முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கைவட்டணை முதல் - கொக்கரித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கைவட்டணை முதல் - கொக்கரித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கைவளை | கைத்தொடி ; கடகம் ; சிறுவளை ; மேற்கூரையைத் தாங்குமாறு சுவர் முதலியவற்றில் அமைக்குஞ் சட்டம் . |
| கைவற்றுதல் | பொருளின்றி நிலைமை தாழதல் ; கையில் பொருளறுதல் . |
| கைவறளுதல் | பொருளின்றி நிலைமை தாழதல் ; கையில் பொருளறுதல் . |
| கைவன்மை | கைத்திறம் . |
| கைவாக்கு | கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை . |
| கைவாகு | கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை . |
| கைவாங்குதல் | நீங்குதல் ; கையை வெட்டுதல் . |
| கைவாசி | காண்க : கைராசி . |
| கைவாய்க்கால் | சிறு கால்வாய் . |
| கைவாரம் | கைதூக்கிக் கூறும் வாழ்த்து ; செய்கைப்பங்கு ; கூலி ; வயிரம் முதலியவற்றின் முனை ; சரிவாரம் . |
| கைவாரிகள் | நின்றேத்துவோர் , அரசவையில் வாழ்த்துக் கூறுவோர் . |
| கைவாள் | சிறுவாள் , கைரம்பம் . |
| கைவாளம் | அடைப்பை . |
| கைவாளை | அடைப்பை . |
| கைவாறு | கைத்தாங்கல் ; தக்க சமயம் . |
| கைவிசேடம் | கைராசி ; பரிசு . |
| கைவிஞ்சுதல் | அளவுகடத்தல் . |
| கைவிட்டம் | வீட்டின் குறுக்குவிட்டம் . |
| கைவிடுதல் | கைவிட்டுவிடுதல் , விட்டொழிதல் . |
| கைவிடுபடை | அம்பு . |
| கைவிதிர்த்தல் | மறுப்பு , அச்சம் , புகழ்ச்சி ஆகியவற்றின் குறியாகக் கையை அசைத்தல் . |
| கைவிதை | வெந்தயம் ; நாற்றைப் பெயர்த்து நடாது விதைத்தபடியே பயிர்செய்கை . |
| கைவிதைப்பு | புழுதிவிதைப்பு . |
| கைவிரித்தல் | இரத்தற்காகக் கையை நீட்டுதல் ; தன்னால் இயலாமை குறிப்பித்தல் , மறுத்தல் . |
| கைவிரைவு | கையினால் விரைந்து தொழில் செய்யும் தன்மை . |
| கைவிலங்கு | கைக்கிடும் விலங்கு . |
| கைவிலை | ரொக்கவிலை ; நடப்பு விலை . |
| கைவிளக்கு | சிறு விளக்கு . |
| கைவிளி | கையால் உதட்டை மடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை ஒலி . |
| கைவினை | கைத்தொழில் ; கைவேலை . |
| கைவினைஞன் | தொழிலாளி . |
| கைவீச்சு | கைவீசுகை ; கையிருப்புத் தொகை ; கைத்திறம் . |
| கைவேகம் | கைவிரைவு . |
| கைவேல் | கைவிடாவேல் ; கப்பணம் . |
| கைவேலை | கையால் செய்தது ; கைத்தொழில் திறம் ; கைத்தொழில் . |
| கைவைத்தல் | புகுதல் ; திருடுதல் ; கைவைத்துக் குரு புனிதமாக்குதல் ; அடித்தல் ; கற்பழித்தல் . |
| கைனி | அத்தநாள் ; கைம்பெண் . |
| கொ | ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஒ) . |
| கொக்கட்டி | குறுகி வளைந்த பனங்கிழங்கு . |
| கொக்கரி | முழக்கம் ; வாத்தியவகை . |
| கொக்கரித்தல் | ஆரவாரித்தல் ; கோழி முதலியன கூவுதல் . |
| கைவட்டணை | கையாற் செய்யும் அபிநயம் . |
| கைவட்டி | சிறிய ஓலைப்பெட்டி . |
| கைவண்டி | கையால் இழுக்கும் வண்டி . |
| கைவந்தவன் | தொழிலிற் பழகித் தேர்ச்சியடைந்தவன் . |
| கைவந்தி | தோளின்கீழாகக் கையில் அணியும ஓர் அணி . |
| கைவரிசை | திறமை ; கொடை ; சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை . |
| கைவருதல் | கைகூடுதல் ; ஒருங்கே நிகழ்தல் ; தேர்ச்சி பெறுதல் ; பழக்கம் ; ஒன்றைச் செய்யக் கையெழுதல் . |
| கைவரை | காண்க :கைரேகை . |
| கைவல்யம் | காண்க : கைவல்லியம் . |
| கைவல்லபம் | தோள்வலிமை ; தொழில் செய்கைத்திறம் . |
| கைவல்லியம் | ஒருமைத் தன்மை ; தனிமை ; வீடுபேறு ; கைகூடுகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| கைவலச்செல்வன் | அருகன் . |
| கைவலம் | வீடுபேறு . |
| கைவலிதல் | கைகடந்துபோதல் . |
| கைவலை | சிறுவலை . |
| கைவழக்கம் | கொடைக்குணம் ; கோயிலில் பூசகர் முதலியோர்க்கு உரிய உரிமை ; தொழிலின் திறமை ; ஈமக்கடன் ஆற்றிய பின்பு குடிமக்கள் ஐவர்க்கும் கொடுக்கும் பணம் முதலியன . |
| கைவழங்குதல் | கொடுத்தல் ; கையடித்து உறுதி கூறுதல் . |
| கைவழி | யாழ் ; கைவசமாக அனுப்பிய பொருள் ; ஒற்றையடிப்பாதை ; சிறு கிளையாறு . |
| கைவளம் | கைராசி ; கைப்பொருள் ; செழுமை ; கைத்தொழிலின் திறம் . |
| கைவளர்தல் | போற்றப்பட்டு வளர்தல் ; பழக்கமுறுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 380 | 381 | 382 | 383 | 384 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைவட்டணை முதல் - கொக்கரித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கைராசி, கையால், கையை, காண்க, கைத்தொழில், சிறு, கையில், திறம், கைவேலை, நிலைமை, முதலியன, திறமை, கைவல்லியம், உரிமை, தன்மை, வீடுபேறு, தொழில், நிலை, ஆளுதற்குரிய, பொருளறுதல், தாழதல், பொருளின்றி, கைத்திறம், கைவிரைவு, அடைப்பை, செய்யும்

