தமிழ் - தமிழ் அகரமுதலி - கௌவை முதல் - சக்கரவர்த்தினி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சக்கட்டையாள் | வலியற்றவன் , ஆற்றலற்றவன் . |
| சக்கடி | ஒரு கூத்துவகை . |
| சக்கடிணி | ஒரு கூத்துவகை . |
| சக்கத்து | முத்துவகை . |
| சக்கதேவி | காண்க : சக்கம்மா . |
| சக்கந்தம் | நிந்தை . |
| சக்கப்பிரதமன் | பலாப்பழங்கொண்டு செய்யப்படும் பாயசவகை . |
| சக்கம்மா | ஒரு பெண்தேவதை . |
| சக்கரக்கல் | திருமால்கோயில்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல் . |
| சக்கரக்கவி | வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்தில் அமையுமாறு பாடும் மிறைக்கவி . |
| சக்கரக்கள்ளன் | உலோபி , ஒன்றுங்கொடாதவன் . |
| சக்கரக்காரன் | செல்வன் . |
| சக்கரச்செல்வம் | இந்திரனது செல்வம் ; பெருஞ்செல்வம் . |
| சக்கரஞ்சுற்றுதல் | சுற்றி விளையாடுதல் ; சுழலுதல் ; பெரிதும் துன்புறுதல் . |
| சக்கரத்தீவட்டி | வட்டத் தீவட்டி . |
| சக்கரத்தேமல் | நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டமாக உள்ள தேமல் . |
| சக்கரத்தேர் | இழுப்புத்தேர் . |
| சக்கரதரன் | சக்கரத்தைத் தரித்த திருமால் ; படத்தோடு கூடிய பாம்பு . |
| சக்கரதாரி | திருமால் . |
| சக்கரப்பொறி | வைணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை ; இயந்திரப் பொறி . |
| சக்கரபதி | தகரச்செடி . |
| சக்கரபந்தம் | காண்க : சக்கரக்கவி . |
| சக்கரபரிபாலனம் | அரசாட்சிசெய்கை . |
| சக்கரபாணி | சக்கரப்பட்டையைக் கையிலுடைய திருமால் ; துர்க்கை . |
| சக்கரம் | வட்டம் ; உருளை ; குயவன் சக்கரம் ; சக்கரப்படை ; கிரகச் சக்கரம் ; சக்கரபந்தம் ; சக்கரமாற்று ; பழைய நாணயவகை ; சக்கரவாகப் புள் ; சக்கர எந்திரம் ; செக்கு ; பூமி ; மதில் ; கடல் ; மலை ; பிறப்பு ; 60 ஆண்டுக்காலம் ; வட்டவடிவு ; பெருமை ; மலை மல்லிகை ; பீர்க்கு . |
| சக்கரமாற்று | சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் . |
| சக்கரயூகம் | ஒரு படையணி , சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு . |
| சக்கரரேகை | ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு . |
| சக்கரவர்த்தி | மன்னர்மன்னன் , அரசர்க்கரசன் , பேரரசன் : திகிரி மன்னவர் . |
| சக்கரவர்த்தித்திருமகன் | தசரதச் சக்கரவர்த்தியின் மகனான இராமபிரான் . |
| சக்கரவர்த்தினி | பேரரசி ; சடாமாஞ்சில் ; செம்பஞ்சு . |
| கௌவை | ஒலி ; வெளிப்பாடு ; பழிச்சொல் ; துன்பம் ; கள் ; எள்ளிளங்காய் ; ஆயிலியநாள் ; செயல் . |
| கௌளம் | ஒரு பண்வகை . |
| கௌளி | பல்லி ; நூறு வெற்றிலைகொண்ட கட்டு ; ஒரு பண்வகை . |
| கௌளிக்காதல் | நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் . |
| கௌளிச்சொல் | நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் . |
| கௌளிப்பாத்திரம் | வெள்ளை வெற்றிலைவகை . |
| கௌளிபந்து | ஒரு பண்வகை . |
| கௌளிபாத்திரம் | மஞ்சள்நிறக் காய்காக்கும் தென்னைவகை ; தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் உணவுகொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் . |
| ங | ஓர் உயிர்மெய்யெழுத்து (ங்+அ) ; குறுணியைக் குறிக்கும் குறி . |
| ஙகரம் | குறுணியளவு . |
| ஙனம் | சுட்டுவினாவை யடுத்து இடம் , தன்மை முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல் . |
| ச | ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்+அ) . |
| சஃகுல்லி | சிற்றுண்டிவகை . |
| சக்கட்டம் | பரிகாசம் ; நிந்தை . |
| சக்கட்டிசக்கட்டியெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சக்கட்டை | திறமையின்மை ; இளப்பம் ; மடையன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 404 | 405 | 406 | 407 | 408 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கௌவை முதல் - சக்கரவர்த்தினி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சக்கரம், திருமால், பண்வகை, நன்மை, பாடலின், தீமைகளை, உயிர்மெய்யெழுத்து, சத்தம், பல்லிச், அறிவிக்கும், சக்கர, சக்கரபந்தம், நிந்தை, சக்கம்மா, காண்க, குறிக்கும், சக்கரக்கவி, கூத்துவகை, நற்பேற்றைக், சக்கரமாற்று

