தமிழ் - தமிழ் அகரமுதலி - அமிர்தம் முதல் - அமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அமுத்தம் | நெல்லி ; வச்சநாபி ; கையாயுதம் . |
| அமுதகடிகை | நற்செயல்களுக்குரிய நாழிகை . |
| அமுதகதிரோன் | சந்திரன் . |
| அமுதகம் | அமிர்தம் ; பாற்கடல் ; கொங்கை ; நீர் . |
| அமுதகிரணன் | காண்க : அமிர்தகிரணன் . |
| அமுதகுண்டம் | இரப்போர் கலம் . |
| அமுதகுண்டை | இரப்போர் கலம் . |
| அமுதகுலர் | இடையர் ; சான்றோர் . |
| அமுதங்கம் | காண்க : சதுரக்கள்ளி . |
| அமுதசம்பூதன் | சந்திரன் . |
| அமுதசருக்கரை | சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை . |
| அமுதசாரணி | வெள்வேல மரம் . |
| அமுதசுரபி | எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் . |
| அமுததரம் | மஞ்சிட்டிச் செடி . |
| அமுததாரணை | உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு . |
| அமுதப்பார்வை | இனிய நோக்கு . |
| அமுதபுட்பம் | சிறுகுறிஞ்சாக்கொடி . |
| அமுதம் | அமிர்தம் ; சோறு ; நீர் ; சுவை ; உப்பு ; தயிர் ; பூமிச்சருக்கரை ; காட்டுக்கொஞ்சி ; விந்து ; திரிபலை ; திரிகடுகம் ; வீடுபேறு . |
| அமுதர் | அழிவில்லாதவர் ; கடவுள் ; தேவர் ; இடையர் . |
| அமுதவல்லி | அமிர்தவல்லி ; திருமாலின் மகள் ; சீந்தில் . |
| அமுதவெழுத்து | மங்கல வெழுத்து ; அ , இ , உ , எ , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் என்பன . காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து . |
| அமுதவேணி | கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன் . |
| அமுதன் | அழிவில்லாதவன் , கடவுள் . |
| அமுதாசனர் | தேவர் . |
| அமுதாரி | பூனைக்காலி . |
| அமுது | அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் . |
| அமுதுகுத்துதல் | உறைமோர் ஊற்றுதல் . |
| அமுதுசெய்தல் | உண்ணுதல் . |
| அமுதுபடி | அரிசி . |
| அமுதுபடைத்தல் | உணவு பரிமாறுதல் . |
| அமுதுமண்டபம் | கோயில் மடைப்பள்ளி . |
| அமுதூட்டுதல் | பிள்ளைக்கு ஏழாமாதத்தில் சோறூட்டுதல் . |
| அமூர்த்தம் | உருவமின்மை , அருவநிலை . |
| அமூர்த்தன் | வடிவம் இல்லாத சிவன் . |
| அமூர்த்தி | வடிவம் இல்லாத சிவன் . |
| அமூலம் | காரணம் இல்லாதது . |
| அமேத்திய நாறி | ஒரு பூண்டு ; ஒரு மரம் ; பீநாறிச் சங்கு . |
| அமேத்தியம் | மலம் ; மூங்கில் . |
| அமேயம் | அளவிட முடியாதவன் . |
| அமை | அமைவு ; அழகு ; தினவு ; மூங்கில் ; நாணல் ; அமாவாசை ; சந்திரனுடைய பதினாறாங்கலை . |
| அமை | (வி) அமர்த்து ; பொருத்து . |
| அமிர்தம் | உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் . |
| அமிருதம் | உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் . |
| அமிர்தயோகம் | நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் . |
| அமிர்தர் | அமுதமுண்பவர் ; தேவர் . |
| அமிர்தவல்லி | சீந்திற்கொடி . |
| அமிர்தன் | தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன் . |
| அமிர்து | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிழ்து | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிர்தை | பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் . |
| அமிழ்த்தல் | ஆழச்செய்தல் . |
| அமிழ்தம் | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிழ்தல் | ஆழ்தல் ; தோய்தல் . |
| அமினா | காண்க : அமீனா . |
| அமீர் | முகமதியச் செல்வன் ; முகமதியத் தலைவன் . |
| அமீன் | பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் . |
| அமீனா | பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் . |
| அமுக்கடி | மந்தாரம் , மூட்டமாயிருத்தல் ; மக்கள் நெருக்கம் . |
| அமுக்கன் | மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் . |
| அமுக்கி | மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் . |
| அமுக்கிரா | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்கிரி | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்குரா | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்குதல் | அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் . |
| அமுங்குதல் | அழுந்துதல் ; அமர்தல் ; நெரிபடுதல் . |
| அமுசம் | சிறு செருப்படைப் பூண்டு ; அன்னப் பறவை . |
| அமுசு | ஒட்டடை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமிர்தம் முதல் - அமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அலுவலன், அமிர்தம், உணவு, செடி, நஞ்சு, நீர், வீடுபேறு, தேவர், சிவன், பூண்டு, அமிர், அமுக்கனங்கிழங்கு, செய்யும், இனிமை, அழிவின்மை, உரிமையியல், வசூல், அமீனா, பாதரசம், பணம், நீதிமன்றக், மறைவாகக், உறக்கத்தில், அமுக்கும், எனப்படும், நோய், கபடன், செய்வோன், நிறைவேற்றுகின்ற, அந்தரங்க, மருந்து, காரியம், கட்டளைகளை, மிஞ்சியவை, கடவுள், அமிர்தவல்லி, சீந்தில், வடிவம், பாண்டம், மரம், சந்திரன், இரப்போர், கலம், இடையர், இல்லாத, மூங்கில், நெல்லி, இரவாது, வந்த, பொருள், பொருள்களில், வேள்விப், ஆவின்பால், நெய், மோர், தேவருணவு, போக்கும்

