தமிழ் - தமிழ் அகரமுதலி - குருவிவாலான் முதல் - குலமீன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குலஞ்செப்புதல் | தன் குலப்பெருமை கூறுதல் . |
| குலஞ்செய்தல் | குலத்தைத் தோற்றுவித்தல் . |
| குலடை | கற்பொழுக்கங் கெட்டவள் . |
| குலத்தம் | கொள் . |
| குலதருமம் | குல ஒழுக்கம் . |
| குலதிலகன் | குலத்தில் சிறந்து விளங்குபவன் . |
| குலதெய்வம் | ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் . |
| குலதேவதை | ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் . |
| குலந்தெரித்தல் | குடிப்பழி தூற்றுதல் . |
| குலநாசகம் | ஒட்டகம் . |
| குலப்பம் | செம்புமணல் ; கக்குவான் . |
| குலப்பரத்தை | ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் ; கணிகையர் குலப்பெண் . |
| குலப்பெயர் | குலம்பற்றி வழங்கும் பெயர் . |
| குலபதி | குலத்துக்குத் தலைவன் ; பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன் . |
| குலம் | நற்குடிப் பிறப்பு ; குடி ; உயர்குலம் ; சாதி ; மகன் ; இனம் ; குழு ; கூட்டம் ; வீடு ; அரண்மனை ; கோயில் ; இரேவதி நட்சத்திரம் ; நன்மை ; அழகு ; மலை ; மூங்கில் . |
| குலம்பா | பேய்ச்சுரை . |
| குலம்புகுந்தவன் | சாதி மாறினவன் . |
| குலம்பெயர்தல் | மாறுபாடடைதல் . |
| குலமகள் | நற்குடியில் பிறந்தவள் , கற்புள்ளவள் . |
| குலமகன் | நற்குடியில் பிறந்தவன் ; குலத்தில் பிறந்த மகன் . |
| குலமணி | சாதி ரத்தினம் ; ஒரு குலத்தில் புகழ் மிக்கவன் . |
| குலமதம் | குடிப்பிறப்பால் தோன்றுஞ் செருக்கு . |
| குலமரியாதை | குலத்தின் ஒழுங்கு . |
| குலமீன் | அருந்ததி , வடமீன் . |
| குலசேகரன்படி | திருமால்கோயிலின் கருவறை வாயிற்படி . |
| குருவிவாலான் | பெருநெல்வகை . |
| குருவுக்காதி | பச்சைக் கருப்பூரம் . |
| குருள் | மகளிர் தலைமயிர் ; நெற்றியில் மயிர்ச்சுருள் . |
| குருள்தல் | சுருளுதல் . |
| குருளுதல் | சுருளுதல் . |
| குருளை | இளமை ; ஒருசார் விலங்கின் குட்டி ; அதாவது நரி ; நாய் ; பன்றி ; மான் ; புலி ; முசு ; முயல் ; யாளி இவற்றின் குட்டி ; பாம்பின் குட்டி ; குழந்தை ; ஆமை . |
| குரூஉப்புகை | மணமுள்ள புகை . |
| குரூபம் | வேறுபட்ட உருவம் . |
| குரூபி | விகாரமுள்ளவன்(ள்) . |
| குரூரம் | கொடுமை . |
| குரூரவதை | சித்திரவதை . |
| குரை | ஒலி ; பெருமை ; பரப்பு ; அசைநிலை ; இசைநிறை ; குதிரை . |
| குரைத்தல் | ஆரவாரித்தல் ; குலைத்தல் . |
| குரைப்பு | ஓசை . |
| குரைமுகன் | நாய் . |
| குரைய | ஓர் அசைநிலை . |
| குரோசம் | இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு ; கூப்பிடு தொலைவு . |
| குரோட்டம் | நரி |
| குரோட்டா | நரி |
| குரோட்டு | பன்றி |
| குரோடம் | பன்றி |
| குரோதம் | பகைமை ; கோபம் ; செற்றம் . |
| குரோதன் | கோபமுள்ளவன் ; வீரபத்திரன் . |
| குரோதன | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தொன்பதாம் ஆண்டு . |
| குரோதி | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தெட்டாம் ஆண்டு ; கோபி ; பகைவன் . |
| குல்யன் | மந்திரி . |
| குல்லகம் | வறுமை . |
| குல்லம் | முறம் . |
| குல்லரி | இலந்தைமரம் . |
| குல்லா | தலைக்குல்லா ; படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு ; வெளிப்படையான . |
| குல்லாய் | தலைக்குல்லா . |
| குல்லிரி | வீராவேசவொலி . |
| குல்லை | காட்டுத்துள்சி ; துளசி ; வெட்சி ; கஞ்சாச்செடி . |
| குல்வலி | காண்க : குல்லரி . |
| குலக்காய் | சாதிக்காய் . |
| குலக்கு | குணுக்கு ; குலை ; இலை ; பூ ; பழம் முதலியவற்றின் சிறுகொத்து . |
| குலக்கொடி | காண்க : குலமகள் . |
| குலக்கொழுந்து | குலத்தை விளங்கச்செய்பவன் . |
| குலகன்னி | கற்புடையவள் . |
| குலகாயம் | பேய்ப்புடல் ; குலவொழுக்கம் ; நத்தை . |
| குலகாலம் | நிலக்கடம்புப் பூடு . |
| குலகாலன் | குலத்தைக் கெடுப்பவன் . |
| குலகிரி | எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள் . |
| குலகுரு | வமிசகுரு . |
| குலங்கூறுதல் | நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் ; மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல் . |
| குலங்கெட்டவன் | சாதி ஒழுக்கந் தவறியவன் . |
| குலச்சுமால் | களத்தில் விற்கும் தானியம் . |
| குலசன் | ஒழுக்கமுடையவன் ; குலம் வழுவாத பெற்றோர்க்குப் பிறந்தவன் , நற்குலத்தான் . |
| குலசேகரன் | குலத்தில் சிறந்தோன் ; குலசேகரப் பெருமாள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 352 | 353 | 354 | 355 | 356 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குருவிவாலான் முதல் - குலமீன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குலத்தில், சாதி, பன்றி, குட்டி, அறுபதாண்டுக், தொலைவு, அசைநிலை, கணக்கில், ஆண்டு, குலத்தை, காண்க, தலைக்குல்லா, குல்லரி, நாய், சுருளுதல், தெய்வம், வழிபடும், வழிவழியாக, குலத்தார், குலம், மகன், பிறந்தவன், நற்குடியில், குலமகள், கூறுதல்

