முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கிங்கிலியன் முதல் - கிடங்காடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கிங்கிலியன் முதல் - கிடங்காடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கிட்டார் | பகைவர் . |
| கிட்டாலம் | செப்புப்பாத்திரவகை . |
| கிட்டி | இறுக்குங்கோல் ; கவரிறுக்கி ; கொல்லர் கருவி ; நுகமுளை ; சிறுவர் விளையாட்டுக் கருவியுள் ஒன்று ; கைத்தாளம் ; நாழிகை வட்டில் ; சின்னிச்செடி ; பன்றி ; தலையீற்றுப் பசு . |
| கிட்டிக்கயிறு | பூட்டுக்கயிறு . |
| கிட்டிக்கலப்பை | தேய்ந்த கலப்பை . |
| கிட்டிக்கிழங்கு | சின்னிக்கிழங்கு . |
| கிட்டிக்கொள்ளுதல் | நெருங்கிவிடுதல் ; நெருங்கி எதிர்த்தல் . |
| கிட்டிக்கோல் | கிட்டி , கைக்கிட்டி , இறுக்குங்கோல் . |
| கிட்டிகட்டுதல் | இறுக்குங்கோலிட்டு வருத்துதல் ; நெருக்கி வருத்துதல் . |
| கிட்டிணம் | கறுப்பு ; மான்தோல் . |
| கிட்டிபூட்டுதல் | கிட்டிக்கோல் பூட்டி வருத்துதல் ; எருதைப் பூட்ட நுகமுளை போடுதல் . |
| கிட்டிமுட்டி | மிக நெருக்கமாக . |
| கிட்டியடித்தல் | ஒருவகை விளையாட்டு ; வீணாய்ப் பொழுதுபோக்குதல் ; கிட்டிபூட்டுதல் . |
| கிட்டிரம் | நெருஞ்சிப் பூண்டு . |
| கிட்டினர் | சுற்றத்தார் , உறவினர் . |
| கிட்டினவுறவு | நெருங்கின சுற்றம் . |
| கிட்டினன் | திப்பிலி . |
| கிட்டுதல் | சமீபமாதல் ; உறவு நெருங்குதல் ; கிடைத்தல் ; பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் ; அணுகுதல் ; எதிர்த்தல் ; கட்டுதல் . |
| கிட்டுமானம் | அண்மை . |
| கிட | ஒரு நிகழ்கால இடைநிலை . |
| கிடக்கட்டும் | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கிடு | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கிடும் | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கை | படுக்கைநிலை ; படுக்கை ; படுக்குமிடம் ; பூமி ; பரப்பு ; இடம் ; உள்ளுறு பொருள் . |
| கிடகு | இருபத்துநான்கு விரல்கொண்ட முழஅளவு . |
| கிடங்கர் | அகழி ; கடல் . |
| கிடங்காடுதல் | சுடுகாட்டில் பிணத்தைச் சுற்றி வருதல் . |
| கிங்கிலியன் | காண்க : கங்கிரன் . |
| கிச்சடி | ஒருவகை உண்டி ; கறிவகை ; கூழ்வகை . |
| சிச்சலாட்டம் | தொல்லை . |
| கிச்சாட்டம் | தொல்லை . |
| கிச்சிலாட்டம் | தொல்லை . |
| கிச்சிலி | கொழிஞ்சி ; நாரத்தை ; கிச்சிலிக்கிழங்கு ; பூலாங்கிழங்கு . |
| கிச்சிலிக்கரணை | காட்டுமிளகு . |
| கிச்சிலிக்கிழங்கு | ஒரு மணந்தரும் கிழங்கு . |
| கிச்சு | நெருப்பு . |
| கிச்சுக்கிச்சுமூட்டுதல் | கூச்சமுண்டாகும்படி பிறர் உறுப்புகளைத் தொடுதல் . |
| கிச்சுக்கிச்செனல் | ஒர் ஒலிக்குறிப்பு . |
| கிசம் | தளிர் . |
| கிசலம் | தளிர் . |
| கிசலயம் | தளிர் . |
| கிசலை | தளிர் . |
| கிசில் | ஒருவகைப் பிசின் ; கீல் . |
| கிசுகிசெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிஞ்சப்பண்ணி | நாயுருவிச்செடி . |
| கிஞ்சம் | சிறிது ; சிறுமை ; புளிமாமரம் ; புளி . |
| கிஞ்சல் | சுருக்கம் . |
| கிஞ்சன் | ஏழை , வறிஞன் . |
| கிஞ்சனன் | ஏழை , வறிஞன் . |
| கிஞ்சி | வேப்பமரம் . |
| கிஞ்சிக்கினம் | காண்க : கிஞ்சிஞ்ஞம் . |
| கிஞ்சிக்கினன் | காண்க : கிஞ்சிஞ்ஞன் . |
| கிஞ்சிஞ்ஞத்துவம் | சிற்றறிவுடைமை . |
| கிஞ்சிஞ்ஞதை | சிற்றறிவுடையவன் தன்மை . |
| கிஞ்சிஞ்ஞம் | சிற்றுணர்வு . |
| கிஞ்சிஞ்ஞன் | சிற்றறிவினன் ; சீவான்மா . |
| கிஞ்சித்தாகப் பேசுதல் | இழித்துக் கூறுதல் . |
| கிஞ்சித்து | கொஞ்சம் ; சிறுமை ; புளிமாமரம் . |
| கிஞ்சித்தேனும் | சிறிதாயினும் . |
| கிஞ்சிதம் | சிறுமை ; கொஞ்சம் . |
| கிஞ்சில் | கொஞ்சம் ; சிறிது . |
| கிஞ்சு | சிறிதான ; முதலை . |
| கிஞ்சுகம் | முண்முருக்கமரம் , கலியாணமுருக்கு வகை ; பலாசுமரம் ; சிவப்பு ; கிளி ; அசுணம் . |
| கிஞ்சுகி | பலாசமரம் ; முண்முருக்கமரம் . |
| கிஞ்சுமாரம் | முதலை . |
| கிட்ட | அருகே ; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு . |
| கிட்டக்கல் | இரும்புத்துரிசு ; முருக வெந்துள்ள செங்கல் . |
| கிட்டங்கி | பண்டசாலை , கிடங்கு . |
| கிட்டடி | பக்கம் , அண்மை . |
| கிட்டத்தட்ட | ஏறக்குறைய . |
| கிட்டப்பார்வை | அண்மையிலுள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம் . |
| கிட்டம் | அண்மை ; உலோகக்கட்டி ; இரும்பு முதலியவற்றின் துரு ; வண்டல் ; இறுக்கம் ; சேறு முதலியவற்றின் ஏடு ; கடையப்படாத மணியிலுள்ள கரடு . |
| கிட்டம்பிடித்தல் | உலர்தல் . |
| கிட்டமுட்ட | ஏறக்குறைய ; அருகில் . |
| கிட்டலர் | பகைவர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 322 | 323 | 324 | 325 | 326 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிங்கிலியன் முதல் - கிடங்காடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தளிர், புறக்கணிப்புக், என்னும், தள்ளு, குறிப்பு, தொல்லை, கொஞ்சம், சிறுமை, அதைத், காண்க, வருத்துதல், அண்மை, கிஞ்சிஞ்ஞன், கிஞ்சிஞ்ஞம், வறிஞன், கிட்டி, முண்முருக்கமரம், முதலியவற்றின், ஏறக்குறைய, வேற்றுமைக்கும், புளிமாமரம், முதலை, சிறிது, கிட்டிக்கோல், கிட்டிபூட்டுதல், ஒருவகை, பகைவர், எதிர்த்தல், நுகமுளை, ஒலிக்குறிப்பு, கிச்சிலிக்கிழங்கு, இறுக்குங்கோல்

