முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சம்மியஞானம் முதல் - சமயசத்திரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சம்மியஞானம் முதல் - சமயசத்திரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சமம் | மன அமைதி ; ஒப்பு ; ஒத்த பொருள் ; நடுவு நிலைமை ; இரட்டையான எண் ; போர் ; முதுவேனில் ; ஏற்றத்தாழ்வின்மை ; ஒத்த அடிகளுயுடைய பாடல் ; சமவெடுப்பு . |
| சமம்பாவித்தல் | சமமாதற்கு முயலுதல் . |
| சமமுகம் | முக அபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாதிருத்தல் . |
| சமயக்கட்டு | மதக் கட்டுப்பாடு . |
| சமயக்கணக்கர் | மதவாதிகள் . |
| சமயக்காட்சியர் | மதத்தை உணர்ந்தவர் . |
| சமயக்காரர் | மதத்தைப் பின்பற்றுபவர் . |
| சமயங்கடத்துதல் | வீண்காலம் போக்குதல் ; செயலைச் செய்யாது நாள் கடத்துதல் . |
| சமயச்சந்துக்கட்டு | நெருக்கடியான சமயம் . |
| சமயசத்திரம் | மதவாதத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக்கொண்ட குடை . |
| சம்மியஞானம் | பேரறிவு . |
| சம்மியம் | கூத்தின் விகற்பம் . |
| சம்மியாகம் | கொன்றைமரம் . |
| சம்மெனல் | கம்பீரக்குறிப்பு . |
| சம்மேளனம் | கலப்பு ; கூட்டம் . |
| சம்மோகம் | கவர்ச்சி . |
| சம்மோகனம் | கவர்ச்சி . |
| சம்யோகம் | புணர்ச்சி ; சேர்க்கை ; இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம் . |
| சம்ரட்சணம் | காப்பாற்றுகை . |
| சம்ரட்சணை | காப்பாற்றுகை . |
| சம்வரை | நவ பதார்த்தங்களுள் உயிரைக் கன்மம் அணுகாமல் தடுப்பது . |
| சம்வாகம் | நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர் . |
| சம்வாதம் | சொற்போர் , தருக்கம் ; உரையாடல் . |
| சம்வித்து | அறிவு . |
| சம்வேகம் | அறத்திலும் அதன் பயனிலும் விருப்பமுடைமை . |
| சமக்காளம் | விரிப்புவகை . |
| சமகம் | சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம் . |
| சமகலி | அங்கக் கிரியைகளுள் ஒன்று . |
| சமகன்னி | பூப்படைந்த பெண் . |
| சமகாலம் | ஒரே காலம் . |
| சமகோணம் | ஒத்த கோணங்களையுடைய வடிவம் . |
| சமங்கை | தொட்டாற்சுருங்கி ; ஆடுதின்னாப்பாளை . |
| சமசத்தமம் | வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை . |
| சமசதுரம் | ஒத்த அளவுள்ள நாற்கோணம் . |
| சமசம் | வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம் . |
| சமசி | நிறைவு ; பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு . |
| சமசித்தத்துவம் | எல்லாவற்றையும் சமமாகக் கருதும் மனநிலை . |
| சமசியை | காண்க : சமசி . |
| சமசு | கலகக்கூடம் . |
| சமசை | காண்க : சமசி . |
| சமசோடி | சரியான இணை . |
| சமஞ்சிதன் | ஊர்க்கணக்கன் . |
| சமட்டி | தொகுதி . |
| சமட்டுதல் | காலாலே துவைத்தல் . |
| சமட்டுப்படி | வண்டியில் ஏறியிறங்க அமைக்கும் படி . |
| சமட்டுவண்டி | மிதி வண்டி . |
| சமண் | அருகமதம் ; அம்மணம் . |
| சமணம் | அருகமதம் ; அம்மணம் . |
| சமணர் | சைனர் . |
| சமணி | இலவமரம் . |
| சமத்காரம் | பேச்சுத்திறன் ; செய்யுள் நயம் ; தோற்றம் ; வனப்பு . |
| சமத்தம் | எல்லாம் . |
| சமத்தன் | வல்லவன் . |
| சமத்தானம் | இராச்சியம் ; தலைநகரம் . |
| சமத்து | வல்லமை ; திறமை உள்ளவன் ; நாட்டின் உட்பிரிவு . |
| சமத்துக்காரம் | காண்க : சமத்காரம் . |
| சமத்துக்காரன் | திறமையுள்ளவன் . |
| சமதரிசி | பொதுநோக்குடையவன் . |
| சமதலை | புடைவையின் உள்தலைப்பு . |
| சமதளம் | சமமான பூமி ; மக்கள் கூட்டம் . |
| சமதாளம் | ஒன்பது வகைத் தாளத்துள் ஒன்று . |
| சமதீதம் | ஐக்கியம் ; கழிந்தது . |
| சமதை | ஒப்பு ; ஒரு சார்பின்மை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் . |
| சமநிலை | நடுவுநிலைமை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் ; நிறையொத்த நிலை ; சாந்தம் என்னும் சுவை ; ஐவகைப் பாதங்களுள் ஒன்று . |
| சமநிலைவஞ்சி | இருசீரடியால் வரும் வஞ்சிப்பாட்டு . |
| சமப்பால் | வன்பாலும் , மென்பாலுமின்றி இடைத்தரமாய் உள்ள பூமி ; முல்லை நெய்தல் நிலங்கள் . |
| சமபந்தி | ஒரே பந்தியில் உண்ணுமுரிமை ; விருந்தில் ஒரே வரிசை . |
| சமபூச்சியம் | ஒத்த மேம்பாடு . |
| சமபூமி | மேடுபள்ளமில்லாத நிலம் ; போர்க்களம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 426 | 427 | 428 | 429 | 430 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சம்மியஞானம் முதல் - சமயசத்திரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒத்த, காண்க, சமமாகக், சமசி, ஒன்று, இடைமை, மென்மை, இம்மூன்றும், கலந்து, செய்யுட்குணம், தொடுக்கும், வரத், வன்மை, அருகமதம், காப்பாற்றுகை, கவர்ச்சி, கூட்டம், நிலை, ஒப்பு, சமத்காரம், அம்மணம், பூமி

