முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அரவங்கலக்கம் முதல் - அரிகண்டம் பாடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அரவங்கலக்கம் முதல் - அரிகண்டம் பாடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அரளி | அலரி ; பீநாறிமரம் . |
| அரளுதல் | பிரமித்தல் , திகைத்தல் ; மிக அஞ்சுதல் . |
| அரற்றல் | அரற்றுதல் ; யாழ்நரம்போசை . |
| அரற்று | புலம்பல் ; குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| அரன் | பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர் ; எப்பொருட்கும் இறை ; அழிப்போன் ; அரசன் ; நெருப்பு ; மஞ்சள் . |
| அரன்தோழன் | சிவனின் தோழனான குபேரன் . |
| அரன்நாள் | சிவனுக்குரிய நாள் , திருவாதிரை . |
| அரன்மகன் | முருகக் கடவுள் ; விநாயகன் ; வீரபத்திரன் . |
| அரன்வெற்பு | சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயமலை . |
| அரனிடத்தவள் | சிவபெருமானின் இடப்பக்கத்திலிருக்கும் உமை |
| அரனெறி | திருவாரூரில் உள்ள ஒரு சிவாலயம் . |
| அரா | பாம்பு ; ஆயிலியநாள் ; நாகமல்லி . |
| அராக்கோள் | இராகு கேதுக்கள் . |
| அராகம் | கலிப்பாவின் ஓர் உறுப்பு ; தக்கராகம் ; பாலையாழ்த்திற வகை ; ஆசை ; சிவப்பு ; பொன் . |
| அராகித்தல் | இடையறாது கடுகிச் செல்லுதல் . |
| அராசகம் | நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம் . |
| அராட்டுப்பிராட்டு | போதியதும் போதாததுமானது . |
| அராத்துதல் | அராவுதல் , மிண்டுதல் . |
| அராதி | பகைவன் . |
| அராந்தானம் | சமணப்பள்ளி . |
| அராநட்பு | வேண்டாவெறுப்பு . |
| அராபதம் | வண்டு . |
| அராமி | கொடியன்(ள்) . |
| அராமுனிவர் | பதஞ்சலிமுனிவர் . |
| அராவாரம் | காண்க : கொடிமுந்திரி . |
| அராவுதல் | அரத்தால் தேய்த்தல் ; உராய்தல் ; மாறுபடுதல் . |
| அராவைரி | கருடன் ; மயில் ; கீரி . |
| அராளகடகாமுகம் | நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று . |
| அராளம் | காண்க : இருவாட்சி ; குங்கிலியம் ; இணையா வினைக்கை வகை . |
| அரி | வண்டு ; மென்மை ; கண்வரி ; கண் ; சிலம்பினுட்பரல் ; சிலம்பு ; உள்துளை ; மூங்கில் ; சோலை ; தேர் ; மக்கள் துயிலிடம் ; கட்டில் ; கடல் ; தகட்டு வடிவு ; கூர்மை ; வலிமை ; மரவயிரம் ; அரியப்பட்ட கைப்பிடிக் கதிர் ; அரிசி ; கள் ; குற்றம் ; நீர்த்திவலை ; ஆயுதம் ; பகை ; நிறம் ; அழகு ; பொன்னிறம் ; திருமால் ; சிவன் ; இந்திரன் ; யமன் ; காற்று ; ஒளி ; சூரியன் ; சந்திரன் ; சிங்கம் ; குதிரை ; குரங்கு ; பாம்பு ; தவளை ; கிளி ; திருவோணம் ; துளசி ; நெல் ; நெற்கதிர் . |
| அரிக்கஞ்சட்டி | அரிசி களையும் சட்டி . |
| அரிக்கண்சட்டி | அரிசி களையும் சட்டி . |
| அரிக்காரன் | தூதன் ; கட்டியங் கூறுவோன் . |
| அரிகண்டம் | கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் ; ஒருவித வேடம் ; தொல்லை . |
| அரிகண்டம் பாடுதல் | கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு எதிரி கொடுக்கும் குறிப்புக்கு ஏற்பப் பாடுதல் . |
| அரவங்கலக்கம் | சாகுங் காலத்துண்டாகும் அறிவுத் தெளிவு ; முகப்பொலிவு . |
| அரவணிந்தோன் | பாம்புகளை அணிந்திருக்கும் சிவன் . |
| அரவணை | பாம்புப் படுக்கை ; திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல் . |
| அரவணைச்செல்வன் | பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமால் . |
| அரவணைத்தல் | தழுவுதல் ; ஆதரித்தல் . |
| அரவணையான் | காண்க : அரவணைச் செல்வன் . |
| அரவதண்டம் | யமதண்டனை . |
| அரவப்பகை | பாம்புக்குப் பகையான கருடன் . |
| அரவம் | பாம்பு ; ஆயிலிய நாள் ; இராகுகேதுக்கள் ; ஆரவாரம் ; பரலுள்ள சிலம்பு ; படையெழுச்சி ; பதஞ்சலிமுனிவர் ; குங்குமம் ; அதிமதுரம் ; மரமஞ்சள் ; வில்லின் நாண் . |
| அரவன் | பாம்புகளை அணிந்துள்ள சிவன் . |
| அரவாட்டிப்பச்சை | தொழுகண்ணிச்செடி . |
| அரவாபரணன் | காண்க : அரவன் . |
| அரவாய்க் கடிப்பகை | அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை . |
| அரவித்தல் | ஒலியெழுப்பல் . |
| அரவிந்தப்பாவை | தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் . |
| அரவிந்தம் | தாமரை ; இரசம் . |
| அரவிந்தராகம் | பதுமராகம் . |
| அரவிந்தலோசனன் | தாமரைக் கண்ணன் , திருமால் . |
| அரவிந்தன் | தாமரையிலிருந்து தோன்றிய பிரமன் |
| அரவிந்தை | காண்க : அரவிந்தப்பாவை . |
| அரவு | பாம்பு ; ஒலி ; உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை ; நாகமரம் ; ஆயிலியம் ; தொழிற்பெயர் விகுதி . |
| அரவுயர்த்தோன் | காண்க : அரவக்கொடியோன் . |
| அரவுரி | பாம்புத்தோல் ; பாம்புச் சட்டை . |
| அரவுருட்டுதல் | வைக்கோற் புரியை உடைப்பிற் செலுத்துதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரவங்கலக்கம் முதல் - அரிகண்டம் பாடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பாம்பு, திருமால், அரிசி, சிவன், பாடுதல், கழுத்தில், அரிகண்டம், பாம்புகளை, பாம்புப், அரவிந்தப்பாவை, அரவன், சட்டி, களையும், கருடன், வீற்றிருக்கும், சிலம்பு, வண்டு, அராவுதல், நாள், பதஞ்சலிமுனிவர்

