தமிழ் - தமிழ் அகரமுதலி - கோரம்பு முதல் - கோலாஞ்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோலப்பொடி | கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி . |
| கோலம் | அழகு ; நிறம் ; உருவம் ; தன்மை ; வேடம் ; ஆபரணம் ; அலங்காரம் ; மா , கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம் ; விளையாட்டு ; பெருந்துன்பநிலை ; முயற்சி ; சிறு நீரோட்டம் ; பன்றி ; முள்ளம்பன்றி ; இலந்தைமரம் ; தெப்பம் ; குரங்கு ; பாக்கு ; பீர்க்கங்கொடி ; கருக்கொண்ட மகளிர்க்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு ; தக்கோலம் . |
| கோலம்போடுதல் | தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல் . |
| கோலம்வருதல் | ஊர்வலம் வருதல் . |
| கோலமா | காண்க : கோலப்பொடி . |
| கோலமாறுதல் | முன்கொண்ட தோற்றம் மாறுதல் ; மாற்றுருக் கொள்ளுதல் . |
| கோலமிடுதல் | காண்க : கோலம்போடுதல் . |
| கோலரம் | முளை . |
| கோலலவணம் | துருசு . |
| கோலவேர் | நிலப்பனை . |
| கோலறை | கூலியாள் வேலை செய்வதற்காக அளவுகோலால் அளந்து கொடுக்கப்படும் நிலம் . |
| கோலறையிடுதல் | வேலை செய்யும் இடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல் . |
| கோலா | ஒரு மீன்வகை ; திப்பிலி ; ஒரு குடிநீர் வகை . |
| கோலாகலம் | பேரொலி , கூக்குரல் ; பகட்டு . |
| கோலாகலம்பண்ணுதல் | ஒழுங்கீனமாய் நடத்தல் ; பகட்டுச்செய்தல் . |
| கோலாங்கூலம் | முசு . |
| கோலாச்சி | ஒரு மீன்வகை . |
| கோலாஞ்சி | தற்பெருமை , பகட்டு . |
| கோரம்பு | தீம்பு . |
| கோரரூபம் | அச்சுறுத்தும் வடிவம் ; நரகவிசேடம் . |
| கோரவாரம் | சந்தனமரம் . |
| கோரவாரி | பெருங்காற்று , புயல் . |
| கோரி | பார்வதி ; முகமதியர் பிணக்குழி மீதுள்ள ஒரு கட்டடம் . |
| கோரிக்கை | வேண்டுகோள் ; விருப்பம் . |
| கோரிகை | அகப்பை ; மரக்குதிரைமேல் வைக்கும் ஓலை நெற்கூடை . |
| கோரித்தல் | கடுமையாதல் . |
| கோரிதம் | துகள் |
| கோரியை | அகப்பை . |
| கோருதல் | வேண்டிக்கொள்ளுதல் ; விரும்புதல் . |
| கோரை | ஒரு புல்வகை . |
| கோரைப்பல் | விகாரமான பல் ; நீண்ட பெரிய பல் ; பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல் . |
| கோரைப்பாய் | கோரைப்புல்லால் பின்னப்பட்ட பாய் . |
| கோரையுள்ளான் | உள்ளான் பறவைவகை . |
| கோரோசனம் | பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் . |
| கோரோசனை | பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் . |
| கோல் | கம்பு ; மரக்கொம்பு ; ஊன்றுகோல் ; செங்கோல் ; அளவுகோல் ; எழுதுகோல் ; ஓவியந்தீட்டுங் கோல் ; முத்திரைக்கோல் ; தீக்கடைகோல் ; பிரம்பு ; குதிரைச்சம்மட்டி ; கொழு ; அம்பு ; ஈட்டி ; குடை முதலியவற்றின் காம்பு ; யாழ்நரம்பு ; துலாக்கோல் ; துலாராசி ; அரசாட்சி ; ஐப்பசி மாதம் ; அணியின் சித்திரவேலை ; தூண்டில் ; இலந்தைமரம் ; தெப்பம் ; திரட்சி . |
| கோல்கொடுத்தல் | குருடருக்குப் பற்றுக்கோடு கொடுத்தல் ; கோலால் குருடனை நடத்திவருதல் . |
| கோல்கொள்ளுதல் | தேர் முதலியன செலுத்துதல் . |
| கோல்மட்டம் | கோல் அளவு . |
| கோல்மரம் | வண்டியின் ஏர்க்கால்மரம் . |
| கோல்வலித்தல் | தண்டால் ஓடந்தள்ளுதல் . |
| கோல்வள்ளம் | விளிம்புள்ள கிண்ணம் ; பிரம்பு கட்டின வட்டில் . |
| கோல்வளை | ஒரு வளையல்வகை . |
| கோல்விழுக்காடு | தற்செயல் . |
| கோலக்கல் | கோலப்பொடியாக இடித்தற்குரிய கல் . |
| கோலக்காரன் | கேலிக்காரன் . |
| கோலகம் | திப்பிலி . |
| கோலங்காட்டுதல் | மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக்கொண்டு வருதல் ; கோபித்துச் செல்லுதல் . |
| கோலங்காணுதல் | அலங்கரித்தல் ; துன்பத்திற்கு உள்ளாதல் . |
| கோலங்கொள்ளுதல் | சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் ; பொய்த்தோற்றங் காட்டுதல் ; மந்தாரமாயிருத்தல் . |
| கோலச்சங்கம் | முட்சங்குச்செடி . |
| கோலச்சங்கு | முட்சங்குச்செடி . |
| கோலச்சாரி | வேடமகள் கொற்றவை உருக்கொண்டு ஆடும் கூத்து . |
| கோலஞ்செய்வாள் | தலைவிக்கு ஒப்பனை செய்பவள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 400 | 401 | 402 | 403 | 404 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோரம்பு முதல் - கோலாஞ்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோல், பசுவின், வயிற்றினின்று, அகப்பை, பகட்டு, எடுகக்ப்பெறும், நிறமுள்ள, முட்சங்குச்செடி, பிரம்பு, மணப்பண்டம், திப்பிலி, மஞ்சள், மீன்வகை, இலந்தைமரம், தெப்பம், வேடம், கோலம், கற்பொடி, செய்யும், கோலம்போடுதல், கொடுத்தல், வேலை, காண்க, வருதல், கோலப்பொடி

