முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சத்தியோ நிர்வாண தீட்சை முதல் - சதமகன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சத்தியோ நிர்வாண தீட்சை முதல் - சதமகன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சத்து | உண்மை ; என்றும் உள்ளது ; நன்மை ; சாரம் ; வலிமை ; சித்து , அறிவு ; ஒழுக்கத்திற் சிறந்தவன் ; ஞானி ; மாவு ; கருப்பூரச் சிலா சத்து ; துத்தம் ; அமைதிகுறிக்குஞ் சொல் . |
| சத்துக்கொடுத்தல் | வலிமை உண்டாக்குதல் . |
| சத்துமா | வறுத்த அரிசியின் மாவு , பொரிமாவு . |
| சத்துமொத்தெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சத்துராதி | பகைவன் . |
| சத்துராளி | பகைவன் . |
| சத்துரு | பகைவன் . |
| சத்துருசங்காரம் | பகைவரை அழிக்கை . |
| சத்துருத்தானம் | இலக்கினத்துக்கு ஆறாம் வீடு , சாதகனுக்குப் பகையிடம் . |
| சத்துருதுரந்தரன் | பகைவர்களை வெல்பவன் . |
| சத்துருபட்சத்தார் | பகையினத்தவர் . |
| சத்துருவாதி | பகைவன் . |
| சத்துவகர் | வியத்தகு செயல்களை நிகழ்த்த வல்ல தேவதூதர் . |
| சத்துவகுணம் | மூவகைக் குணத்துள் ஒன்று , நற்செயல்களில் மனத்தைச் செலுத்தும் குணம் . |
| சத்துவம் | உளதாந்தன்மை ; சாரம் ; இயல்பு ; வலிமை ; சத்துவகுணம் ; உயிரி ; ஒரு மெய்ப்பாட்டுவகை . |
| சத்துவரம் | விரைவு ; வேதிகை . |
| சத்துவாரி | பார்வை மங்கலாய்த் தெரிவது ; வெள்ளெழுத்து . |
| சத்துவாலம் | ஓமகுண்டம் ; தருப்பைப்புல் ; கருப்பம் . |
| சத்துவேது | நேர்மையான காரணம் . |
| சத்தை | உளதாந்தன்மை ; பலன் ; உண்மை ; சாரம் ; வலிமை . |
| சதக்கல் | சதுப்புநிலம் , சேற்றுநிலம் . |
| சதக்கிரது | காண்க : சதமகன் . |
| சதக்கிருது | காண்க : சதமகன் . |
| சதக்கிருதன் | காண்க : சதமகன் . |
| சதக்கினி | நூற்றுவரைக்கொல்லி என்னும் மதிற்பொறி . |
| சதகம் | நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை ; நூற்றாண்டு ; தான்றிமரம் . |
| சதகுப்பி | ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் . |
| சதகுப்பை | ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் . |
| சதகோடி | நூறுகோடி : நூறு முனைகளையுடைய வச்சிரப்படை ; இடி . |
| சதகோடிசங்கம் | பெருங்கூட்டம் . |
| சதங்கை | காலணி , கிண்கிணி ; பெண்களும் குழந்தைகளும் அணியும் ஓர் அணிவகை . |
| சதங்கைக்கொதி | உலைநீரின் ஒருவகைக் கொதிப்பு . |
| சதங்கைத்தாமம் | ஒரு பூமாலைவகை . |
| சதங்கைப்பூரமி | ஒரு பூரான்வகை . |
| சதங்கைப்பூரான் | ஒரு பூரான்வகை . |
| சதங்கைமாலை | ஒருவகைக் கழுத்தணி ; மாலை வகை ; குதிரைகளின் கழுத்தணி . |
| சதசத்து | உள்ளதும் இல்லதும் ; ஆன்மா . |
| சதசதத்தல் | நொதுநொதுத்தல் , ஈரம் பற்றியிருத்தல் . |
| சதசதப்பு | நொதுநொதுப்பு ஈரப்பற்று . |
| சதசல்லியம் | பெருந்தொந்தரவு . |
| சதசு | கற்றோர் கூடிய அவை . |
| சதஞ்சீவி | சிரஞ்சீவி ; நூறாண்டு வாழ்பவன் . |
| சததம் | எப்பொழுதும் |
| சததளம் | நூறு இதழ்களையுடைய தாமரை . |
| சததாரை | நூறு முனைகளையுடைய வச்சிரப் படை ; இடி . |
| சதநியுதம் | கோடி . |
| சதபத்திரம் | நூறு இதழ்களையுடைய தாமரை ; கிளி ; மயில் ; வெண்ணாரை ; தச்சன் கருவி . |
| சதபத்திரி | ஆடுதின்னாப்பாளை ; நூறு இதழ்களையுடைய தாமரை . |
| சதபதுமம் | நூறு இதழ்களையுடைய தாமரை . |
| சதபுட்பம் | மருந்துப் பூண்டுவகை ; ஒமம் . |
| சதபுட்பி | மருந்துப் பூண்டுவகை ; ஒமம் . |
| சதம் | நூறு , ஒரு ரூபாவின் 1/100 பங்கு உள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம் ; இலை ; இறகு ; அறுபட்ட பயிர் ; அழியாது ; இறுதி ; தமாலமரம் . |
| சதமகன் | நூறு வேள்விகள் செய்தவன் , இந்திரன் . |
| சத்தியோ நிர்வாண தீட்சை | காண்க : சத்திய நிருவாணம் . |
| சத்தியோ நிர்வாணம் | காண்க : சத்திய நிருவாணம் . |
| சத்திரகன்மம் | ஆயுதத்தால் அறுத்துச் செய்யும் சிகிச்சை . |
| சத்திரசாலை | அன்னசாலை , அறக்கூழ்ச்சாலை . |
| சத்திரபதி | அரசன் ; குடையை உடைய தலைவன் . |
| சத்திரம் | அன்னசாலை ; பல நாள்கள் செய்யும் வேள்விவகை ; கைவிடாப் படை ; இரும்பு ; வேல் ; இரண வைத்தியக் கத்தி ; யசுர் வேதத்தின் ஓர் உட்பிரிவு ; குடை ; வியப்பு ; கவிழ்தும்பைச்செடி ; தும்பைச்செடி . |
| சத்திரம்வைத்தல் | ஆயுதத்தாற் புண்ணை அறுத்தல் . |
| சத்திரவித்தை | அறுவை மருத்துவம் ; படைக்கலன் பயிலுங் கல்வி . |
| சத்திராட்சி | அரத்தைச்செடி . |
| சத்திரி | யானை ; சத்திரியன் . |
| சத்திரித்தல் | ஆயுதத்தால் அறுத்துச் சிகிச்சை செய்தல் . |
| சத்திரியன் | அரச வகுப்பினன் . |
| சத்திரூபம் | சிவனது அருள்வடிவம் . |
| சத்திலி | கருப்பூரம் . |
| சத்தின்வட்டம் | விருந்தின் உணவுவகைகள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 417 | 418 | 419 | 420 | 421 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்தியோ நிர்வாண தீட்சை முதல் - சதமகன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நூறு, காண்க, இதழ்களையுடைய, தாமரை, பகைவன், சதமகன், வலிமை, சாரம், சத்திய, சத்தியோ, பூண்டுவகை, நிருவாணம், ஒமம், ஆயுதத்தால், அறுத்துச், செய்யும், மருந்துப், அன்னசாலை, சத்திரியன், சிகிச்சை, ஒருவகைக், சத்துவகுணம், மாவு, உண்மை, சத்து, உளதாந்தன்மை, மருந்துப்பூண்டுவகை, பூரான்வகை, சொல், முனைகளையுடைய, ஓமம், கழுத்தணி

