முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சாரூபம் முதல் - சாவட்டைப்பயிர் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சாரூபம் முதல் - சாவட்டைப்பயிர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சாரூபம் | கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல் ; இணக்கம் ; பொன்வகை . |
| சாரூரகம் | காண்க : சாருசம் . |
| சாரூரசம் | காண்க : சாருசம் . |
| சாரை | ஒரு பாம்புவகை ; நீளமான கோடு . |
| சாரையோட்டம் | சாரைப்பாம்பின் போக்கு ; நேரே ஓடும்வகை . |
| சாரைவாலன் | நீண்ட வாலுள்ள எருது ; புகையிலைவகை . |
| சாரோசி | நவச்சாரம் . |
| சாரோலை | காண்க : சார்வோலை . |
| சால் | நிறைவு ; நீர்நிரப்பும் பானை ; நீர் இறைக்கும் கலம் ; உழவுசால் ; கும்பராசி ; ஆண்டு . |
| சால்கட்டுதல் | தலைச்சால் உழுதல் ; சாலில் விதைத்துச் செல்லுதல் . |
| சால்பு | மேன்மை ; நற்குணம் ; சான்றாண்மை ; தன்மை ; மனவமைதி ; கல்வி . |
| சால்புமுல்லை | சான்றோருடைய அமைதிகூறும் புறத்துறை . |
| சால்புளி | முறைப்படி . |
| சால்வயிறு | பெருவயிறு . |
| சால்வளைத்தல் | ஏர்ச்சால் உழுதல் . |
| சால்வை | மயிர்க்கம்பளம் ; பொன்னாடை . |
| சால | மிகவும் . |
| சாலக்காரன் | மாயவித்தைக்காரன் ; வஞ்சகன் . |
| சாலக்கிராமம் | காண்க : சாளக்கிராமம் . |
| சாலக்கு | சூழ்ச்சி ; போலி நடிப்பு ; திறமை . |
| சாலகபங்கடர் | இராக்கதர் . |
| சாலகம் | வலை ; சிலந்திவலை ; யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி ; பறவைக்கூடு ; பலகணி ; அரும்பு ; சாக்கடை ; சிறுகுறிஞ்சா ; மாயவித்தை . |
| சாலகராகம் | ஒரு பண்வகை . |
| சாலகன் | விரிவாகப் பேசுகிறவன் ; சகலன் . |
| சாலகிரி | அழுக்ககற்றுமிடம் ; அரண்மனையின் ஒதுக்குப் புரை . |
| சாலடித்தல் | சால்பட உழுதல் . |
| சாலபஞ்சிகை | மரப்பாவை . |
| சாலம் | கூட்டம் ; மதில் ; ஆச்சா ; பலகணி ; வலை ; பூவரும்பு ; கல்வி ; தாழ்வாரம் ; பெருமை ; வஞ்சகம் ; மாயவித்தை ; நடிப்பு ; சபை ; அகலம் ; குறளை ; மருத்துவநூல் ; கொடிமரம் ; வகை . |
| சாலம்பம் | பற்றுக்கோடுள்ளது . |
| சாலமாலம் | வஞ்சகம் . |
| சாலர் | அலங்காரத் தொங்கல்கள் ; நெய்தல் நில மக்கள் ; கைத்தாளவகை . |
| சாலரி | ஒரு வாத்தியவகை . |
| சாலாதார் | பெருமையற்றவர் . |
| சாலாபோகம் | அறச்சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம் . |
| சாலாரம் | ஏணி ; பறவைக்கூடு ; படி . |
| சாலி | செந்நெல் ; நெற்பயிர்ப் பொது ; கள் ; புழுகுசட்டம் ; அருந்ததி ; கவசம் ; மராமரம் ; வேலமரம் . |
| சாலிகன் | நெசவுத்தொழில் செய்பவன் ; சாலியன் நெய்த ஆடை . |
| சாலிகை | கவசம் ; சுங்கவரி . |
| சாலியன் | துணி நெய்வோன் ; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான் ; ஆடை . |
| சாலிவாகனசகாப்தம் | கி .பி . 78 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பேரால் வழங்கும் ஆண்டு . |
| சாலினி | அருந்ததி ; தேவராட்டி ; பேய்ப்பீர்க்கங்கொடி ; கள்வாணிச்சி . |
| சாலுகம் | சாதிக்காய் ; தாமரை முதலியவற்றின் கிழங்கு . |
| சாலுதல் | நிறைதல் ; பொருந்துதல் ; முற்றுதல் ; மாட்சிபெறுதல் . |
| சாலூகம் | காண்க : சாலுகம் . |
| சாலூரம் | தவளை ; மேன்மை . |
| சாலேகம் | சாளரம் ; பூவரும்பு ; சந்தனம் ; சிந்தூரம் ; சலதாரை . |
| சாலேசரம் | வெள்ளெழுத்து . |
| சாலேயம் | செந்நெல் விளையும் நிலம் ; சிறுதேக்கு . |
| சாலை | உணவளிக்கும் அறச்சாலை ; பள்ளிக்கூடம் ; குதிரை , யானை முதலியவற்றின் கூடம் ; பசுக்கொட்டில் ; பொதுமண்டபம் ; வீடு ; வேள்விக்கூடம் ; இருபக்கமும் மரம் செறிந்த பாதை . |
| சாலோக்கியம் | கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை . |
| சாலோகம் | கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை . |
| சாவகக்குறிஞ்சி | குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| சாவகநோன்பி | இல்லறத்திலிருந்து நோன்பு காப்போன் . |
| சாவகம் | ஒரு தீவு ; ஒரு மொழி . |
| சாவகன் | சாவகத் தீவினன் ; மாணாக்கன் ; சனி ; காண்க : சாவகநோன்பி . |
| சாவகாசம் | விரைவின்மை ; வசதி , சௌகரிய சமயம் . |
| சாவட்டை | ஈர் ; பயிர்ச்சாவி ; மெலிந்தவன்(ள்) ; உலர்ந்த வெற்றிலை ; தட்டாரப்பூச்சி ; சிறு வட்டத் தலையணை . |
| சாவட்டைப்பயிர் | சாவியான பயிர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 448 | 449 | 450 | 451 | 452 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாரூபம் முதல் - சாவட்டைப்பயிர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆண்டு, உழுதல், சாலியன், கவசம், அருந்ததி, சாலுகம், கடவுளுடன், சாவகநோன்பி, உறைகை, ஓரிடத்தில், செந்நெல், முதலியவற்றின், வஞ்சகம், கல்வி, மேன்மை, சாருசம், நடிப்பு, பறவைக்கூடு, பூவரும்பு, மாயவித்தை, பலகணி, நிலம்

