முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சிங்காரப்பாய்ச்சல் முதல் - சிடுமூஞ்சி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சிங்காரப்பாய்ச்சல் முதல் - சிடுமூஞ்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிங்காரப்பாய்ச்சல் | குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை . |
| சிங்காரப்பேச்சு | வேடிக்கைப்பேச்சு ; சரசப்பேச்சு ; அலங்காரப்பேச்சு . |
| சிங்காரம் | அலங்காரம் ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய இன்பச்சுவை . |
| சிங்காரி | அலங்காரமுடையவன்(ள்) . |
| சிங்காரித்தல் | அலங்கரித்தல் ; அலங்கரித்துரைத்தல் . |
| சிங்கி | நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு . |
| சிங்கிகம் | சிறுவழுதலை என்னும் செடிவகை . |
| சிங்கிகை புதல்வன் | கேது . |
| சிங்கிகொள்ளுதல் | வயப்படுத்துதல் . |
| சிங்கிட்டம் | குடசப்பாலைக்கொடி . |
| சிங்கிநாதம் | இடம்பம்செய்கை ; வீண் காலங்கழிக்கை ; வீண்பேச்சு . |
| சிங்கியடித்தல் | ஒரு விளையாட்டுவகை ; கூத்தாடுதல் ; வறுமையால் முட்டுப்படுதல் ; பெண்மைக்குணமின்றி ஒழுகுதல் . |
| சிங்கிரம் | காண்க : சிங்கிட்டம் . |
| சிங்கிலி | குன்றிக்கொடி ; காண்க : புலிதொடக்கி ; இண்டஞ்செடி . |
| சிங்கிவேரம் | சுக்கு . |
| சிங்கினி | வில் ; வில்நாண் . |
| சிங்குதல் | குன்றுதல் ; இளைத்தல் ; கழிந்து போதல் ; அழிதல் ; சிக்கிக்கொள்ளுதல் . |
| சிங்குவம் | சுக்கு . |
| சிங்குவை | நாக்கு . |
| சிங்ஙுவை | நாக்கு ; பத்து நாடியுள் ஒன்று . |
| சிச்சிரம் | மீன்கொத்திப்பறவை . |
| சிச்சிலி | மீன்கொத்திப்பறவை . |
| சிச்சிலிப்பொறி | மதிற்பொறிவகை . |
| சிச்சிலுப்பான் | அம்மைநோய்வகை . |
| சிச்சிலுப்பை | அம்மைநோய்வகை . |
| சிச்சீ | இகழ்ச்சிக்குறிப்பு . |
| சிசம் | தமரத்தைமரம் . |
| சிசிரம் | சந்தனம் ; காண்க : சிசிரருது . |
| சிசிரருது | மாசி பங்குனி மாதங்களாகிய பின் பனிக்காலம் . |
| சிசினம் | ஆண்குறி . |
| சிசு | குழந்தை ; நூக்கமரம் ; கருப்ப சிசு . |
| சிசுகம் | ஒரு மரவகை ; கடற்பன்றி ; குழந்தை . |
| சிசுத்துவம் | குழந்தைத்தன்மை . |
| சிசுநாயகம் | சிறுவர் ஆளும் கட்சி . |
| சிசுமாரம் | கடற்பன்றி ; முதலை . |
| சிசுரம் | கிலுகிலப்பைச்செடி . |
| சிசுரூசை | குற்றேவல் ; பணிவிடை . |
| சிசுரூடை | குற்றேவல் ; பணிவிடை . |
| சிசுவத்தி | குழந்தையைக் கொல்லல் . |
| சிசுவதை | குழந்தையைக் கொல்லல் . |
| சிஞ்சிதம் | அணிகலவொலி . |
| சிஞ்சினீ | வில்நாண் . |
| சிஞ்சுபம் | அசோகமரம் ; நூக்கமரம் . |
| சிஞ்சுமாரம் | முதலை . |
| சிஞ்சுரம் | புளி . |
| சிஞ்ஞாசு | மெய்யறிவை அடைய விரும்புவோன் . |
| சிட்சகன் | ஆசிரியன் ; தண்டிப்பவன் ; மாணாக்கன் . |
| சிட்சித்தல் | தண்டித்தல் ; கற்பித்தல் . |
| சிட்சிப்பு | தண்டனை ; படிப்பிக்கை . |
| சிட்சை | தண்டனை ; பயிற்சி ; இசைப்பயிற்சி முதலியன ; வேதாங்கத்துள் ஒன்று . |
| சிட்சைப்படுதல் | அறிவு பயிற்றப்படுதல் ; ஏவல் செய்தல் . |
| சிட்டங்கட்டுதல் | செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல் ; திரிந்து கருகிப்போதல் . |
| சிட்டப்பட்டார் | அடியார் . |
| சிட்டபரிபாலனம் | நல்லோரைக் காத்தல் . |
| சிட்டம் | இரும்புக்கிட்டம் ; பெருமை ; நீதி ; உயர்ந்தது ; நூற்சிட்டம் . |
| சிட்டர் | பெரியோர் ; கல்வி நிரம்பிய சான்றோர் . |
| சிட்டன் | மாணாக்கன் . |
| சிட்டா | குறிப்பேடு . |
| சிட்டாய்ப்பறத்தல் | சிட்டுக்குருவியைப் போல விரைந்தோடிப் போதல் . |
| சிட்டி | உண்டாக்கப்பட்டன ; படைப்பு ; சிறு மட்கலம் ; ஓர் அளவுக்குறிப்பு ; சூது ; கருவியை உருட்டும் செப்பு ; சீழ்க்கை ; ஒழுங்கு . |
| சிட்டிக்கை | கைந்நொடி ; கைந்நொடிப் பொழுது ; விரற்பிடியளவு . |
| சிட்டித்தல் | படைத்தல் . |
| சிட்டிலிங்கி | காட்டுமரவகை . |
| சிட்டு | சிட்டுக்குருவி ; இழிந்தது ; சிட்டுக்குடுமி ; பெருமை . |
| சிட்டுக்கருவி | குருவிவகை . |
| சிட்டை | ஆடைக்கரைவகை ; பெருஞ் செலவுகளுக்கு விவரங்காட்டும் தனிக் கணக்குப் புத்தகம் . |
| சிடம் | சாதிக்காய் . |
| சிடுக்கு | சிக்கு ; மகளிர் அணிவகை . |
| சிடுசிடுத்தல் | சினக்குறிப்புக் காட்டுதல் . |
| சிடுசிடுப்பு | சினக்குறிப்பு ; காயச்சும் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு . |
| சிடுமூஞ்சி | கடுகடுத்த முகம் ; கடுகடுத்த முகமுடையவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 452 | 453 | 454 | 455 | 456 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்காரப்பாய்ச்சல் முதல் - சிடுமூஞ்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பணிவிடை, குற்றேவல், கடற்பன்றி, குழந்தையைக், முதலை, மாணாக்கன், கடுகடுத்த, பெருமை, தண்டனை, நூக்கமரம், கொல்லல், குழந்தை, நாக்கு, போதல், வில்நாண், சுக்கு, ஒன்று, மீன்கொத்திப்பறவை, சிசு, சிசிரருது, அம்மைநோய்வகை, சிங்கிட்டம்

