| சுண்டக்காய்ச்சுதல் | இறுகக் காய்தல் ; நீர்வற்றக் காய்ச்சுதல் . |
| சுண்டக்காய்தல் | இறுகக் காய்தல் ; நீர்வற்றக் காய்ச்சுதல் . |
| சுண்டகம் | மூங்கில் வில் . |
| சுண்டகன் | கள்ளிறக்குவோன் . |
| சுண்டங்காய் | சுண்டைக்காய் . |
| சுண்டப்பிடித்தல் | ஆடையை அளக்க இழுத்துப் பிடித்தல் ; வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல் ; பொருளை இறுக்குதல் . |
| சுண்டம் | கள் ; யானைத்துதிக்கை . |
| சுண்டல் | எரித்த பழங்கறி ; சுண்டின பயற்றுப் பணிகாரம் ; சுண்டற்கடலை . |
| சுண்டற்கறி | எரித்த பழங்கறி . |
| சுண்டன் | அறிவிலி ; காண்க : மூஞ்சூறு ; சதயநாள் ; சிறிய மரவகை . |
| சுண்டாங்கி | கறியோடு சேர்க்க அரைத்த கூட்டுப்பொருள் ; துவையல் ; அற்பம் ; அளவிற்குறைவு . |
| சுண்டாங்கியார் | சிக்கனக்காரி . |
| சுண்டாயம் | விளையாட்டு . |
| சுண்டாலம் | யானை . |
| சுண்டாலி | யானை . |
| சுண்டான் | கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு ; குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடும் குச்சி . |
| சுண்டி | தொட்டாற்சுருங்கி ; நீர்ப்பூடுவகை ; சுக்கு ; காண்க : வறட்சுண்டி ; குறும்புக்காரன் ; இஞ்சிச்செடி ; கள் . |
| சுண்டிக்கீரை | நீர்ப்பூடுவகை . |
| சுண்டிகை | உள்நாக்கு . |
| சுண்டில் | சுண்டிற்செடி ; தொட்டாற்சுருங்கி . |
| சுண்டு | தெறிக்கை ; ஒரு சிற்றளவு ; சிறுபாத்திரவகை ; தலைப்பொடுகு ; காய்ச்சுகையில் பாத்திரத்தடியில் பற்றியது ; மூக்கு ; கீழுதடு ; சிறிது . |
| சுண்டுக்கட்டை | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| சுண்டுதல் | நீர் முதலியன வற்றுதல் ; குன்றிப்போதல் ; நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் ; நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் ; வேகவைத்தல் ; வயிறு இழுத்துப்பிடித்தல் ; நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் ; இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல் . |
| சுண்டுவிரல் | சிறுவிரல் . |
| சுண்டுவில் | விளையாட்டுக்கு உதவும் ஒரு வில்வகை . |
| சுண்டெலி | சிறிய எலி . |
| சுண்டை | சுண்டைச்செடி ; கள் ; யானைத் துதிக்கை ; நீர்நிலை . |
| சுண்டைக்காயன் | மதிப்பற்றவன் . |
| சுண்ணக்கல் | சுண்ணாம்புக்கல் |
| சுண்ணகக்குற்றி | நறுமணப்பொடி வைக்கும் சிமிழ் . |
| சுண்ணகம் | நறுமணப்பொடி . |
| சுண்ணச்சாந்து | சுண்ணாம்புக்காரை . |
| சுண்ணப்பொடி | நறுமணப்பொடி . |
| சுண்ணம் | பொடி ; நறுமணப்பொடி ; பூந்தாது ; மலர் ; புழுதி , சதயநாள் ; சுண்ணாம்பு ; ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை ; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு ; பட்டுவகை . |
| சுண்ணமாடுதல் | விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல் . |
| சுண்ணமிடித்தல் | நற்செயலுக்குச் செய்யும் ஒரு சடங்கு ; நறுமணப்பொடி இடித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 477 | 478 | 479 | 480 | 481 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுடுகாட்டுக்கோட்டம் முதல் - சுண்ணமிடித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நறுமணப்பொடி, காண்க, காய்தல், முதலியன, சுண்ணாம்பு, எரித்த, சதயநாள், பழங்கறி, காய்ச்சுதல், யானை, நீர்ப்பூடுவகை, முதலியவற்றை, தொட்டாற்சுருங்கி, சிற்றளவு, நீர்வற்றக், சிறிய, குருதி, நீற்றின், சுடுகோல், பிணம், சுடுகாடு, வெந்நீர், சுடுதல், இரத்தம், கடுகடுத்த, செங்கல், வேகவைத்தல், இறுகக்

