முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சந்தனச்சாரல் முதல் - சந்திரகாசம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சந்தனச்சாரல் முதல் - சந்திரகாசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சந்தானகரணி | முரிந்த வுறுப்புகளை இணைக்கும் மருந்து ; இலுப்பைமரம் ; அறுகம்புல் ; பெருமருந்து |
| சந்தானகுரவர் | சைவசித்தாந்தத்தைப் பரவச் செய்த பின்வந்த மெய்கண்டதேவர் , அருணந்தி சிவாசாரியார் , மறைஞான சம்பந்தர் , உமாபதி சிவாசாரியார் எனும் நால்வர் . |
| சந்தானகுரு | மரபுவழிக் குரு . |
| சந்தானபரம்பரை | சந்தான குரவரான சைவாசாரிய பரம்பரை . |
| சந்தானம் | மரபு , சந்ததி ; குருபரம்பரை ; தொடர்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; அம்பு எய்கை . |
| சந்தானலட்சுமி | எண்வகை இலட்சுமி வடிவங்களுள் ஒன்று ; மக்கட்பேறு . |
| சந்தானவிரதம் | மகப்பேறடைய நோற்கும் நோன்பு . |
| சந்தானி | வெண்காரம் . |
| சந்தி | இசைப்பு ; கூடுகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; எழுத்து சொற்களின் புணர்ச்சி ; நட்பாக்குகை ; தறுவாய் ; மூங்கில்மரம் ; ஒரு பெரும்பண்வகை ; நாடகச்சந்தி ; வரிக்கூத்துவகை ; காலைமாலை நியமம் ; மாலைநேரம் ; சந்தியாவந்தனம் ; வணக்கம் ; திருவிழா ; கோயிற்கட்டளை ; பாடை ; தக்க சமயம் ; கோயில் கால பூசை . |
| சந்திக்கரை | சாலை , ஆறு முதலியன கூடுமிடம் . |
| சந்திக்காப்பு | மாலையில் குழந்தைகளுக்குச் செய்யப்படும் ஒரு சடங்குவகை . |
| சந்திக்கூத்து | திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை . |
| சந்திக்கோணம் | தேர் உறுப்புகளுள் ஒன்று . |
| சந்திகம் | சன்னிநோய்வகை . |
| சந்திகை | சிற்றுண்டிவகை . |
| சந்தித்தம் | ஐயுறப்பட்டது . |
| சந்தித்தல் | சேர்த்தல் ; எதிர்தல் ; தெரிந்து கொள்ளுதல் . |
| சந்திப்பு | எதிர்கை ; இசைவு ; ஆறு , தெரு முதலியன கூடுமிடம் ; காணிக்கை . |
| சந்திபண்ணுதல் | சந்தியாவந்தனஞ் செய்தல் . |
| சந்திமிதித்தல் | நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல் . |
| சந்திமுடித்தல் | நியமநிட்டைகளை நிறைவேற்றுதல் . |
| சந்தியாகாலம் | சாயங்காலம் ; மாலைநேரம் . |
| சந்தியாமடம் | அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம் . |
| சந்தியாராகம் | செவ்வானம் . |
| சந்தியாவந்தனம் | காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு . |
| சந்தியாவந்தனை | காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு . |
| சந்தியில் இழுத்தல் | பழிப்பிற்கிடமாக்குதல் ; ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல் . |
| சந்தியில்நிற்றல் | ஆதரவின்றி இருத்தல் ; தெருச்சந்தியில் நிற்றல் . |
| சந்தியை | காலை , மாலை எனப்படும் நாட் பிரிவுள் ஒன்று ; மல்லிகை . |
| சந்திரகணம் | நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை . |
| சந்திரகம் | மயிற்றோகைக் கண் ; மயிற்றோகை ; ஓலையின் உறைச்சுருள் ; வெள்ளைமிளகு ; நகம் . |
| சந்திரகலை | சந்திரன்கூறு ; சந்திரிகை ; பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை ; இடைகலை . |
| சந்திரகாசம் | சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள் ; காண்க : சந்திரகாசரசம் . |
| சந்தனச்சாரல் | சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு . |
| சந்தனச்சேறு | காண்க : சந்தனக்குழம்பு . |
| சந்தனஞ்சாத்துதல் | சந்தனக்காப்பிடுதல் . |
| சந்தனத்திரணை | சந்தனக்கட்டி . |
| சந்தனத்திரி | ஊதுவத்தி . |
| சந்தனத்தேய்வை | காண்க : சந்தனக்குழம்பு . |
| சந்தனநறுநீர் | சந்தனங் கலந்த பனிநீர் . |
| சந்தனப்பில்லை | மாடுகளில் காணப்படும் ஒருவகை மஞ்சள்நிறம் . |
| சந்தனப்பீடிகை | சந்தனமரத்தாலான மணைப்பலகை . |
| சந்தனப்பூச்சு | உடலிற் சந்தனம் பூசுகை . |
| சந்தனம் | சந்தனமரம் ; அரைத்த சந்தனம் ; தேர் . |
| சந்தனமிழைத்தல் | சந்தனம் உரைத்தல் . |
| சந்தனவெற்பு | சந்தனமரம் உண்டாகும் மலை ; பொதியமலை . |
| சந்தனவேங்கை | சந்தனமரவகை . |
| சந்தனாசலம் | காண்க : சந்தனவெற்பு . |
| சந்தனாத்திரி | காண்க : சந்தனவெற்பு . |
| சந்தனாதி | வேங்கைமரம் ; சந்தனாதித்தைலம் . |
| சந்தனாதித்தைலம் | சந்தனம் முதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம் . |
| சந்தா | கட்டணம் |
| சந்தாபம் | சுடுதல் ; மனத்துன்பம் ; செய்த பாவத்திற்கு இரங்குகை . |
| சந்தாயம் | நிலச் சொந்தக்காரர் குத்தகைக்கு நிலம் விடாமல் தாமே பார்த்தல் ; ஊர்ப் பொதுச்சொத்தைப் பங்கிட்டு அனுபவித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 421 | 422 | 423 | 424 | 425 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்தனச்சாரல் முதல் - சந்திரகாசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சந்தனம், ஒன்று, சந்தனவெற்பு, வழிபாடு, காலை, கூடுமிடம், சந்தனக்குழம்பு, மாலைநேரம், சந்தனமரம், சந்தனாதித்தைலம், சிவாசாரியார், செய்யும், மந்திரங்களால், சந்தியாவந்தனம், தேர், செய்த, உச்சி, மாலைகளில், முதலியன

