முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குறிஞ்சியாழ்த்திறம் முதல் - குறுக்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குறிஞ்சியாழ்த்திறம் முதல் - குறுக்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குறுக்கம் | குறுகிய நிலை ; சுருக்கம் ; ஒருவகைப் புன்செய் நில அளவுவகை . |
| குறுக்கல் | குறைத்தல் ; நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் விகாரம் . |
| குறுக்களவு | குறுக்குத்தூரம் . |
| குறுக்கிடுதல் | இடையே செல்லுதல் ; பிறர் செயலில் தலையிடுதல்: தடையாக எதிர்ப்படுதல் . |
| குறுக்கீடு | குறுக்கிடுகை , தலையீடு . |
| குறுக்கு | நெடுமைக்கு மாறான அகலம் ; குறுக்களவு ; குறுமை ; மாறு ; சுருக்கம் ; இடுப்பு . |
| குறுக்குக்கேள்வி | வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்கும் கேள்வி ; ஒழுங்கற்ற கேள்வி: பேசுகையில் பிறன் ஒருவன் இடையில் கேட்கும் கேள்வி . |
| குறுக்குச்சட்டம் | குறுக்காகப் போடுஞ் சட்டம் ; கூரையின் குறுக்குக்கட்டை . |
| குறுக்குச்சுவர் | பாகஞ்செய்துகொண்ட மனையில் எல்லை குறித்தற்குக் குறுக்கே இடும் சுவர் . |
| குறுக்குதல் | குறுகப்பண்ணுதல் ; குறையச் செய்தல் ; சுருக்குதல் ; நெருங்கச் செய்தல் ; அண்மையாதல் . |
| குறுக்கடி | குறுக்குவழி ; குறுக்கே புகுந்து செய்யும் செயல் ; ஒழுங்கற்ற பேச்சு . |
| குறிஞ்சிலைக்கல் | ஈரக்கல் |
| குறிஞ்சிவேந்தன் | காண்க : குறிஞ்சிக்கிழவன் . |
| குறித்தல் | கருதுதல் ; தியானித்தல் ; வரையறுத்தல் ; கோடு வரைதல் ; குறித்துக்கொள்ளுதல் ; சுட்டுதல் ; பற்றுதல் ; இலக்குவைத்தல் ; அடைதல்: பாவித்தல் ; சொல்லுதல் ; முன்னறிவித்தல் ; ஊதியொலித்தல் . |
| குறித்தழைத்தல் | கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல் ; பாதுகாக்கும்படி அழைத்தல் : தேவதையைத் தோன்றும்படி அழைத்தல் . |
| குறித்து | நோக்கி . |
| குறிப்பறிதல் | நோக்கமறிதல் ; குறிப்பினாலறிதல் . |
| குறிப்பாளி | உய்த்துணர்பவன் . |
| குறிப்பிடம் | குறித்த இடம் ; சுருக்கம் ; கிறித்துபட்ட பாடுகளைக் காட்டும் படிமம் . |
| குறிப்பித்தல் | குறிப்பினால் நினைவூட்டுதல் . |
| குறிப்பு | அறிகுறி ; உட்கருத்து ; மனத்தால் உணரப்படுவது ; ஒன்பதுவகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை ; மன ஒருமை ; குறிப்புக் குறி ; சைகை ; கூரிய அறிவு ; சுருக்கம் ; ஓசை ; நிறம்முதலிய பொருளைக் குறிப்பது ; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ் சொல் ; அடையாளம் ; கைக்குறிப்பு ; ஏடு ; சாதகம் ; சிறப்பியல்பு ; இலக்கு . |
| குறிப்புச்சொல் | குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல் . |
| குறிப்புத்தொழில் | குறிப்பால் உணர்த்தப்படும் செயல் ; இங்கிதச் செய்கை . |
| குறிப்புநிலை | காண்க : குறிப்புச்சொல் . |
| குறிப்புப்பொருள் | குறிப்பால் உணர்த்தப்படும் பொருள் . |
| குறிப்புமொழி | காண்க : குறிப்புச்சொல் . |
| குறிப்புருவகம் | குறிப்பினாற் பெறப்படும் உருவகவணி . |
| குறிப்புவமை | குறிப்பால் உணரப்படும் உவமையணி . |
| குறிப்புவினை | பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை . |
| குறிப்புவினைமுற்று | பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை . |
| குறிப்புவினையாலணையும் பெயர் | முன்பு குறிப்பு வினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர் . |
| குறிப்புவினையெச்சம் | தொழில் காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம் . |
| குறிப்பெச்சம் | கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள் . |
| குறிப்பெழுத்து | சுருக்கெழுத்து . |
| குறிப்பெழுதுதல் | பொருட்குறிப்பு எழுதுதல் ; சாதகக் குறிப்பெழுதுதல் ; பேரேட்டில் எழுதுவதற்குமுன் கணக்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதுதல் . |
| குறிப்பேடு | அன்றாட வரவுசெலவுக் கணக்குகளைப் பதியும் புத்தகம் ; நினைவுக் குறிப்புப் புத்தகம் , நாட்குறிப்பு . |
| குறிப்போலை | செயல் குறித்திருக்கு மோலை ; பிறப்புக் குறிப்பு எழுதிய ஓலை . |
| குறிபார்த்தல் | நிமித்தம் பார்த்தல் ; நன்மை தீமைகளைக் குறிப்பார்த்துச் சொல்லுதல் ; இலக்குப் பார்த்தல் . |
| குறிபிழைத்தல் | குறிதவறுதல் ; மழைக்குறி தோன்றியும் மழை பெய்யாது விடுதல் . |
| குறிபோடுதல் | அடையாளம் இடுதல் ; எண்ணுதற்குக் கோடு இடுதல் . |
| குறியிடம் | தலைவனும் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம் . |
| குறியீடு | குறியாக இட்டாளும் பெயர் . |
| குறியெதிர்ப்பை | அளவுகுறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள் . |
| குறியோன் | அகத்தியன் ; குள்ளன் . |
| குறில் | குற்றெழுத்து ; குறுமை . |
| குறிஞ்சியாழ்த்திறம் | எண்வகைத்தாய்க் குறைந்த சுரங்கள் கொண்ட குறிஞ்சிப்பண் . |
| குறிஞ்சிலி | காதில் அணிதற்குரிய பூவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 359 | 360 | 361 | 362 | 363 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சியாழ்த்திறம் முதல் - குறுக்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், காட்டும், சுருக்கம், காண்க, குறிப்பாகக், குறிப்பு, செயல், பெயர், சொல், தொழில், குறிப்புச்சொல், குறிப்பால், கேள்வி, குணந், அடியாகத், வினை, புத்தகம், பார்த்தல், இடுதல், குறிப்புப், எழுதுதல், காலத்தைக், சினை, குறிப்பெழுதுதல், தோன்றிக், குறிப்பினாற், குறுக்கே, செய்தல், ஒழுங்கற்ற, கேட்கும், குறுக்களவு, குறுமை, கோடு, சொல்லுதல், உணர்த்தப்படும், இடங், அடையாளம், இடம், அழைத்தல், குறித்த, காலஞ்

