தமிழ் - தமிழ் அகரமுதலி - கூட்டு முதல் - கூடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கூடம்பில் | சுரைக்கொடி . |
| கூடயந்திரம் | பொறி ; வலை . |
| கூடரணம் | திரிபுரம் . |
| கூடல் | மதுரை ; பொருந்துகை ; புணர்தல் ; ஆறுகள் கூடுமிடம் ; தேடல் ; தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி: அடர்த்தியான தோப்பு . |
| கூடல் வளைத்தல் | மகளிர் விளையாட்டில் ஒன்று . |
| கூடலர் | கூடார் , பகைவர் . |
| கூடலித்தல் | கிளர்ந்து வளைதல் . |
| கூடலிழைத்தல் | தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தம் அறியத் தரையில் சுழி வரைதல் . |
| கூடவற்சை | தவளை . |
| கூடற்கோமான் | பாண்டியன் . |
| கூடற்றெய்வம் | கூடற்சுழிக்குரிய தேவதை . |
| கூடன் | காண்க : கூடசன் . |
| கூடாக்கு | புகையிலை . |
| கூடாகாரம் | மேல்வீடு ; கூடம் ; நிலவறை . |
| கூடாங்கம் | ஆமை . |
| கூடாதார் | பகைவர் . |
| கூடாநட்பு | அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு , தீயோர் நட்பு . |
| கூடார் | காண்க : கூடாதார் . |
| கூடாரம் | சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் . |
| கூடாரவண்டி | மேற்கூடுள்ள வண்டி . |
| கூடாவொழுக்கம் | தகாத ஒழுக்கம் . |
| கூடியவரை | ஆனமட்டும் . |
| கூடியற்பெயர் | கூட்டத்தைக் குறிக்கும் பெயர் . |
| கூடிலி | புலால் உண்போன் . |
| கூடிவருதல் | சேர்ந்துவருதல் ; கைகூடிவருதல் ; மிகுதியாதல் . |
| கூடினரைப்பிரித்தல் | பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை . |
| கூடு | உடல் ; பறவைக்கூடு ; விலங்கின் கூடு ; நெற்கூடு ; உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது ; மைக்கூடு ; வண்டிக்கூடு ; சாட்சிக்கூடு ; கூடாரம் ; மீன்பறி . |
| கூட்டு | ஒரினமான பொருள் ; நட்பு ; துணை ; தொடர்பு ; கூட்டு வாணிகம் ; திரள் ; ஒப்புமை ; கலப்பு ; கூட்டுக்கறி ; நீரால் பதப்பட்ட மண்திரள் ; வண்டிச் சக்கரம் முதலியவற்றிற்கு இடும் மை ; கொள்ளைப் பொருள் ; திறை ; அரையிற் கட்டும் துகிலாகிய அரைஞாண் . |
| கூட்டுக்கறி | கூட்டமுது , காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு . |
| கூட்டுக்காரன் | கூட்டாளி . |
| கூட்டுக்கால் | பாய்ந்தோடுகை . |
| கூட்டுக்குடும்பம் | பிரிவினையாகாத குடும்பம் . |
| கூட்டுண்ணுதல் | கூடி உண்ணுதல் ; முற்றம் துய்த்தல் ; திறைகொள்ளுதல் ; கலவி செய்தல் . |
| கூட்டுதல் | ஒன்றுசேர்த்தல் ; இணைத்தல் ; கலத்தல் ; அதிகப்படுத்தல் ; சபை கூட்டுதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; உபதேசித்தல் . |
| கூட்டுப்பயிர் | பிறருடன் சேர்ந்து பயிர்செய்தல் . |
| கூட்டுமா | கறியற் சேர்க்கும் மா . |
| கூட்டுமூட்டு | பலரும் கூடுகை ; சதியாலோசனைக் கூட்டம் ; பழிப்புரை . |
| கூட்டுவர்த்தகம் | பலர் கூடிச் செய்யும் வணிகம் . |
| கூட்டுவியாபாரம் | பலர் கூடிச் செய்யும் வணிகம் . |
| கூட்டுறவு | சேர்ந்து வாழும் வாழ்க்கை ; இணைந்த உறவு ; நெருங்கிய தொடர்பு ; நட்பு ; ஒற்றுமையாய் வேலைசெய்கை . |
| கூட்டுறவுச் சங்கம் | ஐக்கிய நாணயச் சங்கம் . |
| கூட்டெழுத்து | விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து ; பல எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து , தொடரெழுத்து . |
| கூட்டை | ஒரு கூத்துவகை . |
| கூட்டோடு | அடியோடு . |
| கூட | உடன் ; ஒருங்கு ; மேற்பட ; உம்மைப் பொருள் தரும் இடைச்சொல் . |
| கூடகம் | வஞ்சகம் . |
| கூடகாரகன் | வஞ்சகன் . |
| கூடகாரம் | மேன்மாடம் ; மாளிகையின் நெற்றிக் கூடு ; கூடம் . |
| கூடகாரன் | காண்க : கூடகாரகன் . |
| கூடசதுக்கம் | நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி . |
| கூடசதுர்த்தம் | நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி . |
| கூடசன் | கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன் , தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன் . |
| கூடசன்மலி | முன்னிலவு நிரம்பிய நரகவகை . |
| கூடசாரன் | அந்தரங்க தூதன் . |
| கூடசாலம் | ஏழு நரகத்துள் ஒன்று . |
| கூடணை | மயிற்றோகைக் கண் . |
| கூடத்தன் | பரப்பிரமம் ; முதன்மையானவன் ; ஆன்மா . |
| கூடபதம் | பாம்பு . |
| கூடபாதம் | பாம்பு . |
| கூடபாகலம் | யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ் சுரநோய் . |
| கூடம் | வீடு ; வீட்டின் கூடம் ; தாழ்வாரம் ; யானைச்சாலை ; மேலிடம் ; கோபுரம் ; தேவகோட்ட மன்றம் ; சம்மட்டி ; மலையினுச்சி ; அண்டகோளகை ; திரள் ; மறைவு ; பொய் ; வஞ்சகம: இசை வாராது ஓசை மழுங்கல் ; யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 364 | 365 | 366 | 367 | 368 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூட்டு முதல் - கூடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூடம், நட்பு, காண்க, கூடு, ஒன்று, பொருள், வரும், சங்கம், எழுத்து, கூடகாரகன், வணிகம், கூடிச், சேர்ந்து, பலர், நான்காமடியிலுள்ள, செய்யும், எழுத்துகள், பாடப்பெறுஞ், சித்திரகவி, பாம்பு, நிற்குமாறு, மறைந்து, யாவும், மூன்றடிகளுள்ளும், கூட்டுதல், கூட்டுக்கறி, தலைவி, கூடாதார், பிரிந்த, கூடசன், அவன், கூடார், பகைவர், கூடாரம், வீடு, கூடல், தொடர்பு, திரள், கூட்டு, தலைவனைப், வண்டிக்கூடு, நெற்கூடு, தரையில்

